New E Book Founding Mothers of Indian Republic
முன்னுரை
இந்திய நாடாளுமன்ற மக்களவை 2024
டிசம்பர் 13, 14 இரு நாட்களில் ’இந்திய அரசமைப்பு சிறப்பின் 75 ஆண்டுகள்’ விவாதம் ஒன்றை
நடத்தியது. சில மணி நேரம் விவாதத்தை கவனிக்க முடிந்தது. பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும்
பாபசாகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பை பேசினர். இன்னும் கூடப்போய் அம்பேத்கர்
நினைவை எவர் போற்றுகிறோம், அவர் உழைப்பால் உருவான அரசியல் அமைப்பு சட்டத்தை எவர் உயர்த்திப்பிடிக்கிறோம்,
எவர் பாழ்படுத்தினோம்- பாழ்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிற பேச்சுப்போட்டியும் இருந்தது.
அவரவர் அரசியல் கணக்கு தேவை அடிப்படையில் உரையை பொதுவாக அமர்த்திக்கொண்டதையும் காணமுடிந்தது.
மறைந்த ஆந்திரா தலைவர் என் டி ராமாராவ்
அவர்களின் மகள் திருமதி புரந்தேஸ்வரி தன் உரையில் சற்று மாற்றாக, அரசமைப்பு உருவாக்கத்தில்
பெரும் பங்காற்றிய மகளிர் குறித்து பேசியது என் மனதில் சென்றது. அப்படி ஒப்பற்ற பங்களிப்பை
செய்த 15 மகளிரை அவர் Founding Mothers
Of Indian Republic என அழைத்து பெருமை செய்தார்.
இத்தலைப்பை அவர் வேறு இடத்திலிருந்து பெற்றதை
நான் கண்ணுற்றேன்.
இந்திய அரசமைப்பு அவையில் இருந்த
தாட்சாயினி வேலாயுதம் பெயரில் பெண்ணிய குழு ஒன்று இணையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அவர்களது இணையத்தில் அவையிலிருந்து செயல்பட்ட அந்த 15 தாய்மார்கள் குறித்து தனித்தனியாக
செய்தி தொகுப்பை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பாலின சமத்துவ போராட்டத்திற்கான சட்டப்
போராட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், உச்சநீதிமன்ற பெண் ஆளுமைகள் என பல அம்சங்களை தங்களது
இணையத்தில் வைத்து டிஜிட்டல் சேவை செய்து வருகின்றனர்.
இந்த இணையம் தனித்தனியாக கொடுத்துள்ள
விவரக்குறிப்புகளை இணைத்து ஒரே நூலாக- மின் புத்தகமாக மாற்றி பொதுவெளியில் வைத்தால்
என்ன என்ற சிந்தனை தூண்டி, அதற்கான சிறிய உழைப்பை கொடுத்துள்ளேன். இங்கு நான் செய்திருப்பது dvda மின்கிடங்கில்
தனித்தனியாக இருந்தவற்றை ஒருசேர தொகுத்து ஒரே இடத்தில் மின் புத்தகமாக மாற்றிக் கொடுத்தது
மட்டுமே. ஒன்றாக சேர்த்து பார்க்கும்போது, இப்பெரு மக்களின் தனித்த பங்களிப்பை உணரமுடியும்.
அரசமைப்பு சட்ட உருவாக்க தந்தை என நாம் அறிவோம். அரசமைப்பு உருவாக்க கட்டுமான தந்தையர் Founding Fathers எனப் பேசப்பட்டதை நாம் உணர்ந்திருக்கலாம். Founding Mothers எனப் பேசப்படவேண்டிய 15 தாய்
ஆளுமைகள் குறித்த குறிப்பு தொகுப்பாக இதைப் பார்க்கலாம்.
அரசமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கர்
பங்களிப்பு ஏராளம் பேசப்பட்டுள்ளது. அப்படி பேசப்பட்டதும் – பேசப்படவேண்டியதும் சரியானவையே.
அதேபோல் நேரு கமிட்டி- கராச்சி தீர்மானம்- நேருவின் நோக்கத் தீர்மானம் போன்றவை ஓரளவிற்கு
பேசப்பட்டுள்ளன. நான் பார்த்த அளவில் ’அரசமைப்பும்
நேருவும்’ என புத்தகம் ஒன்று வந்துள்ளதே தவிர விரிவான ஆய்வுகள் இல்லை. மூல நகலை உருவாக்கிய
பின் என் ராவ் குறித்து கொஞ்சம் பேசப்பட்டுள்ளது. படேல் பங்களிப்பு கூட அங்கொன்றும்
இங்கொன்றுமாக பேசப்பட்டுள்ளது. கோபால்சாமி அய்யங்கார் , அல்லாடி போன்றவர் உரைகள் சிறிய
அளவு தனி நூல் ஒன்றில் கிடைக்கின்றன. அரசமைப்பு சட்ட உருவாக்கம் - அரசியல் அமைப்பு
சட்ட சிறப்புகள் குறித்து ஏராள நூல்கள் வந்துள்ளன. மேலும் வரக்கூடும்.
7000 பக்க அளவில் அரசமைப்பு சட்ட
அசெம்பிளி விவாதம் பல வால்யூம்களாக, நாள் அடிப்படையில் முழுமையாக இணையத்தில் கிடைக்காமல்
இல்லை. எவர் யார் என்ற விவரம் கூட கிடைக்கும். ஆனால் உறுப்பினர்கள் பங்கென்ன, எதில்
எப்படி கருத்தை ஒருவர் வெளிப்படுத்தினார் என , சில முக்கிய ஆளுமைகள் பற்றிய தனித் தொகுப்பு
என ஏதுமில்லை. நேரு , படேல் போன்றவர்க்கு கூட எங்கெல்லாம். எப்போதெல்லாம் தலையிட்டு
என்ன பங்களிப்பு செய்தனர் என தனித்த நபர்வாரியான தொகுப்பு இல்லை.
காங்கிரசின் 50 ஆண்டுகளுக்கு மேலான
நேரு முதல்- மன்மோகன் சிங் வரையிலான ஆட்சி இதை செய்யத்தவறி விட்டதாக தோன்றுகிறது. பின்
வந்த பாஜக ஆட்சியும் இதற்கான முனைப்பைக் காட்டவில்லை. தமிழ்நாட்டிலும் , ’அரசமைப்பு
அவையில் தமிழர் பங்களிப்பு’ என எந்த தொகுப்பும் வரவில்லை. 75 ஆண்டுகால தமிழக முதல்வர்கள்
ராஜாஜி காமராஜ் பக்தவச்சலமானாலும், தொடர்ந்த திராவிட முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி,
எம் ஜி ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் வரை இது குறித்து முனைப்பைக் காட்டியதாக
உணரமுடியவில்லை.
ஆனால் இங்கு 15 தாய்மார்களின் அரசமைப்பு
விவாத பங்களிப்பை பெரும் கிடங்கிலிருந்து தேடி நமக்கு டிவிடிஏ தாட்சாயினி மின்கிடங்கு
குழுவினர் அளித்துள்ளனர். அதை ஒருசேர தொகுத்து தரும் சிறிய வேலை மன நிறைவைத் தருகிறது.
தொகுப்பு முழுமையாக ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் மொழி பெயர்ப்பாளர் கண்ணுக்கு அகப்பட்டு
அவர்கள் கைப்பட்டு தமிழில் வரும் எனில் இன்னும் கூடுதலான வாசிப்பாளருக்கு இத்தொகுப்பு
போய் சேரலாம்.
இந்த 15 தாய்மார்கள் குறித்து சமீபத்தில்
ஆஞ்சலிகா மற்றும் சத்யாவாலி என இருவரின் ஆய்வில் ஆங்கில நூல் ஒன்றும் வந்துள்ளது பாராட்டிற்குரியது.
Hope we can cherish the legacy
of our Founding Mothers of Indian Republic
15-12-2024 - ஆர். பட்டாபிராமன்
Index
1. Ammu Swaminathan
2. Annie
Mascarene
3.
Begum Azaz Rasul
4.
Dakshayini Velayudham
5. Durgabai
Deshmukh
6. Hansa
Jivraj Mehta
7. Kamla
Chaudhary
8. Leela Roy
9. Malati
Chaudhary
10. Purnima
Banerjee
11.
Rajkumari Amrit Kaur
12. Renuka
Ray
13. Sarojini
Naidu
14. Sucheta
Kripalani
15. Vijaya
Lakshmi Pandit
https://archive.org/details/founding-mothers-of-indian-republic-book
Comments
Post a Comment