https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Saturday, June 10, 2023

டெண்டுல்கரின் மகாத்மா

 

டெண்டுல்கரின் மகாத்மா

D G Tendulkar 8 வால்யூம்களாக எழுதிய Mahatma Life of Mohandas Karamchand Gandhi 1953ல் பப்ளிகேஷன் டிவிஷனால் கொணரப்பட்டது. இவ்வாண்டு அந்த பெரும் உழைப்பின் 70 ஆண்டுகள்



இவ்வாண்டு ஜனவரி 27 அன்று டெண்டுல்கரின் மகாத்மா 8 தொகையையும் முழுமையாக படிக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மனது குதிரையாயிற்றே..கடிவாளம் ஏது. உம் 4 மாதங்களில் அதாவது மே 31க்குள் 8 வால்யூம்களையும் மாதத்திற்கு இரு வால்யூம்கள் என்பது மனக்கணக்கானது

வாழ்க்கையின் எதார்த்தம் மனக்குதிரையுடன் போட்டியிடமுடியுமா என்ன..மே 31க்குள் 7 வால்யூமை படிக்க எதார்த்தம் அனுமதித்தது. ஜூன் 10 காலை வாசிப்புடன் இறுதியான 8 வது நூல்தொகையையும் கண் முடித்தது. சிறு துள்ளல்.

காலையில் தினம் ஒரு மணிநேரம். மூளையும் இதயமும்பராக்குபார்க்காமல் ஒத்துழைத்ததால் - கவனச் சிதறல் பெரும்பாலும் இல்லாததால் இது சாத்தியமானது.

டெண்டுல்கரின் அசுர உழைப்பிற்கு ஆக்கங்கள் வந்து 70 ஆண்டுகளுக்கு பின்னாலாவது இப்படி தலைவணங்க முடிந்தது. மனதில் ஓரமாக சின்ன குதுகூலம். எழுதியவற்றை படித்ததற்கே மனசு சபாஷ் கேட்கிறதே, அந்த மனிதர் டெண்டுல்கர் உழைப்பை என்ன சொல்வது. டெண்டுல்கரை தூண்டிய அந்த மகாத்மாவின் அன்றாட பேருழைப்பை எப்படி வியப்பது. அவர் எவர் வியப்பிற்காகவும் ஏதும் செய்யாததை எப்படிச் சொல்வது..

 

டெண்டுல்கர் குறித்து விரிவாக ஏதாவது கிடைக்குமா எனப்பார்த்து ஏமாந்தேன். அப்படி obscure மனிதராக பிரம்மாண்ட உழைப்பை தந்து சென்றுள்ளார். காந்தியர் எவராவது வைத்திருக்கலாம்..

இந்த தொகுப்பிற்கான மிகச் சுருக்கமான முன்னுரையை ஜவஹர்லால் தந்துள்ளார். இந்த வால்யூம்களை காலாவரிசையிலான நிகழ்வு போக்கின்படி லீனியர் வகைப்பட்டே டெண்டுல்கர் எழுதியுள்ளார்.

வால்யூம் 1   1869-1920 காலக்கிரமத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

வால்யூம் 2   1920-1929

வால்யூம் 3   1930-1934

வால்யூம் 4   1934-1938

வால்யூம் 5   1938-1940

வால்யூம் 6   1940- 1945

வால்யூம் 7   1945-1947

வால்யூம் 8   1947-1948

 

இந்த 8 தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவ்வப்போது இணையத்தில் சந்தேகம் ஏற்படும்போது , அந்தக் கால வால்யூமை பார்த்துவிட்டு அரைகுறையாக படித்தோமே என்ற குற்றவுணர்வு இனி தேவைப்படாது. எவ்வளவு உள்வாங்கிக்கொண்டோம் என்ற உணர்வு வேண்டுமானால் தலை தூக்கலாம். என் போன்றவர் பிரிண்ட் உலகக் கால மனிதர்கள். அதில் வாசிக்கும்போது அயற்சி சற்றுக் குறைவாக இருக்கிறது.

ஆல்பர்ட் அயின்ஸ்டின் இந்த நூல்கள் பற்றி

Yours is indeed a great merit to have collected all available material concerning the life and activities of the greatest man of our time. You accomplished the work early enough to make use of the personal memories of countless men and women who knew Gandhi personally

 

டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி மதிப்பிட்டது

So large a part of the narration is in the Mahatma’s own words that at times it reads like an extension of his autobiography..we meet the man himself and listen to his authentic voice

நேஷனல் ஹெரால்டு பதிவில்

It is a mighty task with which Tendulkar has battled mightily. In eschewing literary effect, Tendulkar has achieved style

ஜவஹர்லால் பாராட்டி எழுதியது

It brings together more facts and data about Gandhi than any book that I know. I consider this book to be of great value as a record not only of a life of a man supreme in his generation, but also a period of India’s history which has intrinsic importance of its own.

இதுவரையிலான 2023ன் நாட்களில் என் பெரு உழைப்பை நான் வெளிப்படுத்த இந்த நூல்கள் காரணமாயின. 2700க்கு மேற்பட்ட பக்கங்கள் சீரான உழைப்பு நேரத்தில் வாசிக்க சாத்தியமானது. ஜூன் 12 டெண்டுல்கர் நினைவு நாளில் எனது வணக்கமாக இதைக் கொள்ளலாம்.

II

டெண்டுல்கர் பற்றி இணையத்தில் கிடைத்த சிறு தகவல்கள்

D G Tendulakar ( 1909-1972)

 தினநாத் கோபால் டெண்டுல்கர் காந்தியடிகள் குறித்த மகாத்மா எனும் 8 வால்யூம்கள் கொண்ட தொகுப்பை  எழுதி வெளியிட்டவர். டெண்டுல்கர் டாக்குமெண்டரி எடுப்பதிலும் ஆர்வமாக இருந்தவர். அவர் ஜூன் 12, 1972ல் மறைந்தார். மராட்டியத்தில் ரத்னகிரியில் பிறந்தவர். கேம்ப்ரிட்ஜ் கல்வி பெற்றவர். மகாத்மாவின் வாழ்க்கையை குறித்த அவரது இந்த தொகுப்புகள் 1951ல் நேருவின் முன்னுரையுடன் வெளிவந்தது.

 பத்மபூஷன் எனச் சொன்னபோது அதை டெண்டுல்கர் மறுத்துவிட்டார். அதற்கு பதில் வாட்ச் என பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி அதைப் பெற்றார். டெண்டுல்கர்கான் அப்துல் காபர் கான்’ குறித்த வாழ்க்கை குறிப்பையும் எழுதியவர். ருஷ்யா குறித்தும் அவர் எழுதியுள்ளார். எல்பின்ஸ்டன் கல்லூரிக்கு பின்னர் கேம்ப்ரிட்ஜ். அவர் ஜெர்மனியில் கோட்டிங்கென் சர்வகலாசாலையில் இருந்தபோது, நாஜிகளால் கம்யூனிஸ்ட்டோ என சந்தேகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத சிறை அவஸ்தை. பின்னர் அவர் பாரிஸ் சென்றார். கம்யூனிச ஆர்வம் மேலிட ருஷ்யா சென்றார். அங்கு தான் அவர் போட்டோ தொழில், டாக்குமெண்டரி படம் எடுத்தலைக் கற்றார்.

 தந்தையின் மரணம் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்தது.  தண்டியாத்திரையின் ஈர்ப்பால் அவர் கல்வியை தொடராமல் விடுதலை இயக்கத்தில், காந்தியிடம் ஈர்ப்புகொண்டார். உத்தரபிரதேசத்தில் கரும்பு விவசாயிகள் மத்தியில் நேருவின் அறிவுரையால் சேவையாற்றினார். சொந்த செலவிற்காக  பத்திரிகைகளில் எழுதலானார்.

காந்தியிடம் அனுமதி பெற்று அவரது வாழ்க்கையை எழுதலானார். இதற்கான உழைப்பு 12 ஆண்டுகள். தன் வாழ்க்கை பற்றி வெளித்தெரியுமாறு எதையும் காட்டிக்கொள்ளாதவர். அவர் பற்றிக் கேட்டால் தான் அக்டோபர் 9, 1909ல் பிறந்தேன். கிராஜுவேட். என் பெயர் தீனநாத் கோபால் டெண்டுல்கர் என்பதை மட்டுமே சொல்லி சென்றிருக்கிறார்.

 அவரை நீங்கள் பேச வரவேண்டும் என அழைத்தவர்களிடம் இயலாமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 I do not like generally to mix with people, I do not like to go on stage and I do not like to be photographed or want my name appearing in the newspapers. My bungalow is names as Ekant, I do not even have a phone"

  மகாத்மா தான் எழுதியவற்றை proof  பார்க்க அழைக்கப்பட்டவர் டெண்டுல்கர்- நேருவால் மதிய உணவிற்கு வா பேசவேண்டும் என அழைக்கப்பட்டவர் டெண்டுல்கர். தன் வாழ்க்கைப் பற்றி செய்தி ஏதும் இல்லாமல் முகம் காட்டாது பெரும் சேவை செய்து காணாமல் அறியப்படாதவராக இருக்கிறார். அவரது மகாத்மா 8 வால்யூம்களும் இன்னும் எவ்வளவு பதிப்பைக் காணுமோ அதுவரை அவர் உழைப்பை அதன் வழி நாம் நுகரலாம்.

10-6-2023