மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு
மகாத்மா
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பிப்ரவரி 2006லிருந்து ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகிறது. மிக பின்னடைந்த 200 மாவட்டங்களில் மன்மோகன் அரசால் முதலில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் 2008ல் முதலில் கூடுதலாக 130 மாவட்டங்களுக்கும்
, பின்னர் நாடு முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டது.
நபர்
நாட்கள்
2023
வரை ஏறத்தாழ 4300 கோடி மனித நாட்கள் (பெர்சன் டேஸ் ), இச்சட்டப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது
என்கின்றனர். ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை தரவேண்டும். முடியவில்லை என்றால் வேலையின்மை
படியை தரவேண்டும் என இச்சட்டம் சொல்கிறது.
கேட்க
4300 கோடி நாட்கள் பெரிதாக தோன்றலாம். இந்தியாவில் அன்றாட உழைப்பு சக்தி என்பது குறைந்தபட்சம்
80 கோடி மக்கள். அதாவது தினமும் 80 கோடி நபர் நாட்கள்- 8 மணிநேர கணக்கில். அரை நாள், குறை மணி உழைப்பு என எப்படி பார்த்தாலும்
இந்த 80 கோடி நபர் நாட்கள் தினமும் இருக்கலாம். இப்படிப் பார்த்தால் 100 நாட்களுக்கு
இவர்கள் அனைவரும் சேர்ந்து 8000 நபர் நாட்கள்/ ஆண்டொன்றுக்கு என வரும்.
ஊரக
வேலை வாய்ப்பில் 10 கோடி உழைப்பாளர் வேலை பார்த்திருந்தால் அவர்கள் தினம் 10 கோடி நபர் நாட்களை தருகின்றனர்.
ஆண்டிற்கு 1000 கோடி ( 100 நாட்களில்) நபர் நாட்களை தருவர். இப்படி கணக்குப் பார்த்தால்
அரசாங்கம் தருகிற கணக்குப்படி இத்திட்டம்
4 ஆண்டுகள் 1 மாதமே நபர் நாட்களை தந்துள்ளதா என்ற கேள்வி வரவேண்டும். திட்டம் வந்து
17 ஆண்டுகள் (2023ல்) ஆன நிலையில் , இந்த 10 கோடி உழைப்பாளரும் இந்த 17 ஆண்டுகளில்
17000 கோடி நபர் நாட்களை தந்திருக்க வேண்டுமே என்கிற கேள்வி வருகிறது.
ஊதியம்-
விலைவாசி ஈடு
எவ்வேலைகள் என்பதை கிராம சபாக்கள் தான் திட்டமிடவேண்டும்-
என்ன வேலை என்பதை சொல்லவேண்டும். ஒதுக்கப்படும் செலவில் 60 சதம் ஊதியம், 40 சதம் உபகரண
செலவு எனப் பிரித்துள்ளனர்.. மூன்றில் ஒரு பங்காவது பெண் தொழிலாளர் இருந்திட வேண்டும்.
ஊதியப்பட்டுவாடா
முறைப்படுத்த APBS (Aadhaar payment bridge system) என்கிற டிஜிட்டல் வழி செய்துள்ளனர். 14.30 கோடி
தொழிலாளரில் 12.10 கோடி இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சொல்கிறது. இந்த 14
கோடியை எடுத்து நாம் கணக்கிட்டால் நபர் நாட்கள் மேலும் கூடியிருக்க வேண்டும்.
பட்ஜெட்டில்
ஆண்டுதோறும் எஸ்டிமேட் , திருத்தப்பட்ட மதிப்பீடு
எனத்தருகின்றனர். முக்கியமான விடயம் எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டது என்கிற தகவல்தான்.
திட்டம்
வந்த 2006-07ல் 8694.25 கோடி என்றால் , மன்மோகன் ஆட்சி வெளியேறிய 2013-14ல்
32994.12 கோடியை ரிலீஸ் செய்துள்ளனர். மோடி அவர்களின் 2014-15ல் 32977.43 கோடி என வெறும் 3 கோடியை கூட்டி நிதி கொடுத்துள்ளனர். பின்னர்
அவரது ஆட்சியின் 2018-19ல் 61829.55 கோடியை வெளியிட்டனர். 2020-21 கொரானா காலத்தில்
111170.86 கோடி என பட்ஜெட் எஸ்டிமேட்டை விட
50 ஆயிரம் கோடி அவர்கள் கூடுதலாக தரவேண்டிய சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 21-22ல்
98467.85 கோடியையும், 2022-23ல் இதில் 8000 கோடியை குறைத்து 90810 கோடியை மோடி ஆட்சி
ரிலீஸ் செய்தது. ஆண்டு செல்ல செல்ல பண மதிப்பு விலை உயர்வால் வீழும் என்பதையும் சேர்த்து
புரிந்துகொள்ள வேண்டும்.
2023-24ல்
மாநிலவாரியாக இதில் வேலைபார்க்கும் அன்ஸ்கில்ட் தொழிலாளர்க்கு நாள் ஊதியம் எவ்வளவு
எனகிற பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தென் மாநிலங்களை எடுத்தால் ஆந்திரா ரூ 272, கர்நாடகா 316, கேரளா 333, தமிழ்நாடு
294, தெலங்கானா 272, புதுச்சேரி 294 எனப் பார்க்கிறோம். குஜராத்தில் 256, மபியில்
221, ராஜஸ்தானில் 255, உபியில் 230, மேவ 237 என தெரிந்து கொள்கிறோம். ஏன் வெவ்வேறு
மாநிலங்களில் வெவ்வேறு நாள் ஊதியம் எனக் கேட்டால், விலைவாசித் தன்மையால் மாறுகிறது
என்கின்றனர்.
ஆண்டுதோறும்
’லேபர் ப்யூரோ’ வெளியிடும் விவசாயத் தொழிலாளர் கணக்கீட்டின் படி ஈடு ஊதியம் மாற்றப்படுகிறது. சந்தையின் விலைவாசிக்கேற்ப
ஈடு கணக்கீடு இல்லை என்பதை அரசாங்கம் எழுத்துபூர்வமாக
ஏற்றுக்கொண்டும், இதில் நியாயம் வேண்டி ஏற்பாட்டை செய்யவில்லை என நாம் உணரமுடியும்.
மகேந்திர
தேவ் கமிட்டி, டாக்டர் நாகேஷ் சிங் கமிட்டி பரிந்துரைகளை அரசாங்கமும் சொல்கிறார்கள்.
விலைவாசி ஈட்டிற்கான அடிப்படை ஆண்டான 2010-11 மர்றும் அடிப்படை ரூ 100 என்பதை மாற்றாமல்
, இதில் நியாயம் கிடைக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.
இமாச்சல்,
ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் சொல்லப்பட்ட ஊதியத்துடன் தங்கள் பங்கை top up
செய்து தருகிறார்கள். ஒரிஸ்ஸா 237 ஊதியம் என்றால் தன் பங்காக 115 போட்டு ரூ 352 வழங்குவது சிறப்பு. தமிழ் நாட்டில் இது இன்னும் (டாப் அப்) கோரிக்கையாகக்கூட எழவில்லை.
நிலுவை
பிற குறைபாடுகள்
ஊதியம்
நிலுவையாகி மிக காலதாமதம் ஆகிறது, உபகரண செலவும் காலத்தில் தரப்படுவதில்லை என்கிற புகார்களை
அரசாங்கம் மறுக்கிறது. அவ்வளவாக இல்லை என பதில்
சொல்கிறது. குஜராத்திற்கு நிலுவை இருப்பதில்லை. தமிழ்நாடு, உபிக்கு நிலுவை அதிகம் இருப்பதைக்
காண்கிறோம். மேற்கு வங்கம் நிலுவை குறித்து
வெளிப்படையாக விமர்சித்தது. FTO பண்ட் டிரான்ஸ்பர்
ஆர்டர் திறன் 2022ல் 92 சதமெனில், 2023ல் 99 சதம் என்கிறது அரசு.
ஆதார்
இணைப்பு ஊதியம் வழங்குதலிலும் ஏராள குறைகள்,-குறித்த நபருக்கு போகிறதா என்கிற புகார்கள்
இல்லாமல் இல்லை. புகார்கள் இருந்தால் சரி செய்ய நடவடிக்கை என அரசு சொல்கின்றனர். எவ்வளவு
புகார்கள் நிவர்த்தியாகிவுள்ளது என்கிற விவரம் இருந்தாலும், ஏன் புகார்கள் மிகக் குறைவாக
உள்ளது எனத் தெரியவில்லை. மே 2023ல் அவர்கள் கொடுத்த விவரத்தில் 87 சதம் ஊதியம் சரியான
கணக்கிற்கு சென்றதாக உறுதிபடுத்திகின்றனர் .
வேலையின்மை
அலவன்ஸ் எவ்வளவு என்பதற்கு முதல் 30 நாட்கள் எனில் ஊதியத்தில் கால்பங்கு என்றும், தொடர்ந்தால்
அரைப்பங்கு என்றும் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 2022-23ல் 7 பேர் மட்டுமே வேலையின்மை
படியை பெற்றனர். கர்நாடாகாவில் 1077, ராஜஸ்தானில் 902 என அதிகம் இருப்பதைக் காண்கிறோம்.
வேலை
முடிந்து 15 நாட்களில் ஊதியம் போடவில்லையெனில், ஈடாக ஒவ்வொரு நாளுக்கும் நிலுவையில்
5சதம் சேர்த்து தரப்படவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் நிலுவை பிரச்சனை இல்லாமல்
இருக்கிறது. ஆனால் கர்நாடகா, உபி, மராட்டியத்தில் அதிகம் இருப்பதைக் காண்கிறோம்.
குறைகளை
தெரிவிக்க பஞ்சாயத்து மட்டத்தில் ரிஜிஸ்டர் இருக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால்
பின்பற்ற விடுகிறார்களா எனத் தெரியவில்லை. நாடு முழுக்க 2023ல் 2845 குறைகள்தான் வந்ததாக
சொல்லும்போதே, அதன் லட்சணம் புரிந்து விடும். லஞ்சப் புகார்கள் 932 தானாம். போலி வேலை
அட்டை என்கிற பிரச்சனையும் ஆங்காங்கே பேசப்படுகிறது.
இவைகளை
கண்டறிந்து சொல்லக்கூடிய ஆடிட் CAG அறிக்கை
2013க்கு பின்னர் அதாவது மன்மோகன் ஆட்சிக்குப் பின்னர், மோடி ஆட்சியில் ஒருமுறைக் கூட
நடைபெறவில்லை என்பது நல்ல நடைமுறையா என கேள்வி எழுந்து வருகிறது. ஆனால் மோடி அரசு சோசியல் ஆடிட் 2016ல் நடந்ததாக சொல்கின்றனர்.
சி ஏ ஜி ஆடிட் இருந்தால் , சில விவரங்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும்.
இந்திய
ஊரக மக்களின் நம்பிக்கையாக இத்திட்டம் மேலும் செழுமைப் படுத்தப்படவேண்டும். ஓராண்டிற்கு
அல்லது ஈராண்டிற்கு ஒருமுறை நாட்கள் 100க்கு மேல் – குறிப்பிட்ட சதம் குறைந்தது ஆண்டிற்கு
என நாட்கள் உயர்த்தப்படவாவது வேண்டும். அதேபோல்
தின ஊதியம் (ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டாலும்), என்பதும் கூடுதலாக மாறுவதற்கு உரிய
ஏற்பாடு வேண்டும். மாநில அரசாங்கங்களும் தங்களால் முடிந்த ’டாப் அப்’ செய்ய முடிந்தால்,
இத்தொழிலாளர் வாழ்வில் கொஞ்சம் முன்னேற்றம் வரலாம்.
8-12-2024
Comments
Post a Comment