ஹிந்த் ஸ்வராஜ் – இந்திய சுயராஜ்யம்
தோற்றுவாயும் உள்ளடக்கக் கூறுகளும்-
6
6
ஹிந்த் ஸ்வராஜ் நூல் 20 இயல்களால்
அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் வாசகர்- ஆசிரியர் என்கிற கேள்வி பதிலாக அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 91 கேள்வி பதில்களை இந்நூலில் காந்தி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளார்.
முதல் 5 அத்தியாயங்களில் 10, 3, 2, 7, 7 என 29ம், அடுத்த 5ல் 3, 3, 6, 8, 4 என 24ம்,
அடுத்த 5ல் 2, 1, 2, 6, 2 என 13ம், இறுதி
5ல் 2, 7, 5, 5, 6 என 25ம் ஆக மொத்தம் 91 கேள்வி
அவற்றிற்கான பதில் விளக்கங்களை நாம் பார்க்கிறோம்.
பல ’தீம்களில்’ காந்தி நூலில் விவாதித்துள்ளார்.
பத்திரிகையாளர் பணி என்ன- அவை எப்படி
இருக்கின்றன?
காங்கிரசின் பணியை எப்படி பார்க்கவேண்டும்-
முன்னோடியாக வேலை செய்த தலைவர்களை மதியாமல் இருக்கலாமா?
வங்கப்பிரிவினை விளைவுகள் என்ன?
மக்களின் அச்சம் போனதா, சூரத்தில் நடந்த பிளவு
அதிருப்தி இருப்பதன் அவசியம்
எது சுயராஜ்யம்- இங்கிலாந்தை அனுப்பிவிட்டால்
அதுதானா? இல்லையெனில் எது?
இங்கிலாந்தின் நிலை என்ன? அங்கு
நாடாளுமன்றம், உறுப்பினர், பிரதமர் குணாதிசயங்கள்
யாவை?
இந்தியா தன்னை இழந்தது ஏன்? பிரிட்டிஷால்
ஏன் நீடிக்கமுடிகிறது?
ரயில்வே போன்ற விரைவு போக்குவரத்து
வரமா சாபமா ?
டாக்டர்களும் வக்கீல்களும் தெய்வப்பிறவிகளா?
மதம் பற்றிய புரிதல் என்ன? இந்து
முஸ்லீம் பகை நிரந்தரமான ஒன்றா – பசுவதை தடுக்க முஸ்லீம் சகோதரனின் கொலை அவசியமா?
எது உண்மையான நாகரிகம்? சந்தோஷம்
என்பது பணம் மற்றும் செல்வ நிலையா அல்லது மனநிலையா? எல்லா நாகரிகத்திலும் குறைகள் போதாமைகள்
இருக்கின்றனவே- அனைத்து நாகரிகங்களும் சோதனையில் தானே இருக்கின்றன
வரலாறு என்பதை எப்படி புரிந்து கொள்வது?
வெறும் யுத்தங்கள் தகராறுகள் தானா? ஒன்று இதுவரை நடக்கவில்லை என்பதால் இனி எப்போதும்
நடவாதா?
இந்திய விடுதலைக்கான வழி என்ன? கொலை
வழி ஏன் கூடாது?
தேசபக்தி என்பது எது?
மிருக பலமா ? அன்பு சாத்வீக எதிர்ப்பா?
பெட்டிஷன் போதுமா ? அதற்கான துணை
நிற்கும் மனித சக்தி வேண்டாமா?
பெரும்பான்மை என்பதே எப்போதும் சரி
என்பதும் மூட நம்பிக்கையில்லையா? சீர்திருத்தங்கள் பல சிறுபான்மையினர் உழைப்பாலேயே
வந்துள்ளதே..
உரிமைக்கான முன்னுரிமையா? கடமைவழி
உரிமை அடைதலா?
சாத்வீக எதிர்ப்பு என்பது தான் உணர்ந்த
ஒன்றின் நியாயத்திற்காக தன்னை இழக்கவும் சுயவதையும் ஏற்பதுமான வழிதானே? அங்கு கொலைவழி
நியாயம் என ஏதும் இல்லை
சாத்வீக எதிர்ப்பு கோழையின் ஆயுதமல்ல..ஆன்ம
பலம் – அச்சமின்மை. கொலை செய்வது என்பதைவிட மேலான காரணம் ஒன்றிற்காக உயிர் துறப்பதே
சாத்வீக எதிர்ப்பின் தன்மை
சாத்வீக எதிர்ப்பு சத்தியாகிரகிக்கு
கற்பு நெறி, ஏற்றுக்கொண்ட வறுமை, உண்மையை அறிதல் சொல்லுதல், அச்சமின்மை என்கிற குணங்கள்
வேண்டும்
எவர் ஒருவருக்கும் முற்றுரிமை என
ஏதும் இருக்கமுடியுமா? எனது உண்மை என்பது போல் பிறரின் உண்மை என்பதும் இருக்கும் என
உணர்தல்
அவர் அப்படி செய்கிறாரே- நான் செய்தால்
அவரும் செய்வாரா என்கிற கேள்வியை விடுத்து, என் மனதிற்கு சரி எனவே செய்கிறேன். சரி
என்பதால் பரிந்துரைக்கிறேன் என்கிற பகுத்தறிவு
எது கல்வி ? எழுத்தறிதலா ஆங்கிலம்
கற்றலா விஞ்ஞான பாடங்களா?
சுரண்டலுக்கான இயந்திரங்கள் ஏன் ? உழைப்பவரை அந்நியப்படுத்துவது
ஏன்? சமூகம் சார் இயந்திரங்களின் பொருத்தப்பாடு-
உள்ளூர் தொழிலை வீழ்த்தாத இயந்திரம்- மனித கை கால்களை பயன்படுத்த உதவும் இயந்திரம்
போன்ற ஏராள உரையாடல்களை காந்தி இந்நூலில் பெருக்கியிருப்பார்.
Comments
Post a Comment