தோழர் பட்டாபியின் புதிய புத்தகம்- கட்டுரைத்தொகுப்பு நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள் படிக்க சொடுக்குக: https://archive.org/details/converted_20190630 ஆசிரியர் விழைவு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆளுமைகள் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் . அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி , மேற்கு கல்வி , ஆண்ட இஸ்லாம் - கிறிஸ்துவம் என்ற பொதுச்சூழலில் வளர்ந்தவர்கள் . இந்துமதத்தின் நிறைகுறைகளை அறிந்து அதன் பின்னணியில் வளர்ந்தவர்கள் . சிலர் இந்திய பண்பாடு என்பதை மேற்கு பண்பாட்டிற்கு இளைத்த ஒன்றல்ல என நிறுவ முயன்றவர்கள் . ஆங்கிலக்கல்வி , மேற்குலக பயணங்களால் தங்கள் சிந்தனையை கூர்தீட்டிக்கொண்டவர்கள் . இந்திய விடுதலை என்கிற கனவை சுமந்தவர்கள் . அய்ரோப்பிய தத்துவ பலத்திற்கு முன்னால் கையைக்கட்டிக்கொண்டு நிற்காமல் தங்கள் சிந்தனையை உலகறிய செய்யவேண்டும் என தவிப்புகொண்டவர்கள் . இந்தியாவின் ‘ கடைக்கோடி மனிதனுக்கும் வாழ்க்கை’ என்கிற பேரவா அவர்களை துரத்த...