மாவோ- காந்தி
தோழர் மாவோ அவர்களின் selected vol ஒன்றை கொடுத்து முதலில் என்னை படிக்கச் சொன்னவர் தோழர் கி வெங்கட் ராமன் ( இப்போது தமிழ்தேச பொதுவுடைமை). அப்போது திருவாரூர் சிபிஎம் மாவட்டக் கட்சி ஊழியர் அவர். அங்கிருந்த நூலகத்திலிருந்து தான் அதை அவர் எடுத்துக்கொடுத்தார். நாங்கள் சிபிஅய் சிபிஎம் என வெவ்வேறு இயக்கங்கள் சார்ந்தவர்களாக இருந்தாலும், தோழமை கொண்டவர்களாக இருந்தோம். திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு இயக்கத்திற்கு அவர் தலைவர், நான் செயலர். ஏறத்தாழ ஊரில் இருந்த 50 தொழிற்சங்கங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இப்போதும் 45 ஆண்டுகளை தொட்ட அவ்வியக்கத்தை அவ்வூர் தலைவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
தோழர் வெங்கட் கொடுத்த அந்த தொகுப்பில்தான் மாவோவின் on practice, on contradiction போன்ற புகழ் வாய்ந்த மெய்யியல் விசாரணைகள் இருந்தன. 1985க்கு முன்னரா அடுத்த ஆண்டா என எனக்கு சரியாக நினைவில்லை. அப்போது எவ்வளவு புரிந்து கொண்டேனோ…
16 ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் பவுண்டேஷன் தோழர்கள் மாவோவின் 5 கட்டுரைகள் என்ற தொகுப்பை Five Essays on Philosophy என்கிற புத்தகத்தைக் கொணர்ந்தனர். மாவோயிச பயிற்சி உள்ள தோழர்கள் பெரும்பாலும் நடைமுறையைப் பற்றி, முரண்பாடு குறித்து என்கிற இரண்டையும் படித்திருப்பார்கள்.
ராகுல் நிறுவனம் 1937 ல் பேசப்பட்ட இந்த மாவோவின் இரண்டுடன், தொடர்புகொண்ட முரண்பாடுகளை கையாளுதல் handling the contradictions, propaganda work பிரச்சார வேலை என்கிற 1957 குறிப்புகளையும், சரியான சிந்தனை எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற மிகச் சுருக்கமான 1963 குறிப்பு ஒன்றையும் இணைத்து இந்த 5 கட்டுரைகள் தொகுப்பை கொணர்ந்தனர்.
அதைப் படித்தபோது தான் 1980களின் நினைவுகள் வந்தன. சிபிஎம் அலுவலகத்தோழர் சேகர் ( விவசாயத்தலைவர் கோ வீரையன் மாப்பிள்ளை) சிபிஎம் அனைத்து பத்திரிகைகளையும் RP என எழுதி அலுவலக போஸ்ட் பாக்சில் வைத்து சென்றுவிடுவார். தீக்கதிர் மட்டும் வீட்டிற்கு வந்துவிடும்.
வெங்கட் இருந்தபோது சிபிஎம் people’s democracy யும் சிபிஅய்யின் new age யையும் மாற்றி கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம். சென்னை வந்த பிறகு பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்க்சிஸ்ட் இதழ்களை அதிகாரிகள் சங்கத்தில் மாநில செயலராக இருந்த , தற்போது ஓய்வூதிய சங்க செயலராக உள்ள தோழர் ராஜசேகர் கொடுத்துக்கொண்டிருந்தார்.
On practice அளவில் சிறிய கட்டுரைதான். மாவோவும் காந்தியும் சந்திக்கும்புள்ளிகளை, மாறுபடும் இடங்களை இதில் பார்க்க முடியும். ‘தோழர் காந்தி’ நூலில் லெனினும் காந்தியும், மாவோவும் காந்தியும் போன்ற கட்டுரைகளை எழுதியிருந்தேன். அதில் சில ஒப்பீடுகள் காட்டப்பட்டிருக்கும்.
காந்தியிடம் ‘தான் செய்துவிட்டு அதை செய்ய சொல்வது’ என்கிற முன்னுதாரண exemplariness இருக்கும். செய்த ஒன்றின் அனுபவ பிழிவாகா அவரது தியரி ( தியரி கோட்பாடு என்ற பொருளில் அல்ல) அமையுமென புரிந்துகொள்ளலாம்.
மாவோவின் சில வரிகளை இங்கு தருகிறேன்.
முதலில் where do correct ideas come from என்கிற 1963 குறிப்பில் மாவோ
Leading from practice to knowledge and then back to practice. Such is the the Marxist theory of knowledge, dialectical materialist theory of knowledge. Among our comrades there are many who do not yet understand this theory of knowledge.
காந்தி எப்போதும் dialogical ஆக இருப்பவர். தொடர் செயல்கள் விவாதங்கள் வழி அவ்வப்போதைக்கான உண்மைகளை இனங்காண்பவர். டன் கணக்கான பேச்சுக்களைவிட ஓர் அவுன்சு நடைமுறை, ஓரடி முன்னால் என்கிற கவலையுடன் செயல்பட்டவர். செய்யமுடியுமா எனில் தொடர்ந்து வா என்கிற முன்னொட்டை அவரிடம் பெறாமல் எவரும் அவர் கூட செல்ல முடிந்ததில்லை.
எங்கள் டெலிகாம் இயக்க தோழர் ஓ பி குப்தாவிடம் ஓரடி ஆனாலும் அனைவருடன் - தீர்வை நோக்கிய செயலும் பேச்சும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். தீர்வைத் தருவதே புரட்சிகரமானது என்கிற பாலபாடத்தை குப்தா எங்களுக்கு உணர்த்தினார். அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்பதை mass movement எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நாங்கள் அங்கு கற்றுக்கொண்டோம்.
சரி , இப்போது மாவோவின் புகழ் வாய்ந்த 1937 on practice ல் சில வரிகள்
Marxists regard man’s activity in production as the most fundamental practical activity, emphasises that theory is based on practice and in turn serves practice.
Dialectical materialism குணங்களில் ஒன்றாக மாவோ அதன் practicality என இங்கு குறிப்பிடுவார். இங்கு காந்தியின் உழைப்பின் தத்துவம் bread labour theory சந்திப்பை காணமுடியும்.
அடுத்து மாவோ குறிப்பிடும் வரிகள்
Whoever wants to know a thing has no way of doing so except by coming into contact with it , that is by living practising in its environment. All genuine knowledge originates in direct experience ( Mao also like Lenin did not deny indirect experiences)
மாவோ எளிமையாக புரியவைப்பார். மாம்பழத்தின் சுவை அறிய வேண்டுமெனில் அதை சுவைக்க வேண்டும். அதாவது அதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பார். That is bring change in that shape என்பார்.
Living in its environment என்பது காந்தி இந்திய சோசலிஸ்ட்கள் கம்யுனிஸ்ட்களுக்கு கொடுத்த மிக முக்கிய அறிவுரையாக இங்கு இருந்தது. காந்தியும் ‘something is given here’ என்கிற indirect experience யை கணக்கில் கொள்ளச் சொன்னார். அதன் கேடான பகுதிகளை கைவிடுவது , ஏற்பதில்லை என்பதில் உறுதி காட்டினார். முற்றிலுமாக annihilation என்பதில் அவர் வேறுபட்டார். There can be no knowledge apart from practice என்பதில் மாவோ வும் காந்தியும் சந்தித்ததாக கொள்ளலாம். Knowledge must be deepened by more practices என்பதிலும் அவர்கள் சந்திக்கின்றனர்.
மாவோ ‘on practice’ essay வை இப்படித்தான் முடிக்கிறார்.
Discover truth through practice, and again thro practice verify and develop truth.
காந்தி absolute truth என எதையும் சொல்வதில்லை. Relational truths பற்றித்தான் பேசுவார். மாவோ லெனினை சுட்டிக்காட்டி The sum total of innumerable relative truths constitutes absolute truth என புரிந்துகொண்டார்.
காந்தி இந்த எல்லாவற்றிலும் செய்யத்தகுந்த வழிமுறைகள் , அகிம்சை வழி உண்மையை நோக்கி - நெறி தவறாத பாதை morality என்பதற்கு அழுத்தம் கொடுத்தார்.
- ‘அவர் அதை செய்வாரா, அவர் செய்யாத ஒன்றை என்னிடம் எப்படி எதிர்பார்க்கலாம் ‘ என்கிற பிறர் என்ன செய்யவேண்டும் என்கிற கேள்விகள் காந்தியிடம் primacy பெறாது. நான் இந்த கணத்தில் நெறியுடன் செய்யவேண்டியதென்ன, நான் சரியாக நடந்து கொள்கிறேனா என்கிற primacy அங்கு தொழிற்படும்.
நீளம் கருதி நிறுத்துகிறேன். மாவோவின் on contradiction பற்றி பலரும் பேசியுள்ளனர். பார்க்கலாம்..வாய்ப்பு எப்படி என்று..
14-9-2024
Comments
Post a Comment