சிபிஅய் மகாத்மா ஒரு மதிப்பீடு நூல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலரைக்கொண்டு காந்தியின் நூற்றாண்டு சமயத்தில் - குறிப்பாக அக்டோபர் 2, 1969ல் The Mahatma A Marxist Symposium என்கிற நூலைக் கொணர்ந்தனர். என்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்னர் ( சரியாக வருடம் நினைவில் இல்லை) மகாத்மா மார்க்சிய மதிப்பீடு என்கிற தமிழ் நூல் இருந்தது. எனது கவனக் குறைவால் எங்கோ தவறவிட்டுவிட்டேன்.
ஆங்கில நூலை தோழர் எம் பி ராவ் எடிட் செய்திருந்தார். தோழர் ராவ் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று ஆவணத்தொகுப்புகளிலும் பங்களிப்பை செய்தவர். நூல் பிபிஎச் வெளியீடாக, 1969ல் ரூ 10க்கு வந்தது. தமிழ் நூலான மகாத்மா மார்க்சிய மதிப்பீடு காந்தியின் 150 ஆம் ஆண்டில் மறுபதிப்பாக கொணரப்பட்டிருந்தால், நலமாக இருந்திருக்கும் என எனக்குத் தோன்றியது.
ஆங்கில நூலில் பதிப்பாளர் குறிப்பில் கீழ்கண்ட வரிகள் இடம் பெற்றுள்ளன
The Communist Party too had on occasions sharply clashed with Gandhiji. It could not accept his various theories, nor could it deny his role in the anti-imperialist movement. Between them there was a bitter struggle as, to who would win the masses and for what ideology.
விரிவான ஒன்றாக நூலைக் கொணர திட்டமிட்டு இருந்தோம். நடைமுறை அரசியல் காரணமாக , எழுத ஏற்றுக்கொண்ட சிலரால் கட்டுரைகள் தரமுடியாமல் போனாலும், முக்கிய தலைவர்கள் பலரும் எழுதியிருப்பதை பதிப்பாளர் குறிப்பு காட்டும்.
135 பக்கங்களில் அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் காந்தி குறித்த மதிப்பீடு ஒன்றை தரவேண்டும் என்கிற பொறுப்பில் செய்யப்பட்ட நூலாக இதைப்பார்க்கலாம். இதில் 7 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மகாத்மா நூற்றாண்டு என தோழர் டாங்கே, காந்தியும் சிபிஅய்யும் என சர்தேசாய், விடுதலைக்குப் பின்னர் காந்தியம் என மொகித்சென், தனித்துவ தலைவர் என ஹிரன் முகர்ஜி, 1925ல் காந்தியும் புரட்சியாளர்களும் என மன்மத்நாத் குப்தா, காந்தியும் தேசிய மொழியும் என சுரேந்திர கோபால், நான் அறிந்த காந்தி என ஆனந்த கெளசல்யன் ஆகியோர் இந்நூலில் பங்களித்துள்ளனர்.
காந்தி குறித்த காந்தியானா- காந்தி கிட்டங்கிக்கு கம்யூனிஸ்ட்களின் இந்நூல் மதிப்பீடு மிகச் சிறிய பங்களிப்பு என்றாலும், முக்கிய பங்களிப்பு- critical appreciation literature என்கிற வகையில் ..
ஹிரன் தனித்துவமாக தனி நூல் ஒன்றை எழுதினார். இ எம் எஸ் அவர்களும் அப்போது நியுஏஜ்ஜில் எழுதியவற்றை தொகுத்து தனி நூலாக கொணர்ந்தார். இந்த இரண்டும் மெயின்ஸ்ட்ரீம் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் இருவரின் மிக முக்கிய பங்களிப்பு. இ எம் எஸ் விட ஹிரன் இன்னும் நெருக்கமாக காந்திய தாக்கத்தை உணர்ந்தவராக தெரிவார். இ எம் எஸ் நூல் முக்கிய ரெஃப்ரன்ஸ் நூலாக பாவிக்கப்படுவதையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே சோசலிஸ்ட் இதழ் நடத்திய தோழர் டாங்கே 1921 லேயே காந்தி லெனின் ஒப்பீட்டு நூலைக் கொணர்ந்து பெரும் முதல் பங்களிப்பை செய்தார். இன்றும் பேசப்படும் நூல் அது. டாங்கே எழுதிய அந்நூலின் நூற்றாண்டு நேரத்தில் அந்நூல் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். உங்கள் நூலகம் அதை வெளியிட்டிருந்தனர்.
காந்தி குறித்து ’காந்தியைக் கண்டுணர்தல்’, தோழர் காந்தி என்கிற இரு நூல்களை என் வாசிப்பு மற்றும் புரிதலில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கொணர்ந்தேன். இணையத்தில் எவரும் வாசிக்ககூடிய மின் நூல்களாக அவை இருக்கின்றன. இந்நூல்கள் தனித்த ஆர்வம் காரணமாக எழுதப்பட்டு வந்தவை. ஏராள விவரங்களை கொண்ட நூல்கள் அவை. conceptual சாரமும் இருக்கும்.
1969 The mahatma நூல் குறித்து சில செய்திகளைப் பார்ப்போம்.
காந்தி குறித்து எம் என் ராய் காலம்தொட்டு சொல்லப்படும் அதே குற்றச்சாட்டுகள் இந்நூலிலும் காணப்படும். அவர் மறைபொருள்வாதி, மத்தியகாலத்தவர், ஏகாதிபத்திய நிலபிரபுத்துவ சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டவர், geneuine revolutionary action யை தடுத்தவர், அவர் எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும் பூர்ஷ்வா வர்க்க தலைமைகொண்டவர், மக்கள் திரட்சியை உருவாக்கினாலும் அதைக் கட்டுக்குள் நிறுத்தி வைத்தவர்
சர்தேசாய் எழுதும்போது
The CPI could never grasp Gandhi and Gandhism in their totality. They always eluded such a grasp, and in that sense remained an enigma for us, all our cocksureness not withstanding
ரஜினி பாமிதத் மதிப்பீடாக சர்தேசாய் தருவது
“Gandhi failed as the leader of the national struggle be
cause he could not cut himself loose from the upper-class
interests and prejudices in which he had been brought up... The ‘spirituality’ of Gandhi is only the expression of this class interest. All parasitic and propertied classes have to weave around themselves a fog of confused language, supersti tion, tradition, religion, revivalism, etc. in order to hide from the masses the fact of their exploitation.”
காந்தியின் அகமதாபாத் பஞ்சாலை தொழிற்சங்க முறை உண்மையான தொழிற்சங்க இயக்க முறையாகாது என்ற குற்றச் சாட்டும் இதில் காணப்படும்.
சக்லத்வாலா- காந்தி கடித சாரமும் சுட்டிக்காட்டப்படுள்ளது. காந்தியின் பதிலில் காணப்படும் முக்கிய அம்சம்
I regard you as a fellow seeker after truth. . . It is not
given to all of us to agree with one another in all our
opinions; but it is given to every one of us to tender the
same respect for the opinions and actions of our fellows as we expect for our own
சர்தேசாய் இருவிதமான காந்தி குறித்த மதிப்பீடுகளை இக்கட்டுரையில் முன் வைத்திருப்பார். இந்நூலின் சாரமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
On the one hand, Gandhi’s theistic ideology and tenets
expressed through his creed to truth, nonviolence, love, re nunciation, selfpurification, the inner voice, change of heart, trusteeship, etc. were the expression of India’s socioeconomic backwardness, and more particularly the backwardness and superstition of the Indian peasant masses. Hence, they were antiquated and unscientific. Inevitably they were inadequate from the standpoint of the ideological demands of a full de velopment of India’s revolutionary anti-imperialist struggle.
In the ultimate analysis, they were harmful, as all supersti tion and faith in divine guidance are harmful for an uncompromising revolutionary struggle
On the other hand, in the given historical conditions, the
same social, ethical and philosophical ideas expressed the
yearnings and aspirations of tens of millions of the Indian people awakened to new life and struggle against the domination and miseries of foreign rule (e.g. such declarations and writings of Gandhi as, “This Satanic government cannot be mended, it must be ended”; “God dare not appear before the poor except in the form of bread”, etc.).
And what is even more important, in practice the ideas
took the form of hartals, mass noncooperation, satyagraha,
civil disobedience and so on, i.e., mass protest actions against imperialism. These surely were not revolutionary forms of struggle, but history has proved that, nonetheless, they were powerful and effective forms of struggle in our freedom movement.
காந்தி கம்யூனிஸ்ட்களிடம் ஒன்றுபடும் இடத்தையும் வேறுபடும் இடத்தையும் சுட்டிக்காட்டத்தக்க ,ஹரிஜன் இதழில் வந்த (1937 மார்ச் 13) மேற்கோளைத்தருகிறார்.
“What does communism mean in the last analysis? It means a classless society—an ideal that is worth striving for. Only I part company with it when force is called to aid for achieving it.”
இ எம் எஸ் எழுதிய மகாத்மாவும் இசமும் கூட அவரது தனிப்பட்ட முயற்சி, கட்சி ஆவணமல்ல என்று இக்கட்டுரையில் சர்தேசாய் குறிப்பிடுகிறார்.
இக்கட்டுரையை முடிக்கும்போது தோழர் சர்தேசாய் முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி இவ்வாறு முடித்திருப்பார். ஒருவேளை காந்தி வெறியனின் குண்டுக்கு பலியாகாமல், விடுதலை இந்தியாவில் வாழ்ந்திருப்பார் ஆனால், அவர் ஏழைகளின் பக்கமே நின்றிருப்பார். நாம் நினைக்கும் வழியில் இல்லாமல் போகலாம், அவர் கருதும் வழியில் பணக்கரர்களுக்கு எதிராக ஏழைகளுடன் அவர் நின்றிருப்பார் என சர்தேசாய் சொல்கிறார்.
மொகித்சென் மதிப்பீட்டில்
If Gandhiji was opposed to the mad rush of capitalist industrialisation he was no less opposed to its real negation- working-class socialism
Expressing an impossible dream, opposing independent action by the peasants and thwarting the possibility of working-class leadership, Gandhism inevitably handed over India to the capitalist class, to those who grew in the shadow of the Mahatma, as Birla lovingly puts it.
It is, of course, necessary to remember the achievements of Gandhiji. There is no doubt that he was the foremost anti-imperialist leader produced by our mass struggle for free dom. It was he who accomplished the mass turn of the peasantry to the national movement and who built the Congress into the anti-imperialist, organised front extending into every village and town. It was he who strove for Hindu- Muslim unity, for the realisation of Indian unity based on the recognition of its diversity. It was he who brought dardranarayana, the harijan, to the centre of the national conscience. It is not these accomplishments that one is doubting when one critically examines the source and the consequence of his ideology
1969ன் மொகித்சென் இப்படி ஒரு மதிப்பீட்டையும் தன் கட்டுரையில் தந்துள்ளார்
Nobody benefited from the Gandhi-Nehru leadership than the Indian industrial national bourgeoisie
மேலும் மொகித் எழுதுகையில் காந்தியின் நேர்மறையான சாராம்சங்களை (கம்யூனிஸ்ட்கள் நினைக்கும்) கம்யூனிஸ்ட்களே எடுத்துச் செல்கின்றனர். இதனால் அகிம்சைக்கு மாறிவிட்டோமா என்றால் இல்லை என எழுதியிருப்பார். அவ்வரிகள்
which is the force in India that carries forward today that is positive in the heritage of Gandhism? It is none other than the left, and in the first place, the communists. Here we have an example of sublation, to use a Hegelian term. It is a case of a carry-forward by negation. Does it mean that the left and the communists have become converts to the creed of nonviolence? Very far from it.
மேலும் நீள்வதை நிறுத்துகிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பார்க்க சிறிய தூண்டுதலை இந்த இடுகை செய்தால் நலம்.
இதில் எழுதிய தலைவர்களின் கட்டுரைகள் காந்தியின் நூறு வால்யூம் தொகுப்புகள் முறைப்படுத்தி ( 1958-1994) வருவதற்கு முன்னர் எழுதப்பட்டவை. ஏராள காந்திய ஆய்வுகள் உலகளாவிய அறிஞர்கள் பார்வையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காலமிது. விரிவான காந்திய வாசிப்பு கொண்டவர்கள் இங்கு பேசப்பட்டுள்ள கருத்துக்களுடன் மாறுபடலாம். காந்தியை மகத்தான புரட்சிகர ஆளுமையாக பார்த்த ஆய்வுகளும் ஏராளம் இருக்கின்றன. தேடிச் செல்வோர்க்கு மாபெரும் திறப்பாக காந்தி அமைவார்.
15-8-2024
aug 16 2024
Com Hiren Mukherjee wrote so about Gandhi in The Mahatma Book 1969
Even before there was a properly organised and functioning Communist Party in India, Gandhi had come to be the leader and the symbol-of India’s struggle for freedom...
It is no wonder that President Ho Chi Min, leader of Viet nam whose heroism has cast a new radiance on history, said in Delhi some years ago that it was “a wrong question” when pressmen asked him to compare his role in Vietnam with that of Gandhi in India, which he thought would be “foolish”, but added: “I and others may be revolutionaries but we are disciples of Mahatma Gandhi, directly or indirectly: nothing more, nothing less.” Too much meaning need not be read into this obvious extempore statement, but it remains significant. Communists differ from him drastically, but our salute to him is sincere. He did not fulfil all our expectations, but he was unique, representing uniquely this
India of ours which stands, as it were, between an immense past and an even more immense future.
aug 17 2024
சிபிஅய் தலைமையின் 1969 மகாத்மா ஒரு மதிப்பீடு -பிபிஎச் ஆங்கில வெளியீடு குறித்து முன்னர் ஒரு இடுகை செய்திருந்தேன. அதில் மிகவும் வித்தியாசமான பதிவாக ஆனந்த கெளசல்யன் அவர்களின் பதிவு அமைந்திருக்கும். நான் அறிந்த காந்தி என்கிற சிறிய பதிவு அது. வார்தாவிற்கு ஆனந்த கெளசல்யன் சென்றபோது அங்குள்ள நடைமுறைகளைக் கண்ணுறுகிறார்.
சாப்பாடு என்றால் குறித்த நேரத்தில் மணி அடிக்கப்படும். தவறவிடுபவர்கள் காத்திருக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் அன்றைக்கான உடல் உழைப்பை சிறிது நேரமாவது தரவேண்டும்.
கெளசல்யனுக்கு வேறு பம்பாய் அனுபவம் உண்டு. அங்கு ராகுல் சாங்கிருத்தியாயன் மற்றும் மகேந்திரா போன்ற தோழர்களுடன் ஏற்பட்ட அனுபவமது. சாப்பாட்டிற்கு அந்த குறித்த நேரத்தில் வரமுடியாதவர்க்கு தனியாக தட்டுகளில் அவர்களுக்கான உணவு எடுத்து வைக்கப்படும். அவர்கள் விருப்ப அல்லது எப்போது நேரம் கிட்டுகிறதோ அப்போது வந்து சாப்பிட்டு செல்லலாம்.
வார்தாவில் அவ்வாறு இருக்காது. கெளசல்யனுக்கு சாப்பிட்டால் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்விற்கு பின் என் வேலை என்ன எனக்கேட்டால், அந்த வேலை முடிந்துவிட்டது என்கிற பதில் கிடைக்கும். எனவே கெளசல்யன் சாப்பாட்டிற்கு முன்னரே போய் வேலை செய்துவிட்டு சாப்பிடுகிறேன் என்கிற அனுமதியை பெற்றுக்கொண்டார். கொடுக்கப்பட்ட வேலை தான்யங்களை சுத்தப்படுத்தி தருகிற வேலை.
காந்தி எப்பவும் எவராவது வந்தால் சந்தித்தல், எழுதுதல், விவாதித்தல் என படு சுறு சுறுப்பாக இருப்பார். அன்று சுசிலா வந்து அவரின் மெளன அனுசரிப்பு என்பதை நினைவூட்டினர். அதை அறியாமல் எவராவது பேச்சுக்கொடுத்தால் அவர் இருவிரல்களால் வாயை பொத்தி மெளனம் என்பதை தெரிவிப்பார். கெளசல்யன் காந்தியிடம் கேட்கிறார்- வாய்க்குத்தானே மெளன விரதம் , காதுக்குமா என்கிறார். மெலிய சிரிப்பு உதித்து இரு காதுகளையும் காந்தி பொத்திக்கொண்டு தன் நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறார். ஆஹா இதை கிளிக் செய்ய எவரும் இல்லையே என கெளசல்யன் ஆதங்கப்பட்டு எழுதுகிறார்.
காந்தி பம்பாய் செல்லவேண்டிய வேலை. கெளசல்யன் காந்தியிடம் சொல்கிறார். நீங்கள் வித்தியாசமான மனிதர். விருந்தினர்களை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வேலைக்காக போய்விடுகிறீர்கள் என்றார். காந்தி பதிலாக இவ்வீட்டுக்கு வரும் விருந்தாளி இதை அவர் வீடாகவே பாவிக்கும் பழக்கம் பெற்றுவிடுவார். அப்படி உணர்பவர்கள் மட்டுமே இங்கு விருந்தாளியாக வருவர் என்கிறார்.
போய்விட்டு என்று வருவீர்கள் என காந்தியை கெளசல்யன் கேட்கிறார். பம்பாயில் சுத்தமாக உள்ளே இளநீர் சொட்டுக்கூட இல்லாத தேங்காய் கிடைக்கும் தெரியுமா என காந்தி கேட்டுவிட்டு, ஜின்னாவை பார்க்கப் போகிறேன், அப்படி ஒரு தேங்காய் கொடுத்தால் உடன் திரும்பு விடுவேன் என்கிறார்.
கெளசல்யன் நானும் பம்பாய் வரவேண்டும் என்கிறார். வரலாம் மூன்றாம் வகுப்பில் என்னுடன், ஆனால் மிகச் செளகரியமாக இருக்கும் என்கிறார். கெளசல்யன் செளகரியம் என்பதை ’காந்தி கிளாஸ்’ என கிண்டல் செய்து விளக்குகிறார். தூய படுக்கை கிடைத்தது என்கிறார்.
காந்தியிடம் நகைச்சுவையிலும் பொல்லாத்தனம் உண்டு. கெளசல்யனை சுவாமி என்று அழைப்பர். ஆசிரமத்தில் புத்தமும் சிலோனும் என்கிற உரையாற்ற வேண்டினர். சுவாமிக்கோ ஆசிரமத்தில் காந்தியின் உரை ஒன்றை கேட்க விருப்பம். கெளசல்யன் உரைக்கு காந்தி வர அவருக்கு நேரம் இருக்குமா தெரியாது என சிலர் அவரிடம் தெரிவித்தனர். காந்தி வந்தார். சாப்பிட செல்கையில் சுவாமிக்கு அருகில் அமர்ந்தார். சுவாமி ஏன் திருவோட்டில் சாப்பிடுகிறார் என கேள்வி ஒன்றை ஒருவர் எழுப்பினார். அதுவா எவராவது தாக்க வந்தால் தலையில் வைத்து காத்துக்கொள்ளத்தான் என காந்தி பதில் தந்து சிரிக்க வைத்தார்.
காந்தியை பாபு என நான் கூப்பிடுவது ராகுல் சாங்கிருத்தியானுக்கு பிடிப்பதில்லை என்கிற பதிவையும் ஆனந்த கெளசல்யன் தந்திருப்பார். கெளசல்யன் பெரும் ஞானஸ்தர். புத்தம் குறித்த ஞானி. அம்பேத்கர் இயக்கங்களுக்கு உதவிகரமாக இருந்தவர்.
கெளசல்யன் பதிவு இப்படித்தான் முடிந்திருக்கும். அப்புத்தகத்தின் இறுதி வரிகளாகவும் அவை அமைந்தன.
There has been only one true follower of Gandhism and he was Bapu himself. The rest of us can merely celebrate Gandhi centenary, but not advance the cause of Gandhism in the least..
உண்மையான வரிகளோ...
Comments
Post a Comment