சிபிஅய் மகாத்மா ஒரு மதிப்பீடு நூல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலரைக்கொண்டு காந்தியின் நூற்றாண்டு சமயத்தில் - குறிப்பாக அக்டோபர் 2, 1969ல் The Mahatma A Marxist Symposium என்கிற நூலைக் கொணர்ந்தனர். என்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் ( சரியாக வருடம் நினைவில் இல்லை) மகாத்மா மார்க்சிய மதிப்பீடு என்கிற தமிழ் நூல் இருந்தது. எனது கவனக் குறைவால் எங்கோ தவறவிட்டுவிட்டேன். ஆங்கில நூலை தோழர் எம் பி ராவ் எடிட் செய்திருந்தார். தோழர் ராவ் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று ஆவணத்தொகுப்புகளிலும் பங்களிப்பை செய்தவர். நூல் பிபிஎச் வெளியீடாக, 1969ல் ரூ 10க்கு வந்தது. தமிழ் நூலான மகாத்மா மார்க்சிய மதிப்பீடு காந்தியின் 150 ஆம் ஆண்டில் மறுபதிப்பாக கொணரப்பட்டிருந்தால், நலமாக இருந்திருக்கும் என எனக்குத் தோன்றியது. ஆங்கில நூலில் பதிப்பாளர் குறிப்பில் கீழ்கண்ட வரிகள் இடம் பெற்றுள்ளன The Communist Party too had on occasions sharply clashed with Gandhiji. It could not accept his various theories, nor could it deny his role in the anti-imperialist movement. Between them there was a bitter