டெரி ஈகிள்டன் அவர்களை எனக்கு பேரா வி இராமசாமி தான் அறிமுகப்படுத்தினார். எங்கள் இளம் கம்யூனிஸ்ட்கள் குழுவில் சற்று மூத்தவர் தோழர் இராமசாமி. அப்போது அவருக்கு மணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். எங்களுடன் எங்களை ரசித்து கொண்டாடி பல மணிகள் ஒன்றாக இருப்பார். தோழர் தா பாண்டியன் , ஹிரன் முகர்ஜி கட்டுரை எனில் உற்சாகம் பொங்கப் பேசுவார். திரு வி க அரசு கல்லூரியில் முற்போக்கு சிந்தனை கொண்ட பல பேராசிரிய பெருமக்கள் இராமசாமி கூட நின்றனர். மறைந்த பேரா அறிவழகன் , சுவாமிநாதன், பாலு, பழநி, கெளதமன் என தொடர் பேராசிரிய தலைவர்கள் இருந்தனர். வங்கி தொழிற்சங்கத் தலைவர் ரகுவின் அறை நல்ல சந்திப்பு விவாத இடமாக இருக்கும். ரகு இப்போது பொள்ளாச்சியில் அதே துடிப்புடன் செயலாற்றி வருகிறார். பேரா இராமசாமி உதவியால்தான் அங்கு சமூகவியல் பேரவை துவங்க முடிந்தது. தோழர் வெங்கட் ராமன் ( மணியரசன் தோழர்) தோள் கொடுத்தார். பின்னர் பேரா கெளதமன் பொறுப்பேற்று நடத்தினார். பேரா இராமசாமியும் நானும் இணைந்து ராஜிவ் காலத்தில் கொணரப்பட்ட கல்விக்கொள்கை குறித்து பிரசுரம் எழுதி வெளியிட்டோம். மக்ரோத் கமிஷன், யுஜிசி பரிந்துரைகள் குறித்து