New E book from Pattabiraman புதிய மின் புத்தகம் கீழ்கண்ட முன்னீடு மற்றும் 38 உள்ளடக்கத்துடன்.. நேரமுள்ளோர் இணைப்பை பார்க்கவும் திராவிட- திராவிடர் இயக்கம் வாசிப்பு வழி குறிப்புகள் முன்னீடு திராவிட இயக்கம் குறித்து பல ஆய்வுகள் வந்துள்ளன. இன்னும் விரிவான ஆய்வுகள் தேவையும்படுகின்றன. நூற்றாண்டைக் கண்ட பிராமணர் அல்லாத இயக்கம்- நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்கம்- திராவிடர் கழகம்- திமுக- அதிமுக இன்னும் பிரிவுகள் எல்லாமே மிக விரிவான ஆய்வுபரப்பை நோக்கி நிற்கின்றன. முற்றிலும் சாய்வுகள் இல்லா முழு ஆய்வு என எதையும் சொல்ல முடியாதென்றாலும், மறைப்புகளை கொண்டிருக்காத, எல்லாவற்றையும் உள்ளடக்கிக்கொண்ட- ஆவணங்கள், பேச்சு, மாநாட்டு நடவடிக்கைகள், கடிதப் போக்குவரத்துகள், விமர்சனங்கள்- விவாதங்கள் என பெருவெளி ஆய்வாக அவை செல்ல வேண்டியுள்ளது. திராவிடர் இயக்க சாதனைகள்- பலம் பலவீனங்கள், அதன் உயர்வான பண்புகள்- நெறி சார் வீழ்ச்சிகள் என அனைத்தையும் பேசக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வரவேண்டும். 50 ஆண்டுகால ஆட்சி என்பது பெரும் சாதனைக்குரிய- அதேநேரத்தில் பலவீன நோய்கள் பற்றக்கூடிய காலமும் கூட. அசோகரையும் அக்பரையும் ...