இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள் இந்திய வரலாறு குறித்த கார்ல் மார்க்ஸ் குறிப்புகள் ஆங்கிலத்தில் காலவரிசைப்படி (664-1858) அவரால் எழுதப்பட்டுள்ளது. அவற்றை தொகுத்து Moscow Foreign Language Press வெளியிட்டது . சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கட்டுப்பாட்டில் இருந்த மார்க்சிய லெனினிய இன்ஸ்டிட்யூட் ருஷ்ய பதிப்பிற்கு பின்னர் ஆங்கில பதிப்பை 1947 ல் இறுதிப்படுத்தி வெளியிட்டது . 632 என அந்தக்குறிப்பு நபிகள் மறைவுடன் துவங்கும் . முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை காலவரிசையில் சிற்சில வரிகளாகச் சொல்லும் . இந்த இந்திய வரலாறு குறித்த மார்க்சின் குறிப்புகளை பலவேறு வரலாற்று புத்தகங்கள் வழி மார்க்ஸ் சேகரித்ததாக இதன் பதிப்பாளர்கள் சொல்கின்றனர் . அதன் இறுதிக் குறிப்பு ஆகஸ்ட் 2, 1858 தேதியிடப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 2, 1858 ஸ்டான்லி பிரபுவின் இந்தியா பில் நிறைவேற்றப்பட்டது . இதன் மூலம் கிழக்கிந்திய ஆட்சி முடிவுற்று ’ இந்தியா ராஜதானி ’ விக்டோரியா மகாராணி ஆட்சிக்குள் வந்தது . இங்கு ம