https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Sunday, May 29, 2016

பேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு புத்தக வடிவில்   தமிழ் இலக்கியத்தில் அறம்-நீதி-முறைமை என்பதாக வெளியிடப்படது. முதல் வால்யூம் 367 பக்க அளவில் அய்ந்திணைப் பதிப்பக விற்பனையாக வந்தது. படித்துக்கொண்டிருக்கிறேன்.. அதிலிருந்து  பிடித்தவை...
காமஞ் சான்ற கடைகோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே           
செய்தவற்றை இனி செய்யவேண்டியதில்லை என உணர்தல்- அடுத்த நம் வாரிசுகளிடம் அதை விடுதல்- நெஞ்சினால் துறத்தால் என்கிறார் ஆசிரியர்
மணிவாசகரின் இப்பாடல் அற்புதமானது
புல்லாகி பூடாகிப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பரவையாய் பாம்பாகிக்
கல்லய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் எம்பெருமான்
மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை- பயன்படும் இடம் பொதுவாழ்க்கை- வாழும் இடம் தனிவாழ்க்கை
மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204)
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
வேலன்று வெற்றி தருவது;மன்னவன்
கோல்; அதூஉம் கோடாது எனின்

சங்க காலப் பொதுமக்கள் வாழ்க்கை சிறந்திருந்தது என்று வானளாவ புகழ்வது பொருந்தாது.. பாடல்கள் சில சான்றோரது வாழ்க்கையை பேசின- பொதுமக்கள் வாழ்க்கையை காட்டுவன அல்ல என்கிறார் சுப்பு ரெட்டியார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
மனத்தூய்மை ஆற்றலை பெருக்கும்  மனச்சான்று நின்று என ஆசிரியர் விளக்குகிறார்.
சென்றதினி மீளாது மூடரே ( பாரதியின் கடுப்புஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்( பொறுப்புடன் அறிவுரை) இன்று புதிதாய் பிறந்தோம்- எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு இன்புற்றிருந்து வாழ்வீர்( நம்பிக்கை)
அறமென்பது தக்கது. தக்கதனை சொல்லி நிற்றல் என்கிறார் ரெட்டியார்.
காலதாமதமின்றி அறஞ்செய்க என்பதற்கு பல பாடல்களை எடுத்தாள்கிறார்
மின்னும் இளமை உளத்ஹம் என மகிழ்ந்து
பின்னை அறிவெ என்றல் பேதமை

வைகலும் வைகல் வரக்கண்டும் அது உணரார்.. நாள் தோறும் பொழுது கழிதல் குறித்து உணராது...
இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்-முதுநீர் உலகில் முழுவதும் இல்லை
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படும்பரம்பொருளே...
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அருளும் அன்பும் நீங்கி நீங்கா
நிரயம் கொள்பவரொ டொன்ராது காவல்
குழவி கொள்வோரின்  ஓம்புமதி
அளிதோ தேயது பெறலருங் குரைத்தே
நிரயம் எனில் நரகம்    ஓம்புமதி- பாதுகாப்பு
குழவி காப்பதுபோல நாட்டினை காத்திடு என்ற பொருளில்..


Saturday, May 28, 2016

என்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்ற நிலை இருந்து வந்தது. மண்டை காயக்கூடிய மார்க்சிய எழுத்துக்களை மட்டும்தான் பழக்கம் காரணமாக படிக்க முடியுமோ என்ற நிலை..  சில நண்பர்கள் என்னை Raw எனக்கூட விமர்சித்த காலமுண்டு.. சில இலக்கிய எழுத்துக்களை தற்போது படிக்க முடிகிறது. தக்கையான சாதாரணமாக புரிந்து கொள்வதற்கு எந்த உழைப்பும் தேவைப்படாத சாவி அவர்களின் என்னுரை 101 பக்க தொடர் கட்டுரைகள்- வார இதழில் வந்து புத்த்கமாக மாறியதொன்று.. ஒரே மணியில் படிக்க முடிந்தது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னுரை.. ராஜாஜி, சதாசிவம், பெரியார், காந்தியென மிகச் சாதாரண பதிவுகள். கண்டிப்பாக படிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டிய புத்தகமாக படவில்லை.

Thursday, May 26, 2016



26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன்
69.
கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

குடிக்கு  எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்செல்வத்தைக்  கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை  வளம்  சுரக்கும்நன்செயும்  புன்செயும்  ஆகிய  நிலங்கள் அளவற்ற  நிறை  வளத்தைக்  கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள்  நல்ல  இரத்தினங்களைக்  கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம்   ஒழுக்கம்  சுரக்கும்பெறுவதற்கு  அரியதாகிய  குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்

70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
ஓர்   குற்றம்  இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும்  இல்லாமையால்கூற்றம்  இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில்  இல்லை; தம்  சிந்தையின்  செம்மையால்அந்நாட்டு மக்களின்  மனச்   செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம்  அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல்    செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது  இழிதகவு  இல்லைமேன்மையைத்  தவிர  எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

78.

நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.
நெல்மலை    அல்லன  - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்;   நிரைவரு   தரளம்-   வரிசை   வரிசையாக   முத்துக்குவியல்கள்  காணப்படும்;   சொல்மலை  அல்லனசொன்ன  அந்த முத்துக்  குவியல்கள் இல்லாத  இடங்களில்தொடுகடல்  அமிர்தம்-தோண்டப்பட்ட  கடலில் எடுத்த   உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை  அல்லன- அந்த உப்புக் குவியல்கள்  இல்லாத இடங்களில்;நதிதரு  நிதியம்நதிகளால்  கொண்டுவந்து  குவிக்கப்பட்ட  பொன் முதலிய  பொற்  குவியல்களில்  பல  இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.
கோசல   நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும்  குவிந்து  மலைகளைப்  போல  மண்டிக்  கிடந்தன   என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.        

80.

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

கோகிலம்    நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப்  பாகு  இயல்  கிளவிகள்- அந்நாட்டுப்  பெண்களின் பாகு போன்ற  இனியனவாகிய  மழலைச் சொற்களையாம்கேகயம் நவில்வன அவர்  பயில்  நடமேமயில்கள் நடந்து பழகுவன  அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்உமிழ்வன  நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.
இள   மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும்   உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக்    கூறியதால்   இது    எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை  அணி என்றும் கூறுவர். பாகு இயல்  கிளவி: பாகு போன்ற இனிய  மொழிகேகயம்மயில்நகை: பல்கிளவி: சொல். தரளம்:முத்து 


84.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

ஓர்    வறுமை   இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்வண்மை  இல்லைகொடைக்கு  அங்கே இடமில்லை;நேர்    செறுநர்   இன்மையால்நேருக்கு   நேர்   போர்புரிபவர் இல்லாததால்திண்மை  இல்லைஉடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை;   பொய்   உரை இல்லாமையால்பொய்ம்  மொழி இல்லாமையால்;     உண்மை    இல்லை-   மெய்ம்மை    தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து   விளங்குவதால்;   வெண்மை   இல்லைவெள்ளறிவாகிய அறியாமை இல்லை.
கோசலை     நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின் சிறப்புத்  தெரிவதில்லைபகைகொண்டு    போர்புரிபவர் இல்லாதலால் உடல்    வலிமையை   உணர   வழியில்லை;   பொய்     பேசுவோர் இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை;   கேள்வி ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை   என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’    என்று