அமித் பாதுரி பரிந்துரைக்கும் ’கண்ணியமான பொருளாதார வளர்ச்சி’
அமித் பாதுரி அவர்களின் ’ Development
with dignity a case for full employment’ என்கிற பொருளாதார மாற்று குறித்த ஆய்வு நூல்
வந்து 19 ஆண்டுகள் ஆகிறது. அமித் பாதுரியின் இந்நூலை என் பி டி 2007ல் தமிழில் கொணர்ந்தனர்.
தமிழகத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளரான கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்கள் தேர்ந்த நடையில் , வாசிப்பவர்க்கு
இதமாக மொழி பெயர்த்து தந்துள்ளார்கள். இந்த தமிழ் நூலின் அடுத்த பதிப்பு 2022ல் வந்துள்ளது.
அதை அவர் அனுப்பி தந்தமைக்கு என் நன்றி.
சென்னையில் எத்திராஜ் சாலை அலுவலக
பணிக்காலத்தில் , அருகாமையில் இருந்த NBT Show roomல் 2007ல் வந்தபோதே வாங்கி படித்தது
நினைவிற்கு வருகிறது. திரு கண்ணையன் தட்சிணாமூர்த்தி சென்ற வாரம் அனுப்பிய 2022 பதிப்பை
, திரும்ப நினைவூட்டிக்கொள்ளும் வகையில் வாசிக்கலானேன்.
மூல நூலே தமிழில் வந்துள்ளது போன்ற , எவ்வித
நெருடலும் இல்லாத , மிக இலகுவாக வாசகரை அழைத்துச் செல்லும் மொழி பெயர்ப்பாக
‘ கண்ணியமான பொருளாதார வளர்ச்சி-
முழு வேலைவாய்ப்புக்கான வலியுறுத்தல் ‘ இருப்பதை, வாசிக்கும் எவரும் உணரமுடியும்.
நூலின் தலைப்பே பேசு பொருள் என்ன
என்பதை வெளிப்படையாக சொல்லி விடுகிறது. எவருக்கு கண்ணியமான வாழ்க்கைச் சூழல் இல்லை
என்பதைக் கண்டுபிடிக்க பெரிய பொருளாதார அறிவு தேவையில்லை. அப்படிப்பட்ட ஏழை உழைப்பாளர்களை
வேலை வழியில் வளர்ச்சியில் பங்கேற்க வைத்தல், நாட்டின் முன்னேற்றத்தில் அதன் பலனைப்
பெறுவதில் தாங்களும் முழு பாத்தியதை உடையவர்கள் என்கிற கடமை- உரிமையை முன்வைப்பதுதான்
இந்நூலின் சாரம். அமித் பாதுரி தன் சிந்தனைத் திறனால் இதை சிறப்பாக செய்திருப்பார்.
தன் மொழிபெயர்ப்புத்திறனால் கண்ணையன் தட்சிணாமூர்த்தி
தமிழர்களுக்கு அதை கடத்தியிருக்கிறார். இருவருக்கும் நன்றியையும் பாராட்டையையும் சொல்வோம்.
நூலில் மார்க்கெட் கேபிடலிசம்- சோவியத்
சீனா மாதிரியான சோசலிச கட்டுமானம், இந்திய வகைப்பட்ட அரசுடைமை தொழில்கள்- உலகமய தாராளமய
பொருளாதார மாற்றக் கால இன்றைய அனுபவங்கள்- விளைவுகள் பேசப்பட்டுள்ளன. காங்கிரஸ், வலதுசாரிகள், இடதுசாரிகள் அரசியல் மீதான
விமர்சனங்கள் நூலில் அமித்தால் வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார விளைவுகளை முன்வைத்தே இந்த
விமர்சனங்கள்.
இங்கு அமித் ஆங்கிலத்தில் இந்நூலில்
முன்வைத்த கருத்தாங்கள் சிலவற்றையும், அதை
மிக அற்புதமாக மொழிபெயர்த்துள்ள கண்ணையன் தட்சிணாமூர்த்தி
அவர்களின் தமிழ் வரிகளையும் அடுத்தடுத்து தந்திருக்கிறேன்.
·
..secular versus non secular politics is a
crucial issue, and is the focus of today's politics. It involves the crucial
issue of how to accommodate minority rights, which is a defining issue of any
civilised demcracy.
சமயச் சார்பில்லாத அரசியலா, சமய
சார்புடைய அரசியலா என்பதே இக்கால அரசியலின் பிரதான அம்சமாகிவிட்டது. எந்த ஒரு நாகரிக
ஜனநாயகமானாலும் அதில் வரையறுக்கும் விஷயமான சிறுபான்மையினர் உரிமைகளுக்கு எங்ஙனம் இடமளிப்பது
என்பதே அரசியலின் முக்கியப் பிரச்சனையாகவும் இருக்கிறது.
·
…the left has failed to show how to combine its
version of nationalism with pro poor high growth policies. its populism like
that of all other political parties in india derives from the redistributive
patronage by the state...
ஏழைகளுக்கு பயனளிக்கும் உயர் வளர்ச்சிக்
கொள்கைகளைத் தமது தேசியக் கொள்கையுடன் எவ்வாறு இணைத்துக்காட்டுவது என்பதில் இடதுசாரிகள்
தோல்வியடைந்துள்ளனர். அவர்களின்வெகுஜனக் கொள்கையும், இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகளைப்
போலவே அரசின் மறுபங்கீட்டு ஆதரவில் இருந்தே எழுகிறது...
·
The emphasis on the economic front with the
neglect of political democracy in socialist countries is almost the opposite of
the Indian experience. Democratic India soon after independence, had put considerable emphasis on a programme of state
led industrailisation, but never managed to devise a way of moving towards a
full employment society with access to basic health care, education and social
security for all. this has remained true all along. India has given its
citizens political rights, but not economic rights to adecent livelihood, with
or without economic liberalisation. we also know that neither market capitalism
nor state socialism in their traditional versions can provide an answer.
அரசியல் ஜனநாயகத்தைப் புறக்கணித்து,
பொருளாதார ஜனநாயகத்தை வலியுறுத்திய சோசலிச நாடுகளின் அனுபவங்கள் இந்தியாவில் நாம் பின்பற்றிய
முறைக்கு நேர் மாறானது. சுதந்திரத்திற்கு பின்னர் ஜனநாயக இந்தியாவில் அரசின் முன் முயற்சியுடனான
தொழில்மயத்திற்கு முக்கியத்துவம் அளித்தபோதும், எல்லாருக்கும் கல்வி, சுகாதாரம், சமூக
பாதுகாப்பு போன்ற வசதிகள் கிடைக்கக்கூடிய முழு வேலைவாய்ப்புடைய சமூக அமைப்பை நோக்கி செல்லும் வழிகாண
முயலவில்லை.. இந்திய மக்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைத்தபோதும், கண்ணியமான வாழ்க்கைக்குரிய பொருளாதார உரிமைகள் கிடைக்கவில்லை. பொருளாதார தாராளமயம்
இருப்பினும், இல்லாதபோதும் இதே நிலைதான். எனவே சந்தையமைப்பு சார்ந்த முதலாளித்துவமோ,
அரசு சார்ந்த சோசலிசமோ அவற்றின் பாரம்பரிய வடிவத்தில் மக்கள் பிரச்ச்னைக்களுக்குத்
தீர்வு வழங்க முடியாது என்பது தெளிவாகிறது.
·
The essence of a participatory democratic
process in development lies in our ability to define an economic role for the
poorest and the most disadvantaged, both as a producer and consumer. The poor
would not be the passive receivers of doles, but active contributors to the
process of development. Our mindset must be changed to accept the reality that
a patron- client relation between the state and its citizens is not desirable,
perhaps not even viable in the long run. This is a central lesson to be learnt
from the experience of the former socialist economies
வளர்ச்சியை எட்டுவதில் பங்கேற்பு
ஜனநாயக முறையின் சாரமென்பது, ஏழைகளுக்கும் தரித்திரர்களுக்கும் உற்பத்தியாளர்- நுகர்வோர்
என்கிற இருநோக்கிலும் அவர்களுடைய பொருளாதாரப் பணியை வரையறுக்கும் நமது திறமையில்தான்
இருக்கிறது. ஒன்றும் செய்யாமல் இலவசங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக மட்டுமில்லாமல், வளர்ச்சிக்கு
பங்களிப்பவர்களாகவும் ஏழைகள் இருக்க வேண்டும்.. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான
உறவு புரவலர்- இரவலர் என்றிருப்பது விரும்பத்தக்கதல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவம் நமக்கு வேண்டும். நீண்டகால நோக்கில் இவ்வுறவு நீடிக்கும் சாத்தியமும்
கிடையாது. இது முந்திய சோசலிச பொருளாதாரங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய
முக்கியப் பாடமாகும்.
·
Actaually speaking , no authority, either of
the state or of the market, should have power to decide whether the benefits
should trickle down or permeate up, because the benefits should follow from the
participation of the people as their right. Therefore, the central issue is one
of the widest participation in the development process. It has to be
characterised by the reciprocity of duty and the right for every citizen to
participate and derive benefit from the process of development.
சொல்லப்போனால், மக்களுக்குப் பயன்கள்
மேலிருந்து கீழ்நோக்கி செல்ல வேண்டும் என்றோ, கீழிலிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டுமென்றோ
தீர்மானிக்கும் அதிகாரம் அரசுக்கோ சந்தையமைப்புக்கோ கிடையாது. ஏனென்றால் மக்களின் பங்கேற்பிலிருந்து
அவர்களுடைய உரிமையாகப் பயன்கள் கிட்டவேண்டும். எனவே வளர்ச்சிப் பணிகளில் அனைத்து மக்களும்
பங்கேற்க வேண்டும் என்பதே மையக் கருத்தாகும். வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பது ஒவ்வொருவரின்
கடமை என்றும் அவற்றின் பயன்களைப் பெறுவது அவர்களின் உரிமை என்றும் இதற்கு வரையறை கூறலாம்
மாதிரிக்கு சிலவற்றை மட்டுமே தொட்டுக்காட்டியிருக்கிறேன்.
அடர்த்தியான பொருளம்சம் கொண்ட நூல் இது.
ஏழைகள் உற்பத்தியிலும் பகிர்விலும்
பங்கேற்க செய்யும் மாற்று பொருளாதார ஏற்பாட்டை உருவாக்கும் case ஒன்றை இவ்வாய்வில்
பாதுரி முன் வைக்கிறார். ஏழைகள் வேலை, வருவாய் பெறுவது என்பது ஏதோ அரசாங்கமோ அல்லது
அதை வழிநடத்தும் கட்சியோ தரும் சலுகையல்ல என்கிற குரல் வலுக்க பாதுரி விழைகிறார். ஏழைகளுக்கு
சில இலவசங்களை தந்து அதிகார ஆட்சியை சமாளிக்கலாம் என்பது வெகுநாள் ஓடாது.
ஏழை எளியவர்க்கு நீண்ட காலத்திற்கு
வேலை தர என்ன செய்யவேண்டும் என்பதே திட்டமிடுதலில்
முக்கிய பிரச்சனையாக வேண்டும்.
மத்திய மாநில பஞ்சாயத்து என்கிற
மூன்று அடுக்குகளின் எல்லைகளை தன்னாட்சி அதிகாரங்களை
மதித்து பொருளாதார திட்டமிடுதலை அர்த்தமுள்ளதாக்காமல்
உண்மையான வளர்ச்சி எப்படி ஏற்படும் என்பது பாதுரியின் வினா.
பொதுத்துறைகள் மட்டுமே திறமையின்மையுடன்
இருப்பதை அமித் ஏற்கவில்லை. தனியார் துறைகள் திறமையின்மைக்கும் தோல்விக்கும் சான்றுகள்
இருப்பதை பாதுரி சொல்கிறார். தொழிலாளரின் உற்பத்தித் திறன் வளர்ச்சி வீழாமல், வேலை
வாய்ப்பு வளர்ச்சி விகிதத்தை எப்படி உயர்த்துவது என்கிற சவால், திட்ட ஒதுக்கீடு பணம்
ஒழுக்கு ஏதுமின்றி உரியவகையில் செலவிடப்படுகிறதா என்பதற்கான தொடர் கண்காணிப்பு மெக்கானிசம்
பற்றி அமித் சொல்கிறார்.
உலகமயமாக்கமும், கட்டுப்பாடற்ற சந்தையும்
அதன் போக்கில் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்கும் என்ற கற்பனை போதும் என்கிற
எச்சரிக்கை மணியை அமித் இந்நூலில் எதிரொலித்துள்ளார்.
4-8-2024
Comments
Post a Comment