தோழர் ஜகன்னாத் சர்கார் -ஆர். பட்டாபிராமன் பீகார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர் தோழர் ஜகன்னாத் . 1919 ல் பிறந்து தனது 20 ஆம் வயதில் கட்சியில் சேர்ந்து 22 வயதிலேயே அப்பிரதேச அமைப்பு கமிட்டியின் செயலராக ஆக்கப்பட்டவர் . தோழர்கள் பவானிசென் , பி சி ஜோஷி , சோமநாத் லாகிரி , சர்தேசாய் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டவர் . இந்திரதீப் சின்ஹா , யோகேந்திர சர்மா , சதுரானன் மிஸ்ரா போன்றவர்களுடன் சேர்ந்து வளர்ந்தவர் . பீகாரில் பல்லாண்டுகள் மாநில கமிட்டிக்கு செயலராக இருந்து இயக்கத்தை வீச்சாக வளர்த்தவர் . ஜகன்னாத் அவர்களின் தந்தை டாக்டர் அகில்நாத் சர்கார் . பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவர் . 1920 களில் ஒரிஸ்ஸா , பாட்னா மக்களுக்கு மருத்துவம் பார்த்தவர் . பூரி பகுதியில் அவர் இருந்தபோது , தாய் பினாபன் பூரி ஜகன்னாதர் தேர் இழுத்து வந்த பிறகு பெற்ற மகவிற்கு ஜகன்னாத் என பெயரிட்டனர் . அவர் பூரியில் செப்டம்பர் 25, 1919ல் பிறந்தார் . பின்னர் குடும்பம் பாட்னா நோக்கி நகர்ந்தது . ஜகன்னாத் எம் ஏ படிக்கும