மகத் சத்தியாகிரக வழக்கு 1927
மகத்
சத்தியாகிரகம் அதன் நூற்றாண்டை 2027ல் காணப்போகிறது. இந்தியாவில் சாதிய சமூக கொடுமைகளில்
உள்ளானவரின் விடுதலை இயக்க திறப்பாக அம்பேத்கர் தலைமை தாங்கி நடத்திய இப்போராட்டம்
பார்க்கப்படுகிறது. 1927 சத்தியாகிரகம் குறித்த ஏராள செய்திகள் உள்ளன. அம்பேத்கரின்
வாழ்க்கை குறித்து எழுதியவர் பலரும் இதை விதந்து பேசியிருப்பார்கள்.
‘அம்பேத்கரின்
செம்மார்ந்த மரபு’ என்கிற ஆங்கில நூலை எழுதிய அகிர் அவர்களும் மகத் பற்றி சொல்லிவிட்டு,
அம்பேத்கர் நீதிமன்றத்தில் செளதார் குளத்தை பயன்படுத்தும் உரிமைக்கு சாதகமான தீர்ப்பை
பெற்றார் என நகர்ந்து சென்றுவிடுவதைக் கண்டேன்.
மகத்
நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெற்ற வெற்றி எப்படி தீர்ப்பில் எழுதப்பட்டது எனப் பார்க்க
விழைவு எழுந்தது. அந்த வழக்கு தீர்ப்பை அம்பேத்கர் வரலாற்றை எழுதுகிறவர்கள் ( நான்
பார்த்த சிறு அளவில்) எவரும் பின்னிணைப்பாக தராமல் செல்வதை உணர்ந்துள்ளேன். ஒருவேளை
வருகிற நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் எவராவது மகத் சத்தியாகிரகம்- தீர்ப்பு- மனு
தர்ம எரிப்பு குறித்த முழு ஆவண சாட்சியங்களை வெளிக்கொணரலாம். வந்திருக்கவும் கூடும்.
எனக்கு தெரியவில்லை.
வழக்கின்
விவரத்தை தேடியபோது செகண்ட் கிளாஸ் சப் ஜட்ஜ் தந்த 17 பக்க அளவிலான மகத் தீர்ப்பு ஒன்றை பார்க்க
முடிந்தது. வழக்கு அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத சாதிகள் சார்ந்தவர்களால் டிசம்பர்
12 1927ல் தொடுக்கப்பட்டு தீர்ப்பு ஜனவரி 8 1931ல் வழங்கப்பட்டுள்ளது.
பாண்டுரங்க
ரகுநாத் தாரப் (வழக்கு காலத்திலேயே மறைந்துவிட்டார்), நரகரி தாமோதர் வைத்யா, கிரிதாரி
மார்வாரி, நாராயணன் பகேட், அனந்தராவ் தேஷ்பாண்டே, ராமச்சந்திர ஜாதவ், சீதாராம் வடகே,
ஆத்மாராம் செட்யே மற்றும் மகத் வாழ் குடியிருப்போர் என வழக்கை தொடுத்தவர் விவரம் கிடைக்கிறது.
எதிர்
தரப்பாக டாக்டர் பீமராவ் அம்பேத்கர், நாம்தியோ சிவாட்கர், கிருஷ்ண மகர், மாலு சாம்பர்,
கனு மகர் என்று பெயர் சொல்லப்பட்டு- முதல் இருவரும் பம்பாயிலும் அடுத்தவர் புத்ருக்கிலும்,
கடைசி இருவர் மகத்திலும் வாழ்பவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வழக்கு
தொடுத்தவர்களின் சாரம்: பிரிட்டிஷ் வருவதற்கு முன்னரே தாங்கள் கட்டி வைத்த செளதாரி
குளத்தை சாஸ்திர சம்பிராதயங்களின்படி அங்குள்ள மகர் சாம்பர் மக்கள் பயன்படுத்தக்கூடாது.
அவர்களுக்கென தனி கிணறுகளை முனிசிபாலிட்டி கொடுத்துள்ளது . அதாவது அது பொது நீர்நிலை
அல்ல. தனியார் நீர்நிலை. மார்ச் 1927ல் தாழத்தப்பட்டவர்கள் இயக்கம் தொடங்கி, நவம்பரில்
அத்துமீறி நுழைதல் என வந்ததால் இவ்வழக்கை போட்டு இருக்கிறோம்.
எதிர்தரப்பாளர்கள்
பிரதிவாதியாக முன்வைத்த சாரம்: அக்குளம் முனிசிபாலிட்டியின் சொத்து. எனவே அனைவருக்குமானது.
தனி உரிமை கொண்டாடமுடியாது. அங்குள்ள முகமதியர் கிறிஸ்துவர் பயன்படுத்திட அனுமதிக்கும்போது,
இந்து மதத்திலேயே உள்ள தங்களை தடுப்பதேன் , இந்து சாஸ்திரங்களில் தீண்டாமை இல்லை என
சாஸ்திர விற்பன்னர் பழைய சாஸ்திரி சொல்கிறார். மேலும் சாஸ்திரங்கள் நீர்நிலை அம்சத்தில்
தீட்டு பார்ப்பதில்லை என்கிற வாதத்தை வைத்தனர். முனிசிபாலிட்டி ஜனவரி 5 1924ல் அனைவரின்
பயன்பாட்டுக்கான குளம் என போட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டினர். அத்துமீறி நுழைந்தவர்
நாங்கள் என்றால் முனிசிபாலிட்டி தான் அதை முடிவு செய்ய வேண்டுமே தவிர வாதிகள் அல்லர்.
எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வேண்டினர்.
நீதிமன்றம்
சில முக்கிய கேள்விகளை எழுப்பிக்கொண்டது. இந்த சிவில் வழக்கில் சாதி பிரச்சனையாக உள்ளது.
குளம் தனியார் சொத்தா- இல்லையா என முடிவிற்கு வர வேண்டியுள்ளது. நீண்டகாலமாக பழக்கம்
வழக்கம் இருக்கிறது என வைத்துக்கொண்டாலும் அவ்வழக்கத்தை சட்ட உரிமையாக பார்க்க முடியுமா?.
1927
ஆகஸ்ட்டில் முனிசிபாலிட்டி தான் போட்ட 1924 தீர்மானத்தை நிறுத்தி வைத்து, பொது வாக்கெடுப்பு
என்றது. ஊர்கூடி அனுமதிக்கக்கூடாதென்றனர்.
வழக்கின்
சிறிய விவரத்தை மிகவும் எளிமைப்படுத்தி மேலே தந்ததாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வழக்கின்
பாரா 17 எனக்கு மிக சுவாரஸ்யமான வாதமாக இருந்தது.
நீதிபதி சொன்ன சில அம்சங்களை அவரது மொழியிலேயே தந்துள்ளேன்.
whether
the religious texts on the Hindu Religion recognise untouchability, whether the
untouchables who are represented in this suit by the Defendants are
untouchables according to those sastras
இந்து
சாஸ்திரங்கள் தீண்டாமையை அங்கீகரிக்கிறதா, இவ்வழக்கில் பிரதிவாதியாக உள்ள மகர் சமர்
பிரிவினர் தீண்டப்படாதவர்கள்தான் என அந்த சாஸ்திரங்கள் சொல்கிறதா எனக் கேட்டுக்கொண்டு
நீதிபதி வி எ சராப் விவாதி்க்கின்றார். சாஸ்திரங்கள்
தீண்டாமையை அங்கீகரிக்கின்றன. பிரதிவாதிகள் சொல்வது போல் இல்லை என்கிற முடிவிற்கு அவர்
வந்ததைக் காண்கிறோம். அவரின் தீர்ப்பின் சில வரிகள்
I
have, therefore, no hesitation in holding that the Defendant-untouchables are
untouchables according to the shastras and the later treatises thereon. It is
sufficient to state that the existence of the custom off.
untouchability
is admitted by the Defendants, though an attempt was made by them to show that
the said custom is not legal and valid inasmuch as it was an imposition on the lower classes by the upper
classes against their will and consent.
I
am not, therefore, satisfied that the
Defendants have proved that no untouchability attaches to the
watering-places according to the shastras.
…attempts
of the Hindu Maha Sabba or other social reformers to eradicate this custom from
the Hindu Society, to place all members of the religion on an equal footing and
afford equal opportunities in life to them, and to thus establish unity in the
Hindu Society are indeed laudable but they also do not help the Defendants and
affect the question at issue
The
custom of untouchability is a part and parcel of the Hindu Law itself, which
courts of law have been called upon to administer and as the said custom has
been recognised in a number of cases the objection of the Defendants that it is
in the nature of an imposition by the higher classes on the lower classes
cannot stand
Order.
Plaintiffs’ suit is
dismissed. Each party to bear its own costs.
(Signed) V. R. SARAF, Sub-Judge
8th
January 1931.
இவ்வழக்கில்
டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பிரதிவாதிகள் , இந்து சாஸ்திரங்கள் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை
என இவ்வழக்கின்போது பேசியதைப் பார்க்கிறோம். மேலும் சாஸ்திரங்களை நீதிமன்றம் ஏற்கவேண்டியதும்
இல்லை எனச் சொல்வதையும் காண்கிறோம். நீதிபதியோ சாஸ்திரங்கள் தீண்டாமையை அங்கீகரிக்கின்றன
எனச் சொல்லியிருப்பதைக் காண்கிறோம். பிரதிவாதிகள் வேண்டுகோள் ஏற்கப்பட்டு வழக்கு தள்ளுபடியானதைக்
காண்கிறோம்.
5-11-2024
வணக்கம் பட்டாபி சார்,
ReplyDelete//மகத் நீதிமன்றத்தில் அம்பேத்கர் பெற்ற வெற்றி எப்படி தீர்ப்பில் எழுதப்பட்டது எனப் பார்க்க விழைவு எழுந்தது. அந்த வழக்கு தீர்ப்பை அம்பேத்கர் வரலாற்றை எழுதுகிறவர்கள் ( நான் பார்த்த சிறு அளவில்) எவரும் பின்னிணைப்பாக தராமல் செல்வதை உணர்ந்துள்ளேன்.// இதிலிருந்து
மகத் ஊரில் உள்ள சௌதார் குளத்தை பயன்படுத்துவது தொடர்பான வழக்குத் தீர்ப்பு கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்டேன்.
//செகண்ட் கிளாஸ் சப் ஜட்ஜ் தந்த 17 பக்க அளவிலான மகத் தீர்ப்பு ஒன்றை பார்க்க முடிந்தது.//
ஆனால் இந்த வாக்கியம் முரணாக உள்ளதே?
நான் எதையோ தவறு விடுகிறேன் . தாங்கள் சுட்டி காட்ட முடியுமா?