தேசவிடுதலை இயக்கமும் மதசார்பின்மையும் -ஆர். பட்டாபிராமன் காலனிய எதிர்ப்பில் எழுந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் சில முக்கிய கருதுகோள்களை உட்கிரகித்துக்கொண்டே வளர்ந்தது. விடுதலை எழுச்சிக்கு மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஒற்றுமை அதன் அவசரத்தேவையாக இருந்தது. கிறிஸ்துவத்தைவிட இந்து, இஸ்லாம் மதங்கள் எவ்வகையிலும் குறைந்தவை அல்ல என்கிற உரையாடல் இருந்திருக்கலாம். ஆனால் முழுமையான காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சொல்லாடலாக தேசிய இயக்கம் மாற்றவில்லை. தேச கட்டுமானம், இந்து- முஸ்லீம் ஒற்றுமை, விடுதலைக்கு பின்னர் ஜனநாயக முறையில் அரசாங்கம், வலுவான இந்திய அரசாங்கத்தை உருவாக்கி வளர்த்தல், மதசார்பின்மை- வழிபாட்டு சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் அதன் நோக்கங்களாக இருந்தன. இவற்றில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களுக்கு ஒத்த கருத்தும் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டதிலிருந்து கிலாபத் இயக்கம் தவிர மற்ற காலங்களில் மத கோரிக்கைகளை விடுதலை இயக்க தலைவர்கள் பொதுவாக முன்னெடுக