ரயில்வே தொழிற்சங்க தேர்தல்
தெற்கு
ரயில்வேயில் SRMU DREU ஆகிய இரு சங்கங்களும்
அங்கீகாரம் பெற்றுள்ளன நல்வாழ்த்துகள். ரயில்வேயில் 2007ல் ரகசிய வாக்கெடுப்பு முறையில்
அங்கீகார தேர்தல் விதிகள் வந்தன. டெலிகாமில் இவ்விதிகளையும் நாம் அப்போது சுட்டிக்காட்டிதான்,
ஒன்றுக்கு மேற்பட்ட சங்க அங்கீகாரம் என்பதை பெற்றோம்.
2007ன்
படி அங்கீகாரம் 5 ஆண்டுகள். 2012ல் முடிவடிந்த நிலையில் அடுத்த தேர்தலை 2013ல் நடத்தினர்.
இப்போது டிசம்பர் 4-6, 2024ல் நடந்த தேர்தல் 2019லேயே நடைபெற்று இருக்க வேண்டும். லேபர்
கோடு பிரச்சனையை நிர்வாகம் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தது. நீதிமன்ற வழக்குகள் உருவாயின. நிர்வாகம் தேர்தலை
நடத்த சம்மதித்தது. ரயில்வே 17 ஜோன்களில் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக
ரயில்வே வாரியம் அனைத்து வட்டார தேர்தல் முடிவுகளையும் தொகுத்து வெளியிடவில்லை. அது
வந்த பின்னர்தான், வட்டாரவாரியாக ஒவ்வொரு சங்கமும் பெற்ற வாக்குகள், அனைத்திந்திய அளவில்
தெரிய வரும்.
ரயில்வே
போர்டு தேர்தலுக்கான கமிட்டியை நவம்பர் 2023ல் அமைத்தனர். 40 பதிவு செய்யப்பட்ட சங்கங்களிலிருந்து
350 ஆலோசனைகள் பெற்று அவர்கள் தேர்தல் விதிகளை இறுதிப்படுத்தி சுற்றுக்கு விட்டனர்.
பெரும்பான்மை சங்கங்கள் EVMs Electronic
voting machine வழியே தேர்தல் நடத்தப்படவேண்டும்
என்றனர். நிர்வாகம் இம்முறை சாத்தியமில்லை என அவர்களை வாக்குப்பெட்டி தேர்தலை ஏற்கச்
செய்தனர். 2007 மற்றும் 2013 தேர்தல் அனுபவங்களை கணக்கில் கொண்டு செப்டம்பர் 2024ல்
final modalities வெளியிட்டனர்.
இன்னொரு
நடைமுறை என்னவென்றால், ஜோன் வாரியாக போட்டியிடும் சங்கங்கள் ரூ 50000 செக்யூரிட்டி
டிபாசிட் கட்டவேண்டும். 5 சதம் கூட வாக்கு எடுக்காத சங்கங்கள் டெபாசிட் தொகை இழப்பர்.
zonal
recognition என்கிற வகையில் தெற்கு ரயில்வே,
வடக்கு ரயில்வே, மேற்கு , கிழக்கு ரயில்வே , மெட்ரோ உள்ளிட்ட 17 ஜோன்களில் தனித்தனி
அங்கீகாரம் இருக்கும். இந்த தேர்தல் முடிவுகள் ஆங்காங்கே அறிவிக்கப்பட்டு ஜோன் வாரியாக
அங்கீகாரம் தருவர்.
அங்கீகார
விதிகள்
வாக்கெடுப்பு
ரகசிய முறை
மொத்த
வாக்காளரில் 30 சதம் அதற்கு மேல் பெறக்கூடிய சங்கங்கள் அங்கீகாரம் பெறுவர்.
ஒருவர்
30 சதம் பெற்று , மொத்த செல்லுபடி வாக்கில் 35 சதம் பெறும் வேறு சங்கம் இருக்குமாயின்
அதுவும் அங்கீகாரம் பெறும்.
இரு
சங்கங்கள் சமமாக வாக்குகள் பெற்று செல்லுபடி வாக்கில் 35 சதமும் எடுத்தால், குலுக்கல்
முறையில் ஒரு சங்கம் மட்டும் அங்கீகாரம் பெறும்
மேற்கண்ட விதிகள் படி எவரும் இல்லை எனில் செல்லுபடி
வாக்கில் 35 சதம் எடுக்கும் இரு சங்கங்கள் அங்கீகாரம் பெறுவர்.
இவை
எதுவும் இல்லா நிலையில் செல்லுபடி வாக்கில் 20 சதம் பெற்று அதிக வாக்குகள் பெறுபவர்
அங்கீகாரம் பெறுவர். இந்நிலையில் ஒரு சங்கம் மட்டுமே அங்கீகாரம் பெறும்.
செல்லுபடி
வாக்கில் எவரும் 20 சதம் கூட பெறவில்லையெனில் அந்த வட்டாரத்தில் எவருக்கும் அங்கீகாரம்
கிடையாது.
அங்கீகாரத்தை
எழுத்துபூர்வமாக காரணங்களை சொல்லி நீக்கும் அதிகாரம் வட்டார பொதுமேலாளருக்கு உண்டு.
எந்த
சங்கம் செல்லுபடி வாக்கில் 15 சதம் பெறுகிறதோ அவர்களுக்கு நோட்டீஸ் போர்ட், வாயில்
கூட்டம் நடத்துதல் போன்ற சலுகைகள் தரப்படும்.
தேர்தல்
கால நடத்தை விதிகள் உண்டு.
கடந்த
தேர்தல் 2013ல் நடைபெற்றது. அதற்கு முன்னர் முதல் தேர்தல் 2007ல் நடந்தது. தெற்கு ரயிலேவில்
சென்ற 2013 தேர்தலில் SRMU மொத்த வாக்களரில் 43.6 சதமும், செல்லுபடி வாக்கில் 46.8
சதமும் பெற்றது. SRES 23.3, 22.9 சதம் பெற்றது. DREU 23.7, 25.49 எடுத்தது. எனவே எஸ்
ஆர் எம் யு மட்டுமே அங்கீகாரம் பெற்றது.
2024
டிசம்பர் தேர்தலில் தெற்கு ரயில்வேயில் மொத்த வாக்காளர் 76653, செல்லுபடி வாக்குகள்
68740 டி ஆர் இ யு பெற்றவை 26151 அதாவது 34.116 சதம் பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது. அதே
போல எஸ் ஆர் எம் யு 26258 வாக்குகள் அதாவது 34.26 சதம் பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
மத்திய
அமைப்புகளான AIRF NFIR rayilee வாரியத்தால்
அங்கீகாரம் பெற வேண்டுமெனில் குறைந்தது 6 ஜோனலில் அங்கீகாரம் பெற வேண்டும். மொத்த செல்லுபடியான
வாக்குகளில் 15 சதத்தையும் பெறவேண்டும். 2013ல் 6க்கும் மேற்பட்ட ஜோன்களில் ஏ ஐ ஆர்
எஃப் என் எஃப் ஐ ஆர் பெற்று, 15 சதத்திற்கு
மேல் வாக்குகள் அகில இந்திய அளவில் பெற்று , ரயில்வே வாரிய அங்கீகாரத்தை அனைத்திந்திய
அளவில் பெற்றன.
இம்முறையும்
அவை வரலாம். முழுமையாக 17 ஜோன்களின் தொகுப்பு முடிவுகள் வந்தால் நாம் அதை அறியமுடியும்.
வெற்றி
பெற்றவர்க்கு நல்வாழ்த்துகள்
23-12-2025
Comments
Post a Comment