https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, October 24, 2011

கோயம்புத்தூர் CWC

கோவையில் மத்திய செயற்குழு- (தற்போது தேசிய செயற்குழு என்று அழைக்கப்படுகிறது) அக் 15-17 வரை திரட்சியான தோழர்கள் பங்கேற்புடன் நடந்து முடிந்துள்ளது. தோழர்கள் உழைப்பிற்கு உரிய பாராட்டு கிடைத்துள்ளது. சிறப்பான உபசரிப்பு, வசதியான தங்குமிடம், சுவையான உணவு பாதி வெற்றியை தந்துவிடும். உருவம் வெற்றி பெற்றுவிட்டது. உள்ளடக்கம் போதுமான உற்சாகத்தை தரவில்லை. தலைமையின் பக்குவம், சிந்திக்கும் ஆற்றல், பொறுப்புணர்வு, எதிர்ப்புகளை சாமாளிக்கும் ஆற்றல் பொறுத்து தான் உள்ளடக்க வெற்றி அமையும். கிளைமட்ட உணர்வில் மாநிலத் தலைவர்கள் நடந்து கொண்டால் emotional decisions தான் வரும்.

நான் அக் 13 முதல் 18 வரை இருந்தேன். இருக்கின்ற காலத்தில் உதவியாக நடந்து கொண்டேன்

Saturday, September 10, 2011

Arundhati Roy 100 mts Speech on Democracy

படிக்கும் பழக்கம்

எனது தாத்தா காங்கிரஸ் தலைவர்கள் மீது மரியாதை கொண்டவர். ராஜாஜி தனி. நேரு, காமராஜ், பக்தவச்சலம் குறித்த பேச்சுக்கள் நிலவும்.பள்ளிகூட நாட்களில் நேருவின் இந்தியாவை கண்டுணர்ந்தேன் புத்தகம் இருந்ததும் அவ்வப்போது (ஓ வி அளகேசன் தமிழில் என கருதுகிறேன்) படித்ததும் நினவிற்கு வருகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் படித்ததாக நினவு. மிரர் என்ற ஆங்கில பத்திரிகை ஆர்வத்துடன் படிப்போம். குமுதம், ஆனந்த விகடன் போன்றவை தவறான பத்திரிகைகள் என்று எழுந்த எண்ணம் இதுவரை மாறவில்லை. சுதேசமித்ரன், அமெரிக்கன் ரிபோர்ட்டர் போன்றவை கிடைக்கும். இந்து, எக்ஸ்பிரஸ் அவ்வப்போது தான் வாசிப்போம்.

திருவாரூரில் வேலைக்கு சேர்ந்த பின் சிந்தனையில் பெரும் மாற்றம். பின்னர் படிப்பது தொழிலாகவே மாறியது. மார்க்சிய - பெரியாரிய எழுத்துக்கள் என எராளம் உள் நுழைந்தது.