https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, February 2, 2023

பட்ஜெட் 2023-24 கணக்குகள் ஊடே

 

பட்ஜெட் 2023-24

கணக்குகள் ஊடே

இந்தியாவின் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து முடித்தவுடனேயே துவங்கிவிட்டன. வழக்கம் போல் அற்புதமானது மாமருந்து என்கிற வரவேற்புகளும், ஏதுமே இல்லை என்ற விமர்சன நிராகரிப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.  எவருக்கும் தீங்கிழைக்காத பட்ஜெட் என்றும், 9 மாநில தேர்தல், 2024 பொதுத்தேர்தலை மனதில் கொண்ட பட்ஜெட் என்கிற கருத்துக்களும் வராமல் இல்லை.



நிதி அமைச்சர் அவர்களின் 86 நிமிட உரையைக் கேட்டவர்கள் அதில் அடுக்கப்பட்ட பாலிசி அறிவிப்புகளை செவிமடுத்து இருப்பர். அவை பற்றி அடுத்த பட்ஜெட்டின் ஆவணங்களுடன் வரும் அமுலாக்கம் என்கிற ஆவனத்தை பார்த்துதான் முழுமையாக மதிப்பிட முடியும். இப்போது வரவேற்கலாம்- இல்லையேல் தெரிந்த விமர்சனங்களை முன்வைக்கலாம்.

இவ்வாண்டு பட்ஜெட் (கடனைத் தவிர்த்த) 27 லட்சத்து 16 ஆயிரத்து 281 கோடி வருவாய்க்கு மதிப்பீட்டை செய்துள்ளது. சென்ற 22-23ன் திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 11.7 சதம் உயர்த்தப்பட்ட மதிப்பீடு.

செலவு குறித்த மதிப்பீடு 45 லட்சத்து 3ஆயிரத்து 97 கோடி. சென்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 7.5 சதம் உயர்த்தி மதிப்பிட்டுள்ளனர்.

வருவாய் பற்றாக்குறை 2.9 சதம் ஜிடிபியில் என்றும், நிதி பற்றாக்குறை 5.9 சதம் எனவும் வெளிப்படுத்தியுள்ளனர். வட்டிக்கான செலவு என்பது 10,79,791 கோடி. இது வருவாயில் 41 சதம்.

வருவாய்க்கும் செலவுக்கும் ஆன இடைவெளியான 17 லட்சத்து 86 ஆயிரத்து 816 கோடியை கடன்மூலம் அவர்கள் சரி கட்டவேண்டும். இதுவும் சென்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 1.8 சதம் கூடுதலாகிவுள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் மாற்றவேண்டிய தொகையாக 18 லட்சத்து 62 ஆயிரத்து 874 கோடியைக் காட்டியுள்ளார்கள். சென்ற ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட இது 8.9 சதம் அதிகம் என்கிறார்கள்.

2023-24க்கான பங்குவிற்பனை இலக்கு 51000 கோடி.

மறைமுக வரி இன வருவாயாக 15,29,200 கோடியில் ஜி எஸ் டி வகையில் 9,56,600 கோடி பெற திட்டமிட்டுள்ளனர். வருமானவரி 9,00,575 கோடிக்கு மதிப்பிட்டுள்ளனர். சென்ற பட்ஜெட்டைவிட 16.4 சதம் கூடுதல் வருமானவரியை எதிர்பார்க்கின்றனர்.. பங்கு விற்பனையில் சென்ற ஆண்டைவிட 2 சதம் மட்டுமே கூடுதலாக எதிர்பார்த்துள்ளனர். 2021-22ல் பங்குவிற்பனை வகையில் அவர்களால் 13627 கோடிதான் பெறமுடிந்துள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது.

ஆக உயர்ந்த ஒதுக்கீட்டை வழக்கம்போல் பாதுகாப்பு துறைதான் பெருகிறது.  பாதுகாப்பு 5,93,538 கோடி, சாலை வசதி 2,70,435 கோடி, ரயில்வே 2,41,268 கோடி, உணவு பொது வழங்கல் 2,05,765 கோடி, உள்துறை 1,96,035 கோடி, கெமிக்கல்ஸ் 1,78,482 கோடி, ஊரக வளர்ச்சி 1,59,964 கோடி, விவசாயம் 1,25,036 கோடி, தகவல் தொடர்பு 1,23,393 கோடி, கல்வி 1,12,899 கோடி, ஜல்சக்தி 97,278 கோடி, நலவாழ்வு 89,155 கோடி, வீடு நகர்ப்புறம் 74,546 கோடி என முக்கிய அமைச்சர் துறைகள் பெற்றுள்ளன. மீதி அனைத்து துறைகளும் சேர்ந்து 20,33,419 கோடியை எடுத்துக்கொள்கின்றன.

  subsidies என்ற வகையில் 4,03,084 கோடியை மதிப்பிட்டுள்ளனர். சென்ற  திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 28.3 சத சரிவை இதில் பார்க்கிறோம். இதன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக food subsidyல் 31.3 சத சரிவு என்பதைக் காண்கிறோம். முன்பு கூடுதலானதற்கு காரணமாக கோவிட் என விளக்கம் தந்துள்ளனர். பெட்ரோலிய மான்யமும் 75.4 சத சரிவைக் காட்டுகிறது. மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒதுக்கீட்டிலும் 32.9 சரிவைக் காண்கிறோம். PM Kisan  என்பது அதே 60 ஆயிரம் கோடியில் வைத்துள்ளனர். ஸ்வச் பாரத் மிஷன் 74 சதம் கூடுதலைப் பெற்றுள்ளது.

SC sub plan  ST sub plan என்பதில் 4.3 சதம் மற்றும் 26.7 சதம் உயர்வைக் கொடுத்துள்ளனர்.

வருமான வரியில் புதிய மாற்றங்கள் குறித்து வரவேற்பும் , சேமிப்பை ஊக்குவிக்காது என்ற விமர்சனமும் வந்துள்ளன.

பென்ஷனைப் பொறுத்தவரை மத்திய அரசு 2071 ஹெட்டில் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது 2,35,358.79 கோடி. பிஎஸ்என்எல் உள்நுழைந்த பென்ஷனர்களும் இதில் அடக்கம். DOT தன் பென்ஷனர்களுக்கு 20650 கோடியாகலாம் என தன் மான்யகோரிக்கையை வைத்து ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. 2021-22ல் இந்த செலவு 14864. 49 கோடியாக இருந்தது. வி ஆர் எஸ் பென்ஷனர்கள் வேறு 3275 என்கிற ஹெட்டில் பென்ஷன் பெற்று வருகிறார்கள்.  இந்த தனி ஏற்பாடு வி ஆர் எஸ் அமுலானதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு தொடரும் என்றே தோன்றுகிறது.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் , பொருளாதார அறிஞர்கள் பார்வையிலும் வரவேற்பும் விமர்சனங்களும் கலந்தே வருவதைக் காண்கிறோம்.

சென்ற பிப்ரவரி 1,2022ல் நிதியமைச்சர் உரையில் சொல்லப்பட்டவை எந்த அளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆவணம்  Implementation of Budget Announcements  என 60 பக்க அளவில் தனித்துக் கொடுத்துள்ளனர்.

பங்குவிற்பனை இலாகாப்படி ஏர் இந்தியா தனியார் மயத்தை முடித்துள்ளனர். எல் அய் சி லிஸ்ட் செய்து 20516.12 கோடி proceeds  பெற்றுள்ளனர்.

சாலை போக்குவரத்தில் National Highways Network  என்பதற்கான 20 ஆயிரம் கோடி முன்மொழிவில் 14268 கோடியைத்தான் செய்துள்ளதாக ஏற்றுள்ளனர். மல்ட்டிபிள் லாஜிஸ்டிக்ஸ் பார்க் சென்னையில் என்பதற்கு லெட்டர் ஆஃப் அவார்டு மட்டும் நடந்துள்ளதாக காட்டுகின்றனர். நாக்பூர் , பங்களூருக்கு ஏலம் நடைமுறைவரை போயுள்ளது.

ரயில்வேயில் ஓஎஸ் ஓபி one station one product  என்பதை 535 இடங்களில் செய்துள்ளதாக சொல்கின்றனர். ஆகஸ்ட் 2023க்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் என குறியீட்டை வைத்துள்ளனர். அநேகமாக நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக முக்கிய நகரங்களை அவை இணைக்கும் என பேசுகின்றனர்.

 163 லட்ச விவசாயிகளுக்கு 2.37 லட்சம் கோடி direct payment of MSP value  என்ற இலக்கை தாங்கள் விஞ்சி 2.58 லட்சம் கோடி கொடுத்ததாக இதில் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட விவசாயிகளில் 62 பேர் Integrated Farming systems and organis natural farming குறித்து சொல்லப்பட்டுள்ளனராம். கோதாவரி காவிரி இணைப்பு  குறித்து negotiation and consensus building among concerned states  என்ற குறிப்பைத் தந்துள்ளனர்.

 தொழிலாளர் இலாகா குறிப்பில் என்சிஎஸ் எனும் வேலைவாய்ப்பு போர்டல் குறித்து உயர்வாகப் பேசியுள்ளனர். 10 லட்சம் informal workers பதிவிட்டுள்ளதாகவும், எம் எஸ் எம் இ க்கு பணியாளர்கள் தருவதில் இது உதவும் என சொல்லியுள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சிஸ்டம் என்பதை செப் 2021ல் அரசாங்கம் அறிவித்தது. இதில் 27கோடிக்கு மேல் numbers created  என்கின்றனர்.

ஜல்ஜீவன் மிஷன் அடிப்படையில் டிசம்பர் 2022ல் 7.47 கோடி வீடுகளுக்கு tap water supply கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தியாவில் டிசம்பர் 11, 2022படி இந்த வசதியை பெற்ற ஊரக வீடுகள் 55.28 சதமாகவே இருக்கிறது. இதில் செல்லவேண்டிய தூரத்தை இந்த விவரம் காட்டுகிறது.

அனைவருக்கும் வீடு திட்டப்படி 12-12-2022 படி 65.50 லட்சம் வீடுகள் முடிந்துள்ளதாம். திட்டமிட்டவை 120 லட்சம் வீடுகள். இந்த திட்டத்தை இப்போது மார்ச் 2024வரை நீட்டித்துள்ளனர்.

 Anytime any where Post office savings  என்பதில் கோர் பேங்கிங் சேவை நோக்கி 25085 இலாகா அலுவலகங்களும், 1.27 லட்சம் கிளை அலுவலகங்களும் சென்றுள்ளதாக சொல்கின்றனர்.

 டெலிகாம் பொறுத்தவரை அவர்களது முனைப்பு 5 G ல் இருக்கிறது. 2022ல் அலைக்கற்றை ஏலம் முடித்தனர். Frequency allocation  கொடுத்துள்ளனர்.

 இதேபோல் அறிவித்தவை எந்த அளவு நிறைவேற்றம் என்பது குறித்து துறைவாரியாக அந்த ஆவணத்தில் பார்த்துக்கொள்ள முடியும். விமர்சிக்கவும் முடியும். சிலர் வரவேற்கவும் முடியும்.

500 வார்த்தைகளில் சொல்லவேண்டும் என நினைத்த இந்த குறிப்பு 700 வார்த்தைகளாகிவிட்டன.  கணக்குத்தான். அதில் உள்ளார்ந்த விவரங்கள் அவரவர் கோணத்தில் interpretation perceptions    ஆக கருத்து மதிப்புக்களைப் பெறுகின்றன. சாதாரண உழைப்பாளி அவன் அன்றாட வேலை கூலி எங்கே என்பதற்கான அல்லாட்டம் தொடரவே செய்கிறது.

18 hrs 2-2-2023

 

 

1 comment:

  1. மிக அருமை சார்.

    N Ganapathy Subramanian
    A Facebook friend

    ReplyDelete