Skip to main content

Posts

Showing posts from June, 2016
அடுத்த பதிவாக கம்பராமாயணத்தில் பிடித்த பாடல்கள் என சில 321. ‘ என் அனைய முனிவரரும் இமையவரும்    இடையூறு ஒன்று உடையரானால் . பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும் .    பாற்கடலும் . பதும பீடத்து அந் நகரும் . கற்பக நாட்டு அணி நகரும் .    மணி மாட அயோத்தி என்னும் பொன் நகரும் . அல்லாது . புகல் உண்டோ ?-    இகல் கடந்த புலவு வேலோய் ! இகல் கடந்த புலவு வேலோய் - போரைக் கடந்து   வெற்றியடைந்த புலால் நாற்றம் வீசும் வேலை உடையோய் ; என் அனைய முனிவரரும் இமையவரும்   -  என்னைப்   போன்ற    முனிவர்களும்   தேவர்களும் ; இடையூறு   ஒன்று   உடையர்   ஆனால் -  ஏதேனும்   தீங்கு   சிறிது உடையவர்   ஆனால் ;  பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரையும் பல    மலைகளையும்   தனது   ஒளியால்   எள்ளி   நகையாடும் வெள்ளி மலையும் ;  பாற்கடலும் பதுமபீடத்து அந்நகரும் -  திருப்பாற்கடலும் . தாமரையாசனத்தையுடைய    பிரமன்    நகரமும் ;   கற்பக     நாட்டு அணிநகரும் - கற்பகம்   முதலிய   சிறப்புடைய   விண்நாட்டு   அழகிய நகரமும் ; மணிமாட அயோத்தி என்னும் பொன்நகரும் - மணிமயமான மாடங்கள