https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, June 5, 2019

தேசிய கல்விக் கொள்கை 2019


தேசிய கல்விக் கொள்கை 2019
                                 -ஆர். பட்டாபிராமன்
தேசிய கல்விக் கொள்கை 2019  ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டம்  தமிழகத்திலும் இந்தி அல்லாத மாநிலங்களிலும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மனிதவளமேம்பாட்டு அமைச்சகமோ/ அறிக்கை குழுவோ சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நடந்துகொண்டிருக்கவேண்டும். அது முதலில் கொள்கை அறிக்கையை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒரியா போன்ற சில முக்கிய மொழிகளிலாவது வெளியிட்டிருக்கவேண்டும்.
உயர் மொழிபெயர்ப்பு  ஆற்றல்- தொழில்நுட்பம் எனும் இலட்சியம் குறித்து பேசும் கொள்கை அறிவிப்பால் இந்த 484 பக்கங்களைக் கூட இந்திய மொழிகள் சிலவற்றில் மொழிபெயர்த்து விவாத ஜனநாயகத்தை மேம்படுத்தமுடியாமல் போனது ஆரோக்கியமானதல்ல.  அறிக்கை பேசும் இந்திய மொழிகளின் சமத்துவத்தை  அறிக்கை வெளியிடுவதில் கூட செய்யமுன்வராதது ஏன் என்பது  கேள்விக்குரிய ஒன்றே. A multilingual India is better educated and also better nationally integrated என மல்ட்டி லிங்குவலிசம் என பேசுவதை செயலில் அறிக்கை காட்டியிருந்தால்  விவாதம் கூடுதல் ஆரோக்கியமாக நடக்க வழியாக அமைந்திருக்கும். அதில் விவாதிப்பதற்கு பல அம்சங்கள் இருக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்கமுடியும்.
அறிக்கை நான்கு பகுதிகளாக  23 அத்தியாயங்களில்   பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் என்கிற அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. கல்வி பின்புலத்தில் செழுமையான அனுபவம் கொண்டவர்கள் விரிவாக அறிக்கை குறித்து ஆரோக்கியமான விவாதங்களை தர இயலும். சாதாரண வாசகன் என்கிற வகையில் அறிக்கையை படித்தபோது  எனக்கு தோன்றிய சில முக்கிய விவாதப்புள்ளிகளை தொகுத்துள்ளேன். பிற்சேர்க்கை என்பதில்தான் நிதிஆதார விஷயங்கள் பேசப்படுகின்றன.
முதல்பகுதி 197 பக்கங்கள் 8 அத்தியாயங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது. செகண்டரி கல்வி குறித்து ( 12வது வரை) விரிவாக விவாதிக்கிறது.  முதல் வாசிப்பில எனக்கு மனதில் பட்ட சில குறிப்புகள் இங்கு தரப்படுகிறது.  அறிக்கையை வாசிக்க முடியாதவர்க்கு எளிய  (ஆனால் முழுமையற்ற) வகையில் உதவலாம் என்பதே எண்ணம்.
அறிக்கை தனது பார்வை தீர்க்கமாக  இந்திய மய்யப்பட்ட கல்விமுறை என்பதை முன்வைக்கிறது.  India Centered என்பதற்கு என்ன விளக்கம் என்பது நேரிடையாக சொல்லப்படவில்லை. பதிலாக இந்தியாவின் பண்டைய புலமையாளர்கள் சிலர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களது சிந்தனைகளை கல்விப்புலத்திற்கு கொணர்தல் என நாம் புரிந்துகொள்ளலாம்..
இந்த 10  2 முறை வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இதில் மாற்றம் என சொல்லப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் பாலர் பருவம்,  3 ஆண்டுகள் ஆரம்பகல்வி 3,4,5 கிரேடுகள், 3 ஆண்டுகள் 6,7,8  என நடுநிலை, 9,10,11,12  என்பது செகண்டரி. ஹையர் செகண்டரி என ஏதும் இனி இருக்காது. அடுத்து உயர்கல்விதான்.  உயர்கல்வி பாகம் 2ல் விவாதிக்கப்பட்டுள்ளது.
 கற்றல் என்பதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் விவாதிக்கப்பட்டுள்ளது. எழுத, படிக்க, கணிதம், படைப்பாளுமைத்திறன் என  உயர் விருப்பங்கள் முன்வைக்கப்படுள்ளன. மாணவர்களின் ஆரோக்கியம், சத்துணவு பேசப்படுகிறது. ஆசிரியர் காலியிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டியதன் அவசியம் சொல்லப்பட்டுள்ளது.. காலை உணவாக வாழைப்பழம் பால் என சொல்கிறது அறிக்கை.
2025க்குள் 3-6 வயது குழந்தைகள்  அனைவருக்கும் இலவச, உயர்தர கல்வியும் காப்பும் என அறிவித்துள்ளனர். இதை உரிமையாக RTE Act ல் சேர்க்கப்படும் எனவும் அறிக்கை சொல்கிறது. மொழி வாரம், கணித வாரங்கள் அனிசரித்தல், மொழி மேளா, கணித மேளா, எழுத்தாளர்கள், கணிதமேதைகளின் கொண்டாட்டங்கள் அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. அறிக்கை பேசும் இலக்குகள் என  பார்த்தால் கீழ்கண்டவற்றை  மேலும் சொல்லமுடியும்.
2030க்குள் அனைவருக்கும் இலவச கட்டாய தரமான கல்வி
30 மாணவர்க்கு ஓராசிரியர்
9 வது முதல் 12வது வரை   (14 வயது முதல் 18 வரை) இலவச கல்வியை RET சட்ட சேர்க்கையாக்குதல்
பெண் மாணவிகளுக்கு பள்ளி சூழலில் கண்ணியமான பாதுகாப்பு
யோகா, இசை, விளையாட்டு, கைத்தொழில், கலை, ஓவியம் . மரவேலை, தோட்டவேலை என விருப்பப்படி தேர்ந்தெடுக்க வாய்ப்பு
கலைப்படிப்பு, அறிவியல் என வேறுபாடுகள் இராது.
தற்காலிக அன்றாட நிகழ்வுகளை அப்டேட் செய்திடும் சூழல்
மனப்பாட முறையிலிருந்து வெளியேறுதல்
  பன்மொழி கற்றல் : அத்தியாயம் 4ல் பன்மொழி கற்றல் பேசப்படுகிறது.  வகுப்பு 5ல் இன்னும் போனால் 8 வரை தாய்மொழியில் பயிற்சி இருக்கலாம். இருமொழி உரையாடல்களை வகுப்பறைகள் கொண்டிருக்கவேண்டும். முரண்பாடுள்ள பகுதி என்பதால்  மும்மொழி, பன்மொழி எனப்பேசப்படும் பகுதிகள் முழுமையாக அதன் ஆங்கில வாசகங்கள்  அப்படியே கீழே தரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எவரேனும் ஆங்கிலப்பகுதியை மாற்றித் தருவர் என நம்புகிறேன்.
சமஸ்கிருதம் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. 54 சதம் இந்தி மொழி பேசுபவர்- ஆங்கிலம் அறிந்தவர் 14 சதம்  (அதுவும் மேல்தட்டு) என சொல்லப்படுகிறது.  இதனை கொண்டுகூட்டி பொருள்கொண்டால் ஆங்கிலம் வேண்டும் என்கிற தமிழர்களை எலிட்டிஸ்ட்கள் என பொருள்கொள்ள நேரும்.
 இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் எனப் பேசுவது செயலுக்கு வரவேண்டும் , நம்பிக்கை உருவாக்கவேண்டும் எனில் இந்திப் பகுதிகளில் பாடத்திட்டத்தில் தென்னிந்திய மொழி ஒன்றை கட்டாயப்படுத்தி அங்கு எதிர்ப்பு வராமல் ஏற்கப்படுகிறதா என்ற சோதனை நடத்தப்படவேண்டும். அவர்களுக்கும்  Integration of India  என்பதில் பொறுப்பு இருக்கிறது என முன்மாதிரியாக நடந்து காட்டவேண்டும்.
அனைத்து மாநிலங்களும் திருக்குறள் போன்ற ஒன்றிற்கு கற்றலில் முக்கியத்துவம் தரும் பிரகடனம்- அமுலாக்கம்  நடைபெறவேண்டும். அசுர அதிகாரம் கொண்டவர்கள்- ஆகவே விஞ்சி விடுவார்கள் என்ற அச்சம் இந்தி அல்லாத பகுதியினர் மத்தியில் அகற்றப்படவேண்டும். நீ வந்து பொது நீரோட்டத்தில் இணை என மட்டும் பேசாமல், உனது செம்மொழியும் இந்தியர் அனவருக்கும் உகந்ததே என்கிற எண்ணமும் இந்திய மாநிலங்களின் பொதுப்புத்தியில் சேரும்போது இங்கு இந்தி  என்பது குறித்து நிலவும் உளவியல் சிக்கலும் விடுபடலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பாராளுமன்ற சட்டமன்ற வாயில்களில்  பள்ளிக்கூட வாயில்களில் தமிழிலும் அவரவர் மொழியிலும் பொறிக்கப்பட்டால் அது கூட நல்லிணக்கத்தை மேம்படுத்துமே..
இந்தி அல்லாத பகுதியினர் தங்கள் மொழியிலிருந்து இந்தி மொழிக்கு ஏராள மொழிபெயர்ப்புகளை செய்து தங்கள் கலாச்சாரமேன்மை, பாரம்பரியம், அறிவு வளம் என்பதுடன் பெரும் மார்க்கெட்டையும் பிடிக்கலாம். தமிழர்களுக்கு இந்தியா எனும் பெரும் சந்தையும், உலக சந்தையும்  வேண்டாம் என மறுப்பது பொருத்தமானதாக இருக்குமா என்பது சிந்தனைக்குரிய ஒன்றல்லவா? அறிக்கை சங்க இலக்கியங்கள் எனும் கிளாசிக் மட்டுமே பேசுகிறது. தமிழர்  தங்கள் பல்துறை நாயகர்கள் அனைவரையும் பிறமொழிகளுக்கு அறிமுகம் செய்ய திட்டமிடுவதும் அவசியமாகிறது.  அதுவும் இருமொழி bilingual   ஆக்கங்களாக வந்தால் தமிழ் மீது மரியாதை கூடும். ஆனால் தமிழர்கள் இதற்கு பெரும் உழைப்பை நல்கவேண்டும். அந்த உழைப்பாளர்களுக்கு பிறமொழி பாண்டித்தியம் வேண்டும். தமிழ் பணக்கார புரவலர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுபினர்களும் நல்லாசியைத்தரவேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சொல்லி ஆண்டவர்கள் ஏராளம் செய்திருக்கலாம் என்கிற விமர்சனம் மட்டும் இதற்கு போதாது. இனி செய்யவேண்டியதென்ன- செய்வோமா என்கிற முனைப்பு வேண்டும்.
இந்தியை கட்டாயப்படுத்தாதே என்பதாலேயே தமிழர் இந்தியர் அல்லாதவர்  ஆவார் என  வரலாற்று பார்வையும் நியாய உணர்வும் கொண்டவர்  கருதப்போவதில்லை- ஏற்கப்போவதில்லை. இந்தியை திணித்தால் தமிழகம் தனியாகும் என்கிற அதீத பேச்சுகள் கவைக்கு உதவாத  சாரமற்ற வரலாற்று சூழல் அறியா வெற்று செண்டிமெண்ட்களாக அமையும்.  இதன் பொருள் இந்தியாவில் எவருக்கும் பிரிந்துபோகும் சுதந்திரம்  கருத்தளவில் கூடாது என்பதல்ல. ஆனால் அப்படிப்பட்ட பேச்சுக்களுக்கு நடைமுறை வடிவம் இன்றைய சூழலில் உருப்பெறாது என்பது என் எண்ணமாக இருக்கிறது.
மும்மொழி பற்றி பேசியுள்ள பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
4.5.3 Exposure to three or more languages in schools: To leverage the enhanced language-learning abilities of young children, all students from pre-school and Grade 1 onwards will be exposed to three or more languages with the aim of developing speaking proficiency and interaction, and the ability to recognise scripts and read basic text, in all three languages by Grade 3. In terms of writing, students will begin writing primarily in the medium of instruction until Grade 3, after which writing with additional scripts will also be introduced gradually.
A multilingual India is better educated and also better nationally integrated. only about 15% of the country speaks English, and this population almost entirely coincides with the economic elite (compared with, e.g. 54% of Indians who speak Hindi)
For true equity and inclusion in society, and in the education and employment systems across the country, this power structure of language must be stopped at the earliest. A major effort in this direction must be taken by the elite and the educated to make increased use of languages native to India, and give these languages the space and respect that they deserve..
An importance and prominence must be returned to Indian languages that has been lost in recent years
4.5.5 Continuation of the three language formula in schools: The three language formula, followed since the adoption of the National Policy on Education 1968, and endorsed in the National Policy on Education 1986/1992 as well as the NCF 2005, will be continued, keeping in mind the Constitutional provisions and aspirations of the people, regions, and the Union. However, because research now clearly shows that children pick up languages extremely quickly between the ages of 2 and 8, and moreover that multilingualism has great cognitive benefits to students, children will now be immersed in three languages early on, starting from the Foundational Stage onwards
4.5.6 The three-language formula will need to be implemented in its spirit throughout the country, promoting multilingual communicative abilities for a multilingual country. However, it must be better implemented in certain States, particularly Hindispeaking States; for purposes of national integration, schools in Hindispeaking areas should also offer and teach Indian languages from other parts of India. This would help raise the status of all Indian languages, the teachers of such languages, and the literature of such languages, and would open positions and increase opportunities for language teachers across the country; it would of course also truly expand horizons and enlarge the range of opportunities for graduating students.
4.5.13 Classical languages and literatures of India. The importance, relevance, and beauty of the classical languages and literature of India cannot be overlooked. Sanskrit, while also an important modern (Schedule 8) language, possesses a classical literature that is greater in volume than that of Latin and Greek put together, containing vast treasures of mathematics, philosophy, grammar, music, politics, medicine, architecture, metallurgy, drama, poetry, storytelling, and more, written by people of various religions as well as non-religious people, and by people from all walks of life and a wide range of socio-economic backgrounds over thousands of years.
India also has an extremely rich literature in other classical languages, including classical Tamil, as well as classical Telugu, Kannada, Malayalam, and Odia, in addition to Pali, Persian, and Prakrit; these classical languages and their literatures too must be preserved for their richness and for the pleasure and enrichment of posterity. When India becomes a fully developed country, the next generation will want to be able to partake in and be enriched as humans by India’s extensive and beautiful classical literature which contain great intellectual and cultural treasures
4.5.14 Considering the special importance of Sanskrit to the growth and development of Indian languages, and its unique contribution to knowledge development in as well as the cultural unity of the country, facilities for the study of Sanskrit, its scientific nature, and including samplings of diverse ancient and medieval writings in Sanskrit from a diverse set of authors (e.g. the plays of Kalidasa and Bhasa), will be made widely available in schools and higher educational institutions
Sanskrit will be offered at all levels of school and higher education as one of the optional languages on par with all Schedule 8 languages
4.5.15 Make available courses on all classical languages of India: In addition to Sanskrit, the teaching of other classical languages and literatures of India, including Tamil, Telugu, Kannada, Malayalam, Odia, Pali, Persian, and Prakrit, will also be widely available in schools, to ensure that these languages and literatures stay alive and vibrant, especially in States where they may be best taught and nurtured. Classical writings in these and other languages across India from diverse sets of authors will also be studied and suitably incorporated throughout the curriculum and in literature and writing classes to inspire students with the rich long-standing traditions and writings of India (e.g. Sangam poetry in classical Tamil, the Jataka tales in Pali, the works of Sarala Dasa in classical Odia, excepts from Raghavanka’s epic Harishchandra Kavya in Kannada, Amir Khusro’s works in Persian, and Kabir’s poems in Hindi, etc.)
2
எப்படி கற்பது என கற்பது குறித்து அறிக்கை பேசுகிறது. அறிவியல் மனப்பாங்குடன் துருவி ஆராயும் திறனுடன், விமர்சன திறனுடன் என அறிக்கை பரிந்துரைக்கிறது.
கலை , இசை ஆர்வம் வளர்க்கும் சூழல் உருவாக்கப்படவேண்டும். கர்நாடக இசை, இந்துஸ்தானி,  கிராமிய இசைச் செல்வம் அதன் நுட்பங்கள் அறிமுகப்படுத்திடவேண்டும். எழுத்தாற்றல், பேச்சாற்றல்- வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல்-  உடற்பயிற்சி, யோகா, தற்காப்பு கலைகள், விளையாட்டு பயிற்சி , நடனம் என பன்முக உடற்பயிற்சி சூழல் நிலவவேண்டும் என்கிறது அறிக்கை.
 சரியானதை செய்- பிறர் பாதிப்பு குறித்த விழிப்பு எனும் அறவழி, நன்னெறி சூழலுடன் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை , விவாத வழியில் இணக்கம் ஆகியவற்றை உள்வாங்கும் சூழல்-சமுக உணர்வு-  socio emotional learning  சூழல் என்பன குறித்தும் விரிவாக  அறிக்கை பேசுகிறது
இந்தியாவின் மகத்தான புதல்வர்களான மகாத்மா காந்தி, விவேகானந்தா, குருநானக், மகாவீர், புத்தர், அரவிந்தர், அம்பேத்கர், தாகூர், எம் எஸ் சுப்புலஷ்மி, சீனிவாச ராமானுஜம், சர் சி வி ராமன், ஹோமி பாபா மற்றும் பாரத்ரத்னா பெற்றவர்கள் பல்துறை நாயகர்களை கற்கும் சூழல்.. அதே போல் உலக நாயகர்கள் அயின்ஸ்டின், மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்றவரை கற்றல் அவசியம் என்கிறது அறிக்கை.
 இந்திய அறிவுத்துறை என அறிக்கை தனியாக பேசுகிறது. பெளதான்யர், பிங்கலர் ஆகியோர் கணித முன்னோடிகள். சூன்யம் என்பதை இந்தியர் கண்டனர். ஆர்யபட்டர், பிரம்மகுப்தா, பாஸ்கரா, மாதவா ஆகியோரிடமிருந்து கற்றல் தேவை. பாரம்பரிய ஆழ்புரிஉணர்வு பற்றி  அறிக்கை பேசுகிறது. அதன் ஆங்கில பகுதி தரப்பட்டுள்ளது.
Indian contributions to knowledge and the contexts in which they were discovered must be incorporated into the school curriculum not just for reasons of historical accuracy (which is sufficient reason on its own), but also for the often more holistic nature of the traditional Indian approach which leads to a deeper understanding, as well as for reasons of increased relatability due to geographic location, national pride, inspiration, and self-esteem
There are a number of excellent, truly scientific, and learned scholars in India who are experts in traditional knowledge systems of India in various subjects, including in tribal knowledge. We must get their help to accurately and scientifically bring the most enlightening and relevant aspects of Indian knowledge systems to the appropriate grade levels in the school curriculum.
A course on Indian knowledge systems (one such has already previously been designed by NCERT) will be available as an elective to students in secondary school who may wish to delve deeper into the subject.
தேசிய கல்வி சட்டகத்தில் லோகல் சாரங்களையும் வைத்து தரும் கல்விமுறை. NCRET போல்   SCERT வழிப்பட்டு பாடப்புத்தகங்கள் வடிவமைக்கவேண்டும் என்கிற பரிந்துரையிருக்கிறது.
After review, SCERTs may simply adopt NCERT textbook material, consisting of core national material, and supplementary material as chosen by the State, when no further modifications are necessary for the local context; if NCERT does not include certain material relevant in the local context, this may be added by SCERTs
 இன்று நிலவும் தேர்வுமுறை பெரும் சுமையாகவுள்ளது. பாடங்கள் தேர்வு சுதந்திரம் இல்லை. தேர்வு சீர்திருத்தம் பற்றி பேசும் பாரா தரப்பட்டுள்ளது.
Board Examinations will be significantly restructured to test only core concepts, skills, and higher order capacities in a range of required subjects and a range of elective subjects of the student’s choice. The goal will be to be flexible, like the curriculum, and to design the Board Examinations so that any student attending classes in their chosen subjects and making basic efforts in these classes will be able to comfortably pass their Board Examinations - without any necessity for coaching, cramming, or other major outside-of-usual-schoolwork efforts. Board Examinations will thus be used as a check for basic learning, skills, and analysis.
To eliminate the high stakes aspect of Board Examinations, all students will be allowed to take Board Examinations on up to two occasions during any given school year
 அத்தியாயம் 5 முழுமையாக ஆசிரியர்கள் தகுதி, தேர்வுமுறை, ஆசிரியர் பயிற்சி கூடங்களின் தரம், அவர்களது ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றை பேசுகிறது. ஆசிரியர் சங்கங்கள் முழுமையாக படித்துவிட்டு உரிய எதிர்வினை ஆற்றவேண்டும்.
அத்தியாயம் 6ல் அனைவருக்குமான  சமதையான கல்விமுறை பற்றி பேசப்படுகிறது.
 Unfortunately, prejudice and bias, based on gender, social and economic status, and special needs, among other factors, often affect people’s capacity to benefit from the education system, compounding social cleavages that hold the nation back from growth, innovation, and progress.
This Policy aims to shape an education system that benefits all of India’s children so that no child loses any opportunity to learn and excel because of the circumstances of birth or background
URGs in education can be broadly categorised into those having given gender identities (including women and transgender individuals), given sociocultural identities (such as SC, ST, OBCs, Muslims, migrant communities), given special needs (such as learning disabilities), and given socio-economic conditions (such as the urban poor). 
வறுமை, சமூகத்தடைகள்- வேறுபாடுகள், தங்களுக்கான பாடமுறை என உணராமை என்பன பேசப்பட்டுள்ளது. குறைவாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளவர்களை முன்னேற்ற வழிவகைகள் பேசப்படுகின்றன.
A Gender-Inclusion Fund will focus on supporting quality and equitable education for all girls. பெண் தலைமைத்துவம் பேசப்படுகிறது. Recruitment of teachers from SC and OBC communities சொல்லப்பட்டுள்ளது . பழங்குடி அறிவுத்துறையுடன் கூடிய ஆசிரியர் நியமனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Existing traditional or religious schools, such as madrasas, maktabs, gurukuls, pathshalas, and religious schools from the Hindu, Sikh, Jain, Buddhist and other traditions may be encouraged to preserve their traditions and pedagogical styles, but at the same time must be supported to also integrate the subject and learning areas prescribed by the National Curricular Framework into their curricula in order to reduce and eventually eliminate the underrepresentation of children from these schools in higher education மதவழி கல்வி நிறுவனங்கள் தங்களை தேசிய கல்வித்திட்டத்துடன் இணைத்துக்கொள்வது பற்றி பேசப்படுகிறது. இப்பகுதி குறித்து மதரஸா, பாடசாலா நிர்வாகத்தினர் கருத்து விவாத செழுமைக்கு உதவலாம்.
Ensuring participation of transgender children in school education. மூன்றாம் பாலினம் கல்விமுறையில் இணையவைக்கும் சூழல் பேசப்படுள்ளது நல்ல அம்சம்.
அத்தியாயம் 7 பள்ளி நிர்வாக மேம்பாடு சீர்திருத்தம் பற்றி பேசுகிறது. இதில் நிபுணத்துவம் உடையவர்கள் முழுமையாக விவாதிப்பர் என கருதுகிறேன். Schools will be organised into school complexes which will be the basic unit of governance and administration.
Ending the isolation of small schools through school complexes The grouping of schools across the country into school complexes will enable the sharing of resources across schools including subject teachers, sports, music and art teachers, counsellors, social workers and so on, and also material resources such as laboratories, libraries and so on. School complexes will be used for increased, improved resourcing of ICT equipment, musical instruments, sports equipment, sports fields etc. - all these resources would thus now be shared and therefore be available to a much larger number of students than is possible today.. School complexes will ensure availability of all resources -infrastructure, academic (e.g. libraries) and people (e.g. art and music teachers)
அத்தியாயம் 8 பள்ளிகள் ஒழுங்காற்று நிர்வாகம் மற்றும் தரப்படுத்தல் குறியீடுகள் பற்றி விவாதிக்கிறது. கொள்கை வடிவமைப்பு, இயக்குதல், ஒழுங்காற்றல் என சுயேட்சை அமைப்புகள் முறையில் கல்விப் பின்புலம் இயங்கும் என டெலிகாம், மின்சாரவாரியங்களில்  செய்யப்பட்டதுபோல் பேசுகின்றனர். ராஜ்ய சிக்‌ஷா ஆயோக் எனும் மாநில உயர் அமைப்பு பற்றி சொல்கின்றனர். கல்வியை வியாபாரமாக்காதே அது சேவை என பேசிக்கொண்டே வர்த்தக  கார்ப்பரேட் நடைமுறைகளை அறிக்கை முன்வைக்கிறது..
A single independent regulator for the school education sector:  NHERA- SSRA  என பெயரிட்டுள்ளனர். School Quality Assessment and Accreditation Framework: The SCERT will develop a School Quality Assessment and Accreditation Framework (SQAAF) for each State. This will be used by the SSRA for its regulation of schools based on a system of accreditation
Starting new schools: New private schools will have to obtain an LSS from SSRA - this will be on the basis of a self-declaration on the requirements and criteria set up by the SSRA
Private schools may be free to set their fees, but they shall not increase school fees arbitrarily. Reasonable increases that can stand public scrutiny can be made. தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய சுதந்திரம்  அனுமதிக்கப்பட்டுள்ளது.
 பள்ளிகள் இலாபத்திற்கல்ல (Schools must be not-for-profit) என்றும் சொல்லப்பட்டுள்ளது . இதை அவர்கள் எப்படி  நடைமுறையில் match  செய்வார்கள் என தெரியவில்லை. Under no circumstances will any such support to private schools be provided at the cost of reducing opportunities or support to the public school system, and mutual benefit and synergy will always be the key consideration என்கிற உறுதிமொழி மட்டும் தந்திருக்கிறார்கள்.
எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை பிற்சேர்க்கையில் இணைத்துள்ளனர். இங்குதான் நிதி ஆதாரம் பேசப்படுகிறது.
It needs to be noted that this Policy considers all financial support and spend on education as investment’, and not as ‘expenditure’. Clearly, monies spent on education are all investment into the future of our nation. ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் என்கிற கார்ப்பரேட் மொழி பேசப்பட்டுள்ளது.
Each year of education yields a return of around 6-12% to earnings of individuals. The ROI is particularly large for women and for disadvantaged groups: ROI for women are, on average, one percentage point more than those of men. Particularly for early childhood education, the returns are larger at about 13% on an average, and range from 7%-18%; this is due to the larger advantages gained by individuals with early childhood care and education (ECCE), both in terms of overall health as well as education as the inputs are in the early years of growth.
அரசின் கல்வி ஒதுக்கீடு  50 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட 6 சத ஜி டி பி என்பதை எட்டவே இல்லை. அதில் பாதி கூட வரவில்லை என்பதை அறிக்கை ஏற்கிறது Public expenditure on education in India was 2.7% of GDP in 2017-18. This was about 10% of the total government (Centre and States) spending (Economic Survey 2017-18). Public spending on education has never attained the 6% of GDP envisaged in the 1968 Policy, reiterated in the Policy of 1986, and which was further reaffirmed in the 1992 Programme of Action
 அடுத்த 10 ஆண்டுகளில் பொதுச் செலவில் இன்றுள்ள 10 சதம் என்பது 20 சதம் நோக்கி உயரும் என்பதே தெரிவிக்கப்பட்டுள்ளது. The Policy envisions significant increase in public investment in education. This would go up from the current 10% of overall public expenditure in education to 20%, over a 10-year period. This gradual increase will ensure that as all the actions of this Policy come on stream, adequate funding is made available, while giving the government room to plan and accommodate these increases
காலதாமத நிதி ஒதுக்கீடு, அதிலும் லீக்கேஜ் என்பன குறித்தும் பேசப்பட்டுள்ளது. The education system is afflicted by the same kind of maladies on this matter, as most other things in the country. This leads to leakage of funds, eventually depriving students of resources that should have been deployed for their benefit and development
Approach of the Policy to encourage not for-profit, public-spirited private funding in education என்கிற தனியார் முதலீட்டு தன்மை சொல்லப்படுகிறது. அனுபவம் இவ்வாறில்லை என்பதை அனைவரும் அறிவர்.
அறிக்கை கலாச்சார தேசியவாதம், குருகுலம்-அறிவியல் பார்வை, தேசிய கல்வி- லோகல் ஃப்ளேவர்- மதக்கல்வி, புராதன பெருமிதங்கள், உலகமய சூழலில் 21 ஆம் நூற்றாண்டை பிடித்தல், சர்வாம்ச வளர்ச்சி, யோகா- தோட்டக்கலை, கம்யூட்டர்  டிஜிட்டல் கல்விப்புலம் என கலவையாக கூட்டாஞ்சோறாக எதையும் விடக்கூடாது என அனைத்தையும் முன்வைக்கும் பேராசை கொண்டதாக இருக்கிறது.
 சுருக்கமாக ஆண்டுதிட்டம் அடிப்படையில் சமதையான முன்னேற்றம் நோக்கிய எளிய திட்டம் என இதை பார்க்கமுடியவில்லை.  அரசியல் சூழலுக்கு உகந்து  அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்கிற உளவியல் சிக்கல் அறிக்கையில் ஆங்காங்கே தென்படுகிறது . அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசுதல் என்பதில் உளமாற செயல்பட்டார்களா என்பதை கமிட்டியாளர்கள்தான் தெரிவிக்கவேண்டும்.        5-6-19                                                    

1 comment:

  1. புதிய கல்வியை பற்றி முன்னுரையாக புரிந்து கொள்ள உங்களது கட்டுரை பயன்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஆழமான கண்ணோட்டத்தையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். பிறகே இதனை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என நினைக்கிறேன். நன்றி தோழரே....ராமகிருஷ்ணன்

    ReplyDelete