Skip to main content

ரோலந்த் -காளிதாஸ் -காந்தி

 ரோலந்த் -காளிதாஸ் -காந்தி

ரொமய்ன் ரோலந்த் எழுதிய மகாத்மா காந்தி புத்தகம் 1924 ல் பிரிட்டனில் வெளியானது. அதன் நூற்றாண்டை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். அந்நூல் காந்தி குறித்த மேலான புரிதலை மேலைநாடுகளுக்கு உருவாக்கியது. காந்தியை உலகிற்கு எடுத்துச் சென்ற ஆரம்பக் காலத்தவராக ரொமய்ன் ரோலந்த் விளங்கினார்.
அந்நூல் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டு , அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை காதரின் டி குரோத் செய்திருந்தார். அழகான நடை. எப்போது படித்தாலும் அதே வழக்கொழிந்து போகாத கருத்து செறிவுகொண்ட நூலாக இதை ரொமய்ன் நமக்குத் தந்திருக்கிறார்.
ரொமய்ன் சி எப் ஆண்ட் ருஸ், தாகூர் என நெருக்கமாக பழகியவர். காந்தியுடன் அவர்களது விவாதங்களையும் கூர்மையாக்கி இந்நூலை எழுதியிருக்கிறார். Mahatma Gandhi The Man who became one with the Universal Being என்பது ஆங்கில நூலின் தலைப்பு. இந்நூல் இணையத்தில் கிடைக்கிறது. பப்ளிகேஷன் டிவிஷன் 1990 வெளியீடு என் மார்க்ஸ் நூலகத்தில் ( திருவாரூரில்) இருந்தது. அதை எவ்வாண்டு படித்தேன் என நினைவில்லை. அதேபோல் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பான வாழ்விக்க வந்த காந்தி எங்கே தொலைத்தேன் எனத் தெரியவில்லை.
2004 பப்ளிகேஷன் வெளியீட்டை சமீபத்தில் படித்தேன். ரொமய்ன் அளவான வரிகளில் உண்மை பளிச்சிட உணர்ந்ததை அழகாக எடுத்து வைப்பதை உள்வாங்க முடிந்தது. மகாத்மா காந்தி ஜீவிய சரிதம் என்கிற தமிழ் மொழிபெயர்ப்பை 2008ல் பானு பதிப்பகம் கொணர்ந்தனர். அந்த தமிழ் நூலை 2017 ஜனவரியில் படித்துள்ளேன். எம் எஸ் சுப்பிரமணிய அய்யர் மொழிபெயர்த்த நூலைத்தான் பானு பதிப்பகத்தார் கொணர்ந்துள்ளனர். எம் எஸ் சு அவர்களின் மொழிபெயர்ப்பு எந்த ஆண்டில் வந்தது என என்னால் அறிய முடியவில்லை.
1930 களில் வெளியான பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஜீவிய சரிதம் என்கிற பெயரில் வெளியாகியிருப்பதைக் காணமுடிகிறது. தமிழி இணைய மின்னூல் எம் எஸ் சு வின் இந்த நூலை காட்டவில்லை. Archive லும் இல்லை.
ரொமய்ன் உலகளாவிய புகழ் பெற்றவர். இசை நுணுக்கங்களை அறிந்தவர். ஏராள நூல்களை எழுதியவர். காந்தியைவிட 3 வயது பெரியவர். காந்திக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்தவர். அவரும்துறவிக்குரிய பெருவாழ்வு பின்னணி கொண்டவர். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றி எழுதியவர். டால்ஸ்டாய் லெனின் குறித்த விரிவான புரிதல் அவரிடம் இருந்தது.
காந்தியின் செயல்பாடுகளை 1893-1914 தென்னாப்பிரிக்கா காலம், 1914-1922 இந்தியக் காலம் எனப் பிரித்துக்கொண்டு ரொமய்ன் தன் ஆய்வை தந்திருக்கிறார்.
நூல் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்
Soft dark eyes , a small frail man , with a thin face and rather large protruding eyes, his head covered with a little white cap , his body clothed in coarse white cloth, barefooted. He lives on rice and fruit, drinks only water. He sleeps on the floor, sleeps very little and works incessantly. His body does not seem to count at all. There is nothing striking about him- except his who,e expression of infinite patience and infinite love…
He is modest and unassuming, sometimes seeming almost timid, hesitant, in making an assertion. Yet you feel his indomitable spirit. He makes no compromises and never tries to hide his mistake. Nor is he afraid to admit having been in the wrong. Diplomacy is unknown to him, he shuns oratorical effect…
He feels at ease only in a minority, and is happiest when , in meditative solitude, he can still listen to the still small voice within. This is the man who has stirred three hundred million people to revolt, who has shaken the foundation of the British empire…
எம் எஸ் சுப்பிரமணியன் மொழி பெயர்ப்பில் கொஞ்சம் உருவி தருகிறேன்
……சளைக்காது வேலை செய்வார். பார்ப்பதற்கு பஞ்சை… தமது குற்றங்களை அவர் மறைப்பதில்லை. கொள்கையை விட்டுக்கொடுப்பது என்பது கிடையாது. சாலக்கும் தந்திரமும் காணப்படா. வாக்கு வன்மை கொண்டு மயக்குவது என்பதை கனவிலும் கருதார்…
முப்பதுகோடி மக்களை உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பியவர். பிரித்திஷ் ஏகாதிபத்தியத்தை ஆட்டிக் குலுக்கிவிட்டவர்…
நூல் இப்படித்தான் முடிந்திருக்கும்
one thing is certain - either Gandhi’s spirit will triumph, or it will manifest itself again , as were manifested centuries before, the Messiah and Buddha, till there finally is manifested. In a mortal half god , the perfect incarnation of the principle of life which will lead a new humanity on to anew path
எம் எஸ் சு தமிழில்
ஒன்று காந்தியின் கொள்கைவிரைவில் பரிபூர்ணமாக வெற்றி பெறும். இல்லையேல் முன்னர் புத்தர், ஏசுமுதலிய மகான்கள் தோன்றியது போல் பிற்காலத்தில் ஓர் அவதார புருஷன்மீண்டும் இந்தியாவில் உதயமாகி , மனிதகோடிகளை நல்வழிக்குக் கொண்டு வருவான்.
ரொமய்ன் எழுதியிருப்பார்
The way to peace leads thro self sacrifice. This is Gandhi’s message. The only thing lacking is the Cross ..
ரொமய்ன் சகோதரி Madeline யங் இந்தியாவை வாசித்துக் காட்டுவார். 1931 இறுதியில் ரொமய்னை காந்தி சந்தித்து உரையாடியபோது மீராபென் உடன் இருந்தவர் மாடெலின். காந்தியை ரொமய்னிடம் எடுத்துச் சென்றதில் காளிதாஸ் நாக் அவர்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. காளிதாஸ் வங்காளி. காந்தியைவிட 23 வயது இளையவர் ஏராள நூல்களை எழுதியுள்ளார். 1966ல் மறைந்தார் காளிதாஸ்.
சென்னை கணேசன் பப்ளிஷர்ஸ் 1920 களில் ரொமய்ன் உடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தனர். தாகூர்க்கும் சிறந்த பங்குண்டு. இவர்கள் அனைவரும் சேர்ந்து ரொமய்னின் நூல் ஒன்றை நாம் பெற உதவியுள்ளனர். அனைவருக்கும் வணக்கம்.
ஆகஸ்ட் 14, 1922 ல் ரொமய்ன் காளிதாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் காந்தியை போற்றுவதாகவும், அவர் குறித்து நான் எழுதினால், இந்தியா செல்ல வேண்டும் என்கிற என் விருப்பத்திற்கு பிரிட்டிஷாரார் தடை விதிப்பார்களா..காளிதாஸ் யோசித்து பதில் சொல்..கணேசன் கேட்கக்கூடிய முன்னுரை அனுப்புவதா அல்லது தாகூருடன் சாந்தி நிகேதனில் இருப்பதா ..in Shantiniketan I could be more useful எனக் கேட்டிருப்பார்.
காளிதாஸ் நாக் அவர்கள் சுவிட்ஜர்லாந்திலிருந்து ஆகஸ்ட் 18 1922ல் பதில் எழுதியிருக்கிறார். தாகூருடன் கலந்து பேசாமல் எந்த உங்கள் எழுத்தும் இந்தியாவில் வெளியிடப்பட வேண்டியதில்லை. இந்திய பப்ளிஷர்ஸ் பற்றி நான் அறிவேன். இதில் காளிதாஸ் சொல்கிறார்
Gandhi is greater than any idea one may form about him after reading Gandhi’s book. But the real Gandhi is unknown, even to most of his companions, who are violent nationalists and intolerant and biased..
ரொமய்ன் மார்ச் 2 1923 ல் வெள்ளி மாலை எனக் குறிப்பிட்டு காளிதாஸ்க்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார்
I have finished my Gandhi, in which I pay homage to the two great river souls of India streaming down from God , Tagore and Gandhi. My essay is dedicated
To the land of glory and servitude,
Of one day Empire and eternal thoughts
To the people who defy time
To India resurrected
காளிதாஸ் பாரிசிலிருந்து ஏப்ரல் 15 , 1923ல் ரொமயினுக்கு பதில் எழுதுகிறார். அய்ரோப்பாவில் காந்தி சொல்லத்தகுந்த அளவில் புத்தகமில்லை. காந்தியையும் உங்களையும் புதிய ஒளியில் நான் தரிசிக்கிறேன். A historian’s fidelity is blended is blended with an idealist’s passion for a new era- the two harmonise so well.
நான் யாரை கொண்டாடுவது. கலைஞனையா, கலைஞன் எழுதிய வரலாற்று மனிதரையா..முடிவெடுப்பது கஷ்டம்தான்.
பிரஞ்சு புத்தகம் பற்றி காளிதாஸ் சொல்கிறாரா தெரியவில்லை. ‘பிரிண்டிங் மிஸ்டேக்ஸ்’ சரி செய்கிறேன் என எழுதியுள்ளார். காந்தியின் சுயசரிதை குஜராத்தியில் வரப்போகிறது, வந்தவுடன் உங்களுக்கு மொழி பெயர்த்து அனுப்புகிறேன் எனவும் காளிதாஸ் சொல்கிறார்.
ஜனவரி 21, 1924 அன்று ரொமய்ன் காளிதாஸ்க்கு எழுதுகிற கடிதத்தில் மதராஸ் கணேசன் பப்ளிஷர்ஸ் எனது நூல்களை, காந்தி ஆங்கில மொழி நூலை கொணர விரும்புவதாக கேட்டுள்ளனர் எனத் தெரிவிக்கிறார். முன்பாக The Century Magazine of Newyork ஆங்கில வடிவ நூலுக்கு இந்தியா நீங்கலாக உலக உரிமை பெற்றுள்ளனர். கணேசனிடம் நான் இந்திய உரிமை பற்றி சொல்லியிருக்கிறேன் என ரொமய்ன் தெரிவிக்கிறார். நூலை குஜராத்தியிலும் இந்தியிலும் கொணர்வதாகவும் கணேசன் சொல்கிறார்.
மார்ச் 16 1924 கடிதத்தில் எனது மகாத்மா காந்தி நூல் பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் அடுத்தடுத்து வந்துள்ளதைப் பார்த்து பப்ளிஷர்ஸ் ஆச்சர்யமடைந்துள்ளனர் என ரொமய்ன் தெரிவிக்கிறார். என் தங்கை பெங்காலி அகராதியுடனேயே இருக்கிறாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறிய ரொமய்ன் காளிதாஸ் கடிதப்போக்குவரத்தின் சில பகுதிகளை The Tower and the Sea என்கிற கடித தொகுப்பிலிருந்து எடுத்துள்ளேன்.
பெரும் மனிதர்கள்…பெரும் செயல்களை செய்து முன்னுதாரணமாக நிற்கின்றனர். சல்யூட்…
2-9-2024
All reactions:
Chithra Balasubramanian and Ganesan Krishnamurthy Sundaresan

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு