Skip to main content

Posts

Showing posts from October, 2017

புரட்சிக்கு பின்னர் லெனின் Lenin as Premier

புரட்சிக்கு பின்னர் லெனின் ( ஆட்சியும் மறைவும் )                                                - ஆர்.பட்டாபிராமன் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு இயக்கங்களும் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களும் நடத்திவருகிறோம் . அக்டோபர் புரட்சி அல்லது புதிய காலண்டர்படி நவம்பர் 1917 புரட்சி நடந்த சூழல் குறித்தும் 1905 முதல் 1917 வரை நடந்த எழுச்சிகர போராட்டங்கள் , ருஷ்யாவில்   சோசலிச   புரட்சிகர சக்திகள் மூன்று பெரும்பிரிவுகளாக பிரிந்து செயலாற்றியமை குறித்தும் ஏராள புத்தகங்கள் ஆவணங்கள் வந்துள்ளன . மென்ஷ்விக் , சோசலிச புரட்சிகர கட்சிகளைப்பற்றிய பல ருஷ்ய ஆவணங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கப்பெற்றால் மேலும் சரியான புரிதலை நாம் பெறமுடியும் . அதிகாரபூர்வமான போல்ஷ்விக் ஆவணங்கள் , அவர்களை விமர்சிக்கும் ஆவணங்கள் கிடைக்கின்றன . ருஷ்யாவில் 1905-1917 ஆண்டுகளில் முடியாட்சிக்கும் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு அரசியல் சட்டமுறைகளை உருவாக்கும் கான்ஸ்டிட்யூஷனிசம் நடைமுறை கோரிக்கைக்கும் இடையே ஆன போராட்டங்கள் நடந்தன . டூமா மற்றும