Skip to main content

Posts

Showing posts from July, 2024

கலைந்த கனவு சோவியத் 1960ல் போட்ட பட்ஜெட் ஒன்றில்..

  கலைந்த கனவு முன்னர் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்த சோவியத் ( சோசலிச கட்டுமான சோதனை அல்லது அவ்வாறு சொல்லப்பட்ட ஒன்று) வீழ்ந்தது உலக முழுதும் கம்யூனிஸ்ட்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட்கள் உட்பட பலரும் தங்களுக்குள் விவாதித்து , சோசலிச கட்டுமான மாடல் ஒன்றின் தோல்வி என சற்று ஆறுதல் அடைந்து தங்களை மீட்டுக்கொள்ள முயற்சித்தனர். சோவியத் சோசலிச மாடல் குறித்த இடுகை அல்ல இங்கு நான் எழுத வருவது. பட்ஜெட் கால மனவோட்டத்தில், அந்தக் கால சோவியத் பட்ஜெட் போட்டனரா, 5 ஆண்டு திட்டப்படி பட்ஜெட்டை எப்படி போட்டனர் எனப் பார்க்கத் தோன்றியது. சிரமம் அதிகமில்லாமல் 1960 க்கான அவர்கள் பட்ஜெட்டை ஆங்கில வாசகங்களுடன் பார்க்க முடிந்தது. ஸ்டாலின் மறைவு அவர் ஆட்சிக்காலம் மீதான புகார்கள் , குருசேவ் அதிபர் கால சூழலில் அப்பட்ஜெட்டை சுப்ரீம் சோவியத்தில் , அவர்களின் நிதி அமைச்சர் அக் 27, 1959ல் வைத்துள்ளார். நம்ம இந்தியா பட்ஜெட் போலத்தான் அங்கும் எங்கிருந்து வருவாய் எவ்வளவு பெற உத்தேசம் ( சென்ற ஆண்டில் 1959ல் பெற்றது எவ்வளவு), எதில் எவ்வளவு செலவு ஒதுக்கீடுகள் என கணக்கு சொல்லியுள்ளனர். எ

பட்ஜெட் செலவு முகம்

                                                         பட்ஜெட் செலவு முகம்  பட்ஜெட் ஆவணங்கள் உருவாக்கத்தில் நூற்றுக்கணக்கானவர் பெரும் உழைப்பை நல்க வேண்டியிருக்கிறது. எந்த அரசாங்கம் இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளை அவர்கள் செய்துரவேண்டியிருக்கும். பட்ஜெட்டில் அரசியல் கணக்கு இருக்கிற கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கவே செய்யும். இம்முறையும் அது வெளிப்படாமல் இல்லை. ஆனால் பட்ஜெட் முற்றிலுமான அரசியல் மட்டுமல்ல. அதில் நிறைய கணக்கு இருக்கிறது. பல மணி நேர விவாதங்கள் - வர்க்க இழுப்புகள்- அறிவுஜீவிகளின் மனச் சாய்வுகள் , வாக்கு வங்கி கணக்கு என பல அம்சங்கள் ஊடும் பாவுமாக இருக்கும். பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்பதானாலும், ஆஹா இனி ஏழை எவருமில்லை அமிர்த காலம் என பேசுபவரிடமும் விவாதிக்க ஏதும் இருக்காது. பட்ஜெட் ஆவணங்களை படிப்பதற்கு பொறுமை வேண்டும்.  கீழ்கண்ட ஓரிரு பக்கங்களே போரிங்-சோர்வு தரும் என நாம் நினைக்கலாம். சம்பளம் வாங்கினாலும் கூட இந்த போரிங் வேலையைத் தான் நூற்றுக் கணக்கானவர்  பல மாதங்கள் உட்கார்ந்து தயாரிக்கிறார்கள். அவர்கள் உழைப்பும் உழைப்புத்தான். வெளித்தெரியும் முகம

பட்ஜெட் குறித்து

                                                        பட்ஜெட்டும் மாநில ஒதுக்கீடும் பட்ஜெட் குறித்து பல ஆவணங்களை இண்டியாபட்ஜெட் இணையத்தில் தேடுபவர்களால் பார்க்கமுடியும். நிதி அமைச்சர் பட்ஜெட் உரை 90 நிமிடம் என்பதில் கொண்டுவரமுடியாத ஏராள விவரங்கள் அந்த ஆவணங்களில் காணப்படும்.  வழக்கம்போல் பட்ஜெட் குறித்து ஆளுங்கட்சிக்காரார்கள் கொண்டாடுவதும், எதிர்கட்சியினர் விமர்சிப்பதும் இம்முறையும் நடந்து வருகிறது. அமிர்தம் என ஆள்வோரும், நாற்காலி காப்பாற்ற மட்டுமே என எதிர்கட்சி கேலியும் பார்த்து வருகிறோம். இந்த ஆவணங்கள் பல நூறு பக்கங்கள் கொண்டவை. பலரது உழைப்பால் தயாரிக்கப்பட்டவை. புள்ளி விவரங்களின் நேர்மை குறித்து நாம் சொல்லவேண்டும் என்றால் , வேறு நம்பிக்கையான மாற்று விவரங்கள் கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஊடகங்களில் மேலெழுந்த விவாதமும், சில ஆங்கில ஊடகங்களில் நிபுணத்துவர்களின் எதிரும் புதிருமான விவாதங்களும் காணக்கிடைக்கின்றன. நேற்று தமிழ் டிவி ஒன்றில் பலர்  விவாதத்தில் ஒப்பேற்றிக்கொண்டிருந்தனர்.  தற்குறிகள் என திட்டிக்கொண்டனர். கட்சி சார்ந்து நின்று பேசினர். நெறியாளர் பட்ஜெட்டே இல்லாமல் இருந்தால்

இந்திராணி ஜெகஜீவன்ராம்

      இந்திராணி ஜெகஜீவன்ராம்   சுயசரிதைகள் சுவையானதாகவும் செய்திகளைத் தரக்கூடியதாகவும் இருக்கும் .   சில நேரம் நல்ல அனுபவமாக இருக்கிறதே எனக்கூடத் தோன்றும் . அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனோபாவம் இருக்கத்தானே செய்கிறது . திருமதி இந்திராணி ஜெகஜீவன்ராம் தன் வரலாறு நினைவுக் குறிப்புகள் ஆங்கிலத்தில் Milestones என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது . வந்து மாமாங்கம் ஆகிறது . இந்தியில் 1990 களில் மூன்று வால்யூம்களாக அவை இந்தியர்களுக்கு கிடைக்கப்பெற்றன . ஆங்கிலத்தில் 300 பக்கங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது . பெங்குவின் இந்தியா கொணர்ந்துள்ளனர் .   மகள் புகழ்வாய்ந்த மீராகுமார்   சிறிய முன்னுரை எழுதியுள்ளார் . 1946 லிருந்து மிக உயர்ந்த அதிகார ஆட்சிமுறை வீட்டின் பெண்மணி என்கிற வகையில் இந்திய அரசியலின் நுணுக்கங்களை - அதன் மேடு பள்ளங்களை நன்கு அறிந்தவராகவே இந்திராணி அம்மையார் இருந்திருப்பார் .   எதைச் சொல்லலாம் - கூடாது என்பதில் அவருக்குள் போராட்டம் நடந்திருக்கும் . பாபுஜி என அழக்கப்பட்ட ஜெகஜீவன் வாழ்க்க