விவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம் - ஆர் பட்டாபிராமன் State, Society and Socialism என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் அவரது நூல் தொகையிலிருந்து சேகரிக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டனர். இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அ மை க்கப்பட்டுள்ளது. அவரது நூல்தொகை ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் ம றை விற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவர் நேரிடையாக தெரிவித்ததாக ஆதாரம் தரக்கூடிய எழுத்துக்களை எடுத்து புரிந்து கொள்ளவேண்டும். அவரது சிந்தனைகளை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களை பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம்-அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாத வடிவ