Skip to main content

Posts

Showing posts from April, 2019

மறுப்பு மற்றும் ஒத்துழையாமையின் மெய்யியல் The Disobedient Indian

மறுப்பு   மற்றும் ஒத்துழையாமையின்   மெய்யியல் காந்தியை முன்வைத்து ரமீன் ஜெகன்பெக்லூ (காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 24.04.2019 அன்று செய்யப்பட்ட அறிமுகவுரையின் கட்டுரை வடிவம்)                                         - ஆர்.பட்டாபிராமன் ரமீன் ஜெகன்பெக்லூ (ஆர்ஜே) ஈரானியர். 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். ஈரானில் வாழமுடியாது சிறை சித்திரவதைகளுக்கு உள்ளாகி கனடாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்துவருகிறார். ஜிண்டால் பல்கலையில் மகாத்மா காந்தி துறையில் குறிப்பாக அகிம்சை சமாதானம் துறையில் நெறியாளராக துணை டீன் ஆக இருக்கிறார்.   The Decline of Civilisation, Gandhian Moment, The Disobedient Indian   போன்றவை இந்தியாவில் பேசப்பட்ட முக்கிய ஆக்கங்கள். ரமீன் பாரீஸ் பல்கலையில் டாகடர் பட்டம் பெற்றவர் . அங்கு 20 ஆண்டுகள் இருந்தவர் . பிரஞ்சு , ஆங்கிலம் , பெர்ஷியன் மொழிகளில் எழுதிவருபவர் . ஈரானிய மீடியாக்கள் அவரை சி அய் ஏ உளவாளி என்றன . அவர் 2006 ல் கைதாகி கொடுமைக்கு உள்ளாக்கபட்டார் . எபாடி ஷெரின்,நோம்சாம்ஸ்கி , உம்பர்டோ எகோ , ஹபர்மாஸ் , திமோதி , அந்