Skip to main content

Posts

Showing posts from 2018

தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும்

தோழர் இ எம் எஸ் பார்வையில் காந்தியும் அவரது இசமும்                    -ஆர். பட்டாபிராமன் எளிய வாழ்க்கையில் நிறைவுபெற்றவராகவும் , எந்நேரமும் தளர்வின்றி உழைப்பவராகவும் இருந்தவர் இ எம் எஸ் நம்பூதிரிபாட். . Marxist Scholar என அவர் ஏற்கப்பட்டவராக இருந்தார் . விவசாய இயக்கத்திலிருந்து தனது வர்க்கப்போராட்டத்திற்கான களப்பணியை துவக்கியவர் இ எம் எஸ் . கேரளாவில் வெகுமக்கள் மத்தியில் அரசியல் மற்றும் தத்துவார்த்த உரையாடலை தொடர்ந்து செய்து வந்த இ எம் எஸ்   தனது தாய்மொழியில் ஏராளம் எழுதி குவித்துள்ளார் . 1942 ல் கம்யூனிஸ்ட் கட்சி சட்டரீதியாக இயங்க வாய்ப்பு பெற்றது . சி பி அய் கட்சியின் முதல் காங்கிரஸ் 1943 ல் நடந்தது . அதில் இ எம் எஸ் மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார் . 1953-54 ல் நடந்த மூன்றாவது கட்சி காங்கிரசில் அவர் பொலிட்ப்யூரோ உறுப்பினராகிறார் . நியுஏஜ் பத்திரிக்கை ஆசிரியராகிறார் . கட்சியில் காங்கிரஸ் குறித்த அணுகுமுறை , சீன யுத்த கருத்துவேறுபாடுகள் தீவிரமாக இருந்தன . 1977 ல் நம்பூதிரி அவர்கள் சி பி எம் கட்ச