Skip to main content

பி என் கோஷின் காந்திய அரசியல் பொருளாதாரம்

 பி என் கோஷின் காந்திய அரசியல் பொருளாதாரம்


காந்தி தனித்த எந்தவொரு துறை குறித்தும் , இதுதான் எனது சிந்தனை எனத்தரவில்லை. அரசியல், பொருளாதாரம், சமூகம், நெறி சார்ந்த வழிகள் என எதையும் தனித்தனியான ஒன்றாக பாவிக்காமல், அவற்றின் ஊடும்பாவுமாக தனது செயல்வழிப்பட்ட சிந்தனைகளை விட்டுச்சென்றுள்ளார்.

காந்தியைத்தேடப்போகிறவர்கள் அவரை துறை சார்ந்த பல ஆய்வுகளுக்கு உட்படுத்திவருகின்றனர். அவரும் அள்ள அள்ள குறையாமல், தேடி வருபவர்களின் விடாமுயற்சிக்கான பலன்களை தந்துகொண்டேயிருக்கிறார் . இந்த ஆய்வில் இப்படி அவரை கண்டடைந்தோம் என வெளிப்படுத்தி, அவரின்  அந்த ஒருபக்க கோணத்தை காட்டக்கூடிய எழுத்துக்கள் ஏராளம். சாதி, மதம், தேசவிடுதலை,  உண்மை, சத்தியாகிரகம், ஆக்கபூர்வ திட்ட மொழிவுகளும் செயல்பாடுகளும், கிராம முன்னேற்றம் என பல்வேறு பெருந்தலைப்புகளில் ஏராளம் தேடிப்போகக்கூடியவர்களுக்கு கிடைக்கும். உடன்படலாம். மறுக்கலாம் . அவரவர் பயிற்சி மனநிலை சார்ந்தது அது.

காந்தியின் பொருளாதாரம்- காந்தியப் பொருளாதாரம் குறித்தும் ஏராளம் எழுதப்பட்டுள்ளது. காந்திய அரசியல் பொருளாதாரம்குறித்தும் நூல் வந்துள்ளது. Gandhian Political Economy குறித்த பி என் கோஷ் அவர்களின் நூல் இதில் தனித்துவத்தை பெற்ற ஒன்று. சற்று கடினமான நூல்தான். இங்கிலாந்து பேராசிரியராக கோஷ் அவர்கள் இந்நூலை 1988ல் கொணர்ந்துள்ளார். இங்கிலாந்து, அமெரிக்காவில் வெளியானது.  2012ல் இந்திய பதிப்பை ஆனே புக்ஸ் நிறுவனத்தார் கொண்டுவந்துள்ளனர்.  காந்திய பொருளாதாரம் குறித்து பேசுகிற பலர் இந்நூலை ref ஆக்க காட்டுவதை பார்க்க முடிந்தது.

Classical political economy, Marxian political economy , Gandhian political economy - இதில் காந்திய அரசியல் பொருளாதாரம் எவ்வாறு தன்னை சற்று மாறுபாட்டுடன் அமர்த்திக்கொள்கிறது என்கிற விவாதம் , கோஷ் அவர்களால் விரிவாக நூல் முழுதும் பின்னப்படுகிறது. 250 பக்கங்களான நூல். அடர்த்தி குறையாமல் உரையாடல் தரப்பட்டுள்ளது.

அறிமுக இயலில் அரசியல் பொருளாதாரம் என எதை புரிந்துகொள்கிறோம், காந்திய அரசியல் பொருளாதாரம் என்பதை எப்படி பொருள் விரிக்கிறோம் என கோஷ் விவரிக்கிறார். காந்திய பொருளாதாரமா காந்திய அரசியல் பொருளாதாரமா- தான் ஏன் கா அ பொ என எடுத்துக்கொண்டேன் என கோஷ் விளக்கம் தருவார்.

காந்திய அரசியல் பொருளாதார கட்டுமானம் எப்படி எந்த சூழலில் எவற்றை பில்லர்களாக வைத்துக்கொண்டு எழ ஆரம்பித்தது என The Making of Gandhian Political Economyல் விளக்குகிறார் கோஷ். இதில் முதலாளித்து முறைகள், மார்க்சிய பொருளாதாரம் , அரசும் பொருளாதாரமும் போன்ற அம்சங்களில் காந்திய  அரசியல் பொருளாதாரம் எப்படி interplay செய்யவேண்டியதானது எனப் பேசுகிறார். GPE என கோஷ் போல நாமும் அதை வைத்துகொள்ளலாம்.

இந்த அடிப்படைகளைக்கொண்டு , தனித்தனியாக விரிவாக தன் உரையாடலை கட்டுகிற வகையில் பிற இயல்களை அமைக்கிறார். அவர் எடுத்து உரையாடும் சில தலைப்புகளைத் தருகிறேன்.

Nomological parameters and conceptual categories of GPE

Principles of GPE 

Methodological Individualism and Methodological collectivism

From metaphysical to physical the rationality of satyagraha 

Equality and distributive justice

Theories of justice

Gandhian concept of justice

Conceptualising conflicts

Gandhian dialectics

Non violence as the subsumptive   method

Prisoner’s dilemma and cooperation threshold 

The nature of modern state

Rights duties freedom

Power and policy - political reforms 

Gandhian paradigm of development 

Role of machinery - decentralisation 

GPE and contemporary political economy 

GPE and contemporary world problems 

தலைப்புகளே  உள்வாங்க சற்று கடினமான விஷயங்கள் நூலில் பேசப்படுகின்றன எனக் காட்டும். 

கோஷ் அவர்கள் எழுதி 35 ஆண்டுகள் ஆன நூல் என்றாலும், இன்றும் ஆழமான விவாதம் மற்றும் புரிதலுக்கான subject matters அளித்துள்ள நூல் என இதை எடுத்துக்கொள்ளலாம்.  கோஷ் அளித்த ஒவ்வொரு தலைப்பும்  விரிவான விவாதத்திற்கான கதவுகளை திறக்கும். சற்று பொறுமையாக, மார்க்சிய நூல்களை படிப்பதற்கேற்ற மனநிலை தேவைப்படலாம். மார்க்சிய சொல்லாடல்களும் வராமல் இல்லை. அரசியல் பொருளாதாரம் என்பதில் ஆர்வம் உள்ளவர்கள், காந்திய அரசியல் பொருளாதாரம் என தனித்த ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது என உள்வாங்க, இந்நூல் உதவலாம்.

13-7-2024




காந்திக்கான நீதி நியாய கோட்பாடு என ஏதாவது காணக்கிடைக்குமா - அதன் உரு திரட்சி எப்படி என்கிற நல்ல இயலை  பேரா பி என் கோஷ்  செய்திருப்பார்.

Theory of Justice என்றால் Rawls அவரைத்தொடர்ந்த அமர்த்யா சென் உள்ளிட்டவர் நினைவிற்கு வரலாம்.  

பி என் கோஷ் தனது Gandhian Political Economy நூலில் இயல் 5 ஆக Exploitation, Inequalities and Distributive Justice என்பதை வைத்திருப்பார். மரபு பொருளாதாரவாதிகள்  சுரண்டல் அசமத்துவம் நியாயப்பகிர்வு என்பதை எப்படி புரிந்துகொண்டனர் என்பதை சொல்லிவிட்டு, மார்க்சியர்  சுரண்டலுக்கு வழிவகுக்கும் தனியார் மூலதனம், அசமத்துவம் நீங்க நீதிக்கான சோசலிசப் பாதை எனச் சொல்வதையும் கோஷ் விளக்குவார்.

காந்தியின் அரசியல் பொருளாதாரம் தனது சர்வோதயாவை எப்படி சொல்கிறது, காந்தி பேசிய நீதி நியாயம் என்ன என்பதை கோஷ் விரிவாக இந்த இயலில் விளக்குவார்.

காந்தியின் நியாய நீதிக்கான பேச்சுக்கள் பல கோட்பாடுகளின் சாயல்களை பெற்றிருக்கும். என்னவகையில் எந்த கோட்பாட்டுடன் அது ஒத்துப்போகும் என்பதை கோஷ் ஒப்பீட்டு அடிப்படையில் சொல்வார்.

நியாய கோட்பாட்டில் ரால்ஸ் அவர்களையும் ராபர்ட் நோசிக் அவர்களையும் சற்று கோஷ் அறிமுகப்படுத்துவார். இஸ்லாமிய பொருளாதார சிந்தனை என்பதும் பார்க்கப்படவேண்டிய ஒன்றாக கோஷ் கருதுவார். குரானில் 1000 இடங்களிலாவது justice என்கிற பதம் வருவதை நக்வி ஆய்விலிருந்து காட்டுகிறார் கோஷ். ஹெகலின் உறவுப்புரிதல் என்பதும் நீதி நியாய கோட்பாட்டு விளக்கத்திற்கு துணை நிற்பதாக கோஷ் எழுதுகிறார். விரிவாக இல்லையென்றாலும் , இவற்றையெல்லாம் பார்முலா சுருக்கமாக விளக்கும் கோஷ் காந்திய நீதி நியாயப் பாட்டில் இவை பலவற்றின் சாயல்கள் இருப்பதாக பேசுகிறார்.

காந்திக்கு சாத்தானின் நியாயம், தூய நியாயம் குறித்த கருத்துக்கள் இருந்தன.

“ pure justice is that which inspired by fellow feeling and compassion. We in India call it the Eastern way of justice. That way of justice which has no place in it for fellow feeling or compassion is known as satanic , western modern justice “  

காந்திக்கு நியாயம் நீதி என்பது சகமனிதனை மிக கெளரவாக நடத்துவது dignified fair treatment என்பதாகவும் இருக்கிறது. நீதி என்பதை அந்தப் பொருளில்தான் அவர் பல இடங்களில் குறிப்பிடவும் செய்கிறார்.

கோஷ்  பென்தமின் பயன்பாட்டுவாதத்துடன் மேம்பட்ட சர்வோதய  காந்திய விழைவை ஒப்பிட்டு சொல்கிறார் . Utilitarianism- greatest good of greatest number எனப்பேசினால் சர்வோதயம் uplift of all - greatest good of all என்கிறது. பயன்பாட்டுவாத செழுமையாக கோஷ் அதை பார்க்கிறார். 

கோஷ் எழுத்தில் மார்க்சியத்தின் சாயலாக சொல்வது

Gandhi supported the Marxian theory of justice  in the sense that it is based on the need of absence of exploitation of the poor working class by the rich capitalist class. Like Marx Gandhi also believed that justice believes in the payment need based wages.

ரால்ஸ் உடன் காந்தி சந்திக்கும் புள்ளியையும் கோஷ் காட்டுகிறார். சமதையான வாய்ப்புகள் அதாவது - equal start, equal opportunities equal fairness என அதை புரிந்துகொள்ளலாம். அதேபோல் கடந்த காலம் உருவாக்கிய அநீதிகளை களைவது என்பதில் அரசின் பங்கு குறித்த அம்சத்தில் அவர் நோசிக் பரிந்துரைகள் பக்கம் நிற்பதாக கோஷ் காட்டுகிறார்.  இஸ்லாமிய பொருளாதாரமும் தர்மகர்த்தா முறையை நம்புகிறது. அதில் காந்தி பொருந்திப்போகிறார்.

கோஷ் காட்டுவது காந்தியின் நீதி கோட்பாடு என ஒன்றை நாம் வகைப்படுத்திப்பார்த்தால் அது amalgam of many theories . காந்தி dead uniformity or perfect equality in all terms என நீதி நியாயம் பேசவில்லை. மானுட கண்ணியத்தின் சமதையான மதிப்பு என்கிற அம்சத்தில் அவர் உறுதியாக நின்றார். அவருக்கு ஒழிப்பு அஜெண்டா என ஏதுமில்லை. மனிதன் மாறக்கூடிய பண்புடையவன்- அவனின் நியாய உணர்வு உறங்கலாம் உறைந்து இருக்கலாம், ஆனால் இளக் வைக்கமுடியும், நெகிழ வைக்கமுடியும் என்கிற பெரும் நம்பிக்கையுடன் செயல்பட்டார் காந்தி. உண்மையின் பாற்பட்டு சுயசோதனை செய்துகொள்ளும் நியாய நீதிப்பாதையை அவர் சமைக்க விரும்பினார். அந்த மணம் இன்னும் இருக்கிறது.




july 16

சிக்கல் முரண் மோதல் என்கிற விஷயங்கள் இல்லா சமூகம் இருப்பதில்லை. சிக்கல் தீர்விற்கு வழி என்ன - conflict and conflict resolution என்பதை உலகம் பல்வேறு வழிகளில் சோதித்து பார்த்து வருகிறது. போர் சத்தம் எங்காவது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் தன் அவலக்குரலின் சோகத்தை கேட்காமல் இல்லை.

முரண் தீர்விற்கு மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம்  வழி தீர்வுகள்  என்பவை பேசப்படாமல் இல்லை. காந்தி வழி என்பதும் மிக நம்பற்குரிய ஒன்று என்பதை பி என் கோஷ் தனது Gandhian Political Economy ல் தனி சாப்டராக விவாதிக்கிறார். அதில் காந்திய இயக்கவியல்  dialectics of Gandhi என்பதையும் கோஷ் விவரிக்கிறார். அரசியல் பொருளாதாரம் , இயக்கவியல் என்றாலே மார்க்சியம் அங்கு உயிர்ப்புடன் எழுந்துவிடும். கோஷ் காந்தியை மார்க்சிற்கு நெருக்கமாக இவ்வியலில் காட்ட முயற்சித்திருப்பார்.

கோஷ் எழுதியிருப்பது

The traces of historico evolutionary aspect of dialectics that are present  in the contemporary Marxist political economy can also be found in Gandhian political economy.

Gandhian dialectics can well be compared to the contemporary Marxist notion that is against any kind of reductionist explanation of a phenomenon. Gandhian political economy in the same way does not approve of or give emphasis to any single explanatory variable in the analysis of social problems including the problem of conflict resolution.

சமூக மோதல் முரண்களை உருவாக்கும் அம்சங்களாக காந்தி சிலவற்றை உணர்ந்தார்.அவரின் analytical umbrella க்குள் வருபவனற்றை கோஷ் தருகிறார்.

Human rationality

Aberration from morality - religion

Issues of dependence and dominance 

Exploitation and inequality 

Lack of rights and freedom

காந்தி முரண் தீர்வை எவ்வகையில் சிந்தித்து செயலாக்க

 முயன்றார் என்பதை கோஷ் காந்தியின் பிரதான 4 முறையியலை சொல்லி விவரிக்கிறார்.

Negotiations and persuasion 

Education

Satyagraha 

Institutional and organisational reforms

இந்த பகுதியில்  கோஷ்    முக்கிய காந்தி அனுசரிப்பு விழைவொன்றை முன்வைப்பார்.

Gandhi favoured the idea of internalisation of conflict through greater sacrifice on the part of stronger party in case of a just demand by weaker party.

Gandhi considered all forms of protest to a a just action if the order from the higher authority is found to be repugnant to rights, freedom , rationality and morality. 

காந்தி  ‘மொராலிட்டி ‘ என்பதை இணைக்காமல் உரையாடல் செய்வதில்லை, செயலில் காட்டாமல் இருப்பதில்லை. அவரிடத்தில்

nobody is born criminal என்கிற உறுதியான பார்வையிருந்தது. 

Gandhi tended to believe that under the impact of the civilisation, human aggressiveness gradually declines. The fundamental objective of Gandhi’s theory of conflict resolution is to uphold justice, equality, rights and freedom.

இங்கு கோஷ் rights எனப் பேசினாலும் கடமையின்பாற்பட்டு அதன்  வழியில் பெறப்படும் உரிமைகளையே காந்தி விழைந்தார்.

16-7-2024



ug 9

Marx Gandhi Dialectics குறித்து ஆக8 2024ல் இடுகை ஒன்றை செய்திருந்தேன். ஆய்வாளர் பேரா பி என் கோஷ் ‘காந்திய பொருளாதாரத்திற்கு அப்பால் ‘ என்கிற ஆங்கில நூலில் காணப்பட்ட essay ஆன அந்த காந்திய இயக்கவியல் பார்வையை மார்க்ஸ் பார்வையுடன் சேர்த்து சுருக்கமாக வைத்திருந்தேன். 

என் வாசிப்பில் அறிய நேர்வதை,  என் புரிதல்  quality  நிறை குறையுடன் எழுதுவது ( எழுதி பார்ப்பது) என்பதைத் தவிர அதற்கு வேறு முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆர்வம் உள்ள எவரிடமாவது அது  சேரும்போது,அவர்கள் தங்கள் உழைப்பால் மேலும் செழுமை செய்துகொள்ள உதவலாம் என்கிற சிறு ஆசையும் அதில் தொழிற்படும்.

இன்று Gandhi’s Theory of Justice என ஏதேனும் இருக்கிறதா , அது theoretical உலகில் பேசப்படும் பிற theories of Justice யை எப்படி தன்னுள் synthesis செய்துகொண்டுள்ளது - unconscious ஆக என கோஷ் ஆய்வு செய்கிறார். இந்த unconscious  என்பது காந்தியை குறித்து அவர் தியரி என உருவாக்காத ஒன்றைப் பற்றி பேசும்போது சொல்லப்படவேண்டியது மிக அவசியமானது)

ஏராள பிற நீதி குறித்த நியாய கோட்பாட்டு தராசுகளை சுருக்கமாக சொல்லிவிட்டு பேரா கோஷ் , காந்தியின் நியாய கோட்பாடு என எவற்றை பின்னமுடியும் என சிந்திக்கிறார். ஓரளவு அந்த முடைதலை அவர் செய்துள்ளார் எனலாம்.   அப்படியே ஆங்கிலத்தில் சில முக்கிய கருத்தாக்கங்களை தருவது, அதன்  ref தன்மைக்கு உதவும்.  

தமிழ் ஆங்கிலம் கலந்த நடையில் வழக்கம் போல , என் உள்வாங்குதலுக்கு ஏற்ப  தர முயற்சிக்கிறேன்.

காந்திய நீதி நியாயம் என்பது மனிதனை கண்ணியமாக நடத்துதல் fair treatment dignified treatment என்பதில் அமர்கிறது. விடுதலை உணர்வு, சமத்துவ வாய்ப்புகள்  போன்றவற்றை இயற்கையான உரிமைகளாக அது பாவிக்கிறது. அமுலாக்கத்திற்கு நிற்கிறது.

ஒவ்வொருவரின் உரிமையும் கடமை சார்ந்து பெறப்படுதலாக இருக்க வேண்டும், duty based rights என அது புரிய வைக்க முயற்சிக்கிறது. எவரையும் எதையும் கட்டாயப்படுத்தி, வன்முறை முனையில் செய்ய வைக்கும் முறையை அது ஏற்கவில்லை.

நெறி சார்ந்த சமூக மேம்பாட்டிற்கு கேடு இல்லாதவற்றை மனிதன்  செய்துவர அது  விழைகிறது. நெறியற்ற , மனதிற்கு சமாதானமாகாத, தவறு என்று உணரக்கூடிய ஒன்றை , எந்த அதிகாரம் எந்த ஆயுதத்துடன் வந்து நின்று வலியுறுத்தினாலும், அதை செய்ய இயலாது என்பதை அமைதியாக சொல்ல முடியும் என்கிற பக்குவ பயிற்சியை சத்தியாகிரகிகள் பெற விழைகிறது.

தனது போராட்டத்தில் இரு அம்சங்களை கடைபிடிக்க அது வேண்டுகிறது. Absence of duress- no harm to opponent. எதையும் நிர்ப்பந்திக்க வைத்து சாதிக்கக் கூடாது, எதிரியை காயப்படுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கக்கூடாது.

கண்ணுக்கு கண் என்கிற நீதியை ஒருபோதும் அது ஏற்பதில்லை.  அப்படி செய்து உலகை இருளாக்க வேண்டாம் என அது எப்போதும் பேசுகிறது. நான் செய்வதெல்லாம் சரி, பிறர் செய்வதெல்லாம் தவறு என்கிற பார்வையை- அது வைப்பதில்லை.. என் அளவில் தன் சரிக்கான சுய நடவடிக்கைகள் என்ன என்பதிலிருந்தே அது துவங்குகிறது.

சாத்தானின் நீதி என்பது குறித்து தெளிவைக் கோருகிறது. தூய நியாயம் என்கிற புரிதலை வற்புறுத்துகிறது. பழிவாங்கும், சுயநல செயல் சார்ந்து விளைவிக்கப்படும் கேடுகள் குறித்து அது எச்சரிக்கிறது.

காந்தி எழுதிய ஓரிரு வரிகளை தருகிறேன்

Pure justice  is that which is inspired by fellow feeling and compassion.  It is justice tempered with generosity.. The way of justice which has no place in it for fellow feeling or compassion is known as satanic. Satanic concept of justice is vindictive, wicked and is motivated by revenge and selfish personal gains.

எப்படிப்பட்ட கடமையை மனிதன் எடுத்துக்கொள்வது நீதியானது என அதில் சொல்லப்படுகிறது. The work that is ethically salutary, morally upright and practically just.

Bread Labour என்பதை அது முன்வைக்கிறது. எவரே ஆனாலும் உழைப்பு இல்லாமல் உண்பது நியாயமில்லை என தன் நிலையை தெளிவுபடுத்துகிறது.

எப்படி அநீதியைஎதிர்கொள்வது என்பதற்கான நியாயத்தையும் அது பேசுகிறது. 

உன்னைவிட மாட்டேன் என பிடித்து தாக்கி மோதி அழிக்க முயற்சிப்பது- அதில் தன் அழிவையும் சேர்த்துக்கொள்வது என்கிற ஒரு முறை. வன்முறை வழி.

மற்ற ஒன்று அகிம்சை. தான் மடிவது குறித்து மட்டும் சித்தமாக இருப்பது, அதற்கு மட்டும் தன்னை தயார் படுத்திக்கொள்வது. தன் மாய்த்தல் வழி இருப்பவர்  வாழ்வை உயர்த்தும் தன்மையானது.

இங்கு காந்தி சொல்வதைத் தருகிறேன். பிறரை கொல்வதற்குரிய எந்தக் காரணமும் என்னிடம் இல்லை. என் உயிர் மாய்வதற்கு எனில் பல காரணங்கள் இருக்கின்றன.

காந்திய நியாயத்தில் capability குறித்த புரிதல் என்ன எனத்தேடினால் இந்த வரிகளை கோஷ் வழி பெறலாம்

Gandhi’s conceptualisation of capability will depend upon supply of basic necessities of life , right to have proper house, balanced diet, clothes , education and medical relief.

இந்த நியாயங்களை கோடானுகோடி மக்களுக்கு தர முடியாத அரசை, சமூகத்தை, அரசியலை, அமைப்புகளை, தனிநபர்களை நீதிமான் நியாயவாதி என அழைத்துக்கொள்ள இயலுமா என்கிற கேள்வி இருக்கவே செய்கிறது. பதில்கள் அவரவர்க்கானது…

9-8-2024



Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கி...

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம...

விடுதலைப் போராட்டத்தில் நேரு

விடுதலைப் போராட்டத்தில் நேரு -ஆர்.பட்டாபிராமன் அலகாபாதில் மோதிலால் நேருவின் மாலைப்பொழுது பல பெரிய மனிதர்களின் உரையாடல் பொழுதாக அமையும் . சிறுவன் நேரு எட்டிப்பார்ப்பார் . சிலநேரங்களில் தந்தை மடியில் அமர்ந்து அப்பெரியவர்களின் வாய்களை பார்க்கும் தண்டனை நேரும் . 1857 முதல் சுதந்திரப்போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த முன்ஷி முபாரக் அலி நேருவிற்கு பெரும் அடைக்கலம் . போயர் யுத்தம் , ருஷ்யா - ஜப்பான் போர் போன்றவைகளை சிறு வயதில் படித்த நேருவிற்கு போயர்கள் மீது அனுதாபமும் , ஜப்பான் மீது ஈர்ப்பும் உருவானது . ஜப்பான் குறித்த புத்தகங்கள் தருவிக்கப்பட்டு சிறுவன் நேரு அவற்றை படித்தார் . தேசிய சிந்தனைகள் எனது மனதில் நிரம்பின என நேரு இதை நினைவு கூறுகிறார் . கைகளில் வாள் ஏந்தி இந்தியாவின் விடுதலைக்கு போராடுவதுபோல் அவரை அவர் கற்பனை செய்துகொண்டார் . தனது 15 வயதில் 1905 ல் நேரு இங்கிலாந்திற்கு புறப்படுகிறார் . லண்டனில் அவர் பார்த்த முதல் நபர் டாக்டர் அன்சாரி . லண்டன் மருத்துவமணையில் ஹவுஸ் சர்ஜனா...