லெனின் ( ரஷ்யாவின் விடுதலை வீரர் ) - ஆர்.பட்டாபிராமன் லெனின் ( ரஷ்யாவின் விடுதலை வீரர் )- என்கிற சிறு வெளியீடு 1933 ல் 2 அணா விலையில் வெளியிடப்பட்டது . தமிழரசு புத்தகாலயம் , நெ . 31, வைத்தியநாத முதலி வீதி சென்னை என்கிற முகவரியிலிருந்து இப்பிரசுரம் வெளியானது . நூலை எழுதியவர் திரிசிரபுரம் ஆ . நடராஜன் அவர்கள் . இதற்கான ஒரு பக்க முன்னுரையை பா . பக்கிரிசுவாமி செட்டியார் , தமிழாசிரியர் எழுதியுள்ளார் . சென்னை - 24-5-1933 என இடம் நாள் காட்டப்பட்டுள்ளது . அவர் முன்னுரையில் தமிழரசு வாரப்பத்திரிகையில் லெனினது வாழ்க்கை , தோற்றம் , செயல் , குணம் முதலிய விவரங்கள் அனைத்தையும் ஆ . நடராஜன் சுருக்கமாக எழுதியதாகவும் , டாக்டர் மே . மாசிலாமணி முதலியார் வெளியிட்டு உதவியமைக்கு தமிழுலகம் பெரிதும் கடமையுடையதாகும் எனவும் பக்கிரிசுவாமி செட்டியார் குறிப்பிட்டுள்ளார் . பொள்ளாச்சி நசன் அவர்களின் அனைத்து பழமையான இதழ்கள் சேகரத்தில் தமிழரசு மலர் 4 இதழ் 9 செந்தமிழ் மாத வெ