அடுத்த பதிவாக கம்பராமாயணத்தில் பிடித்த பாடல்கள் என சில
321.
‘என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையரானால்.
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும்.
பாற்கடலும். பதும பீடத்து
அந் நகரும். கற்பக நாட்டு அணி நகரும்.
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும். அல்லாது. புகல் உண்டோ?-
இகல் கடந்த புலவு வேலோய்!
இகல் கடந்த புலவு வேலோய்- போரைக் கடந்து
வெற்றியடைந்த புலால் நாற்றம் வீசும் வேலை உடையோய்; என் அனைய முனிவரரும் இமையவரும் - என்னைப்
போன்ற முனிவர்களும் தேவர்களும்; இடையூறு
ஒன்று உடையர் ஆனால் -
ஏதேனும் தீங்கு சிறிது உடையவர் ஆனால்; பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரையும் பல
மலைகளையும் தனது ஒளியால்
எள்ளி நகையாடும் வெள்ளி
மலையும்; பாற்கடலும் பதுமபீடத்து அந்நகரும் - திருப்பாற்கடலும்.தாமரையாசனத்தையுடைய பிரமன் நகரமும்;
கற்பக நாட்டு அணிநகரும் - கற்பகம்
முதலிய சிறப்புடைய விண்நாட்டு அழகிய
நகரமும்; மணிமாட அயோத்தி என்னும் பொன்நகரும்-மணிமயமான மாடங்களை உடைய அயோத்தி
என்னும் இந்த நகரும்; அல்லாது புகல் உண்டோ - அல்லால் அடைக்கலம் அடைவதற்கு வேறு இடம் உண்டோ?
324.
தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
தருவனத்துள் யான் இயற்றும் -
மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற; தவவேள்விக்கு இடையூறா - பெரிய யாகத்துக்கு இடையூறாக; தவம்
செய்வோர்கள் வெருவர - தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக; சென்று
அடைகாம வெகுளி என
- அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம்.
வெகுளி மயக்கங்களைப் போல;நிருதர்
இடைவிலக்காவண்ணம் - அரக்கர்கள் கெடுக்காதபடி;செருமுகத்துக் காத்தி என
- அவர்களோடு செய்யும் போர்முகத்திலே காத்தருள் வாயாக என;
நின் சிறுவர் நால்வரினும் -உன்புத்திரர்கள் நால்வர்களுள்; கரிய செம்மல் ஒருவனை – கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை; தந்திடுதி என -அளித்திடுவாயாக என்று;
உயிர் இரக்கும் கொடும்
கூற்றின் -உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச்சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.‘தருவனம்’
- மரங்கள் அடர்ந்த வனம். தவவேள்வி - நிஷ்காம்யவேள்வி என்பர்.
330.
குருவின் வாசகம்
கொண்டு. கொற்றவன்.
‘திருவின் கேள்வனைக் கொணர்மின்.
சென்று’ என.-
‘வருக என்றனன்’
என்னலோடும். வந்து
அருகு சார்ந்தனன்.
அறிவின் உம்பரான்.
குருவின்
வாசகம் கொண்டு - குல குருவான வசிட்ட முனிவனது சொற்களைச் செவியேற்றுக் கொண்டு; கொற்றவன்
- மன்னனாகிய தயரதன் (பக்கத்திலுள்ள பணியாட்களைப் பார்தது); திருவின் கேள்வனை - (இலக்குமியின் நாயகனான திருமாலின் அவதாரமான)ராமபிரானை; கொணர்மின் சென்று என
- சென்று
அழைத்துக்கொண்டு வருக என்று
சொல்ல; வருக என்றனன் -
(பணியாட்கள் சென்று ராமனை அடைந்து)
தந்தை வருக என அழைத்தார்;என்னலோடும் - என்று சொல்லவே; அறிவின் உம்பரான்- அறிவில் உயர்ந்து விளங்கும் ராமபிரான்; வந்து அருகு சார்ந்தனன்- புறப்பட்டு வந்து. மன்னனருகில் சேர்ந்தான்.
359.
என்றலும். இராமனை நோக்கி.
‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்.
கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு
மையல் மா
ஒன்றிய வலியினள்.
உறுதி கேள்’ எனா.
என்றலும்
இராமனை நோக்கி- என்று சொன்னதும். இராமனைப்பார்த்து (விசுவாமித்திரன்); இன்உயிர் கொன்று உழல்வாழ்க்கையள்-இனிய
உயிர்களை எல்லாம் கொன்று
திரியும் வாழ்க்கை உடையவளும்;
கூற்றின் தோற்றத்தள் - எமனைப் போன்ற தோற்றம் உடையவளும்; அன்றியும் ஐ
இருநூறுமையல்மா - ஆயிரம் மதயானைகளுக்கு ஒப்பான.; ஒன்றிய
வலியினள் - பொருந்தியவலிமை உடையவளுமான; உறுதி கேள் எனா - (ஒருத்தி) செய்தியைக் கேட்பாயாக என்று.
360.
‘மண் உருத்து எடுப்பினும்.
கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும்.
வேண்டின். செயகிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும்
பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத்
திரியும் பெற்றியாள்;
உருத்து
மண் எடுப்பினும் - கோபித்து. இந்தப்
பூமியைஎடுப்பதாயினும்; கடலை வாரினும்
- கடல்நீரையெல்லாம்அள்ளுவதானாலும்; உருத்து விண்
இடிப்பினும் -
கோபம்கொண்டுமேகத்தை இடிப்பதானாலும்;
வேண்டின் செய்கிற்பாள் - அவள் விரும்பினால் செய்ய வல்லவளாவாள்; எண் உரு
தெரி வரும் -எண்ணத்தினால் செய்யப்படும் நுண்மையான பாவமும் (உடலால்)செய்யப்படும் பருமையான பாவமும் உருவம் கொண்டு; பாவம் ஈண்டி-
ஒரு சேரச்
சேர்ந்து; ஓர்பெண் உருக்கொண்டு என - ஒருபெண்வடிவைக்
கொண்டது என்னும்படி; திரியும் பெற்றியார்-இங்குத்திரிகின்ற தன்மை உடையவள்.
365.
‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்
முன்
உலகளித்து - முற்பட உலகத்துயிர்களை யெல்லாம் காத்து;முறை நின்ற
உயிரெல்லாம் -
(அவ்வாறு காக்கப்பட்டதால்) முறையே நிலைத்து நின்ற உயிர்களை
எல்லாம்; தன் உணவு எனக்கருது -தனது
உணவு பொருள் போலவே என்னும்; தன்மையவள் மைந்தா -தன்மையுடையவள். தயரதனது மைந்தனே!;
என் இனி உணர்த்துவது -இனிச்
சொல்லவேண்டியதென்ன உண்டு; இனிச்சிறிது நாளில் -இன்னும்
சில நாட்களி்லே; மன்னுயிர் அனைத்தையும் – நிலைபெற்ற உயிர்களை எல்லாம்; வயிற்றின் இடும் என்றான்
- வயிற்றிலே போட்டுக்கொள்வாள் என்றான்.
374.
அண்ணல் முனிவற்கு அது
கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
பெருந்தகை நினைந்தான்.
அண்ணல்
முனிவற்கு - பெருமை
பொருந்திய விசுவாமித்திர முனிவனுக்கு;
அது கருத்து எனினும் -
அந்த அரக்கியை. கொல்வது தான் கருத்து
என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன் - அவள்
உயிரை உண்டுவா வென்று
கூரிய அம்பை ராமன்விடவில்லை; உயிர்க்கே துண் எனும்
- உயிர்களெல்லாம் நடுங்கிஅஞ்சுமாறு
வினைத்தொழில் தொடங்கி உள்ளேனும் - கெட்டசெயலைத் தொடங்கியுள்ளாள் என்றாலும்; பெருந்தகை. பெண் எனமனத்திடை நினைந்தான் - பெருந்தைமை உடைய
இராமன் அவள்பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான்.
376.
‘தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்.
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்!
தீது
என்று உள்ளவையாவையும்
செய்து - தீமை
என்று இருப்பவையாகிய எல்லாச் செயல்களையும் செய்துமுடித்து;
எமை. கோது
என்று உண்டிலள் - எம்மைப் போன்ற முனிவர்களைச்(சாரமில்லாத) சக்கை என்று
உண்ணாது விட்டனள்; இத்தனையேகுறை - அவள் செய்த தீய செயல்களில் இவ்வளவவே குறை; யாது என்று எண்ணுவது - இத்தகையவளை என்னவென்று னைப்பது;இக்கொடியாளையும்
- இத்தகைய
கொடுஞ்செயல் உடையவளையும்;மணிப்பூணினாய் -
மணிகளாலான அணிகலன்களை அணிந்திருக்கும்ராம பிரானே!; மாது என்று எண்ணுவதோ - பெண் என்று நினைத்தல்ஒண்ணுமே? கூடாது என்றபடியாம்.
Comments
Post a Comment