சில நூல்களும், கருத்துக்களும் காலவரையறைகளில் காணாமல் போகாது, ஒளித்துணையாய் மனித வாழ்க்கையில் வந்துகொண்டிருக்கும். தமிழில் திருக்குறளை அப்படி நாம் கொண்டாடமுடியும். Political Track என்கிற வரிசையில் ரூசோவின் சமுதாய ஒப்பந்தம், மார்க்ஸ் எங்கெல்சின் கம்யூனிஸ்ட் மானிபெஸ்ட்டோ, காந்தியின் ஹிந்த் சுயராஜ் போன்ற ஆக்கங்களை நாம் சொல்லலாம். அப்படி சொற்செட்டுடன் மிக ஆழமாக மனித வாழ்வின் துயரங்களை நீக்க துணிச்சலான மாற்றுகளை , காலத்தை விஞ்சி தீர்க்கமாக வைப்பவைகளாக இந்நூல்கள் இருக்கும். இவைகளை இணைத்து படிக்க முடிந்தால் சிறப்போ சிறப்புதான். அவைகளின் சிந்தனைத் திறன் உயர்தரமானவை. இங்கு நான் கம்யூனிஸ்ட் மானிபெஸ்டோ வாசித்தலை சொல்ல விழைகிறேன். கட்சிகளில் மானிபெஸ்டோ குறித்து கொஞ்சம் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும். கேள்வி ஞானம் , சில முக்கிய மேற்கோள்களை நம்பிக்கை அடிப்படையில் வெளிப்படுத்துதல் என்கிற பழக்கம் இருக்கும். அங்கு பலர் ஒருமுறையாவது வாசித்திருப்பர். வாசிக்காத மார்க்சியர் எவராவது இருந்தால் அவசியம் வாசித்தல் நலம். வாழ்வு குறித்த புரிதலை கூடுதலாக பெற மானிபெஸ்டோ உதவும். நூலை உள் நுழைந்து முழுமையாக...