ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தெற்கு ரயில்வேயில் SRMU DREU ஆகிய இரு சங்கங்களும் அங்கீகாரம் பெற்றுள்ளன நல்வாழ்த்துகள். ரயில்வேயில் 2007ல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் அங்கீகார தேர்தல் விதிகள் வந்தன. டெலிகாமில் இவ்விதிகளையும் நாம் அப்போது சுட்டிக்காட்டிதான், ஒன்றுக்கு மேற்பட்ட சங்க அங்கீகாரம் என்பதை பெற்றோம். 2007ன் படி அங்கீகாரம் 5 ஆண்டுகள். 2012ல் முடிவடிந்த நிலையில் அடுத்த தேர்தலை 2013ல் நடத்தினர். இப்போது டிசம்பர் 4-6, 2024ல் நடந்த தேர்தல் 2019லேயே நடைபெற்று இருக்க வேண்டும். லேபர் கோடு பிரச்சனையை நிர்வாகம் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது. நீதிமன்ற வழக்குகள் உருவாயின. நிர்வாகம் தேர்தலை நடத்த சம்மதித்தது. ரயில்வே 17 ஜோன்களில் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக ரயில்வே வாரியம் அனைத்து வட்டார தேர்தல் முடிவுகளையும் தொகுத்து வெளியிடவில்லை. அது வந்த பின்னர்தான், வட்டாரவாரியாக ஒவ்வொரு சங்கமும் பெற்ற வாக்குகள், அனைத்திந்திய அளவில் தெரிய வரும். ரயில்வே போர்டு தேர்தலுக்கான கமிட்டியை நவம்பர் 2023ல் அமைத்தனர். 40 பதிவு செய்யப்பட்ட சங்க...