https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Friday, September 30, 2022

டேவிட் ரியாஜனாவ் (David Riazanov)

 

டேவிட் ரியாஜனாவ் (David Riazanov)

நம் காலத்தின் புகழ் வாய்ந்தமார்க்சோலாஜிஸ்ட்’ தோழர் ரியாஜனாவ். இன்று மார்க்சிய உலகில் பலராலும் வாசிக்கப்படும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் நூல்தொகைகள் உருவாக காரணமான பெரும் அறிஞர். எவ்வளவு பெரும் உழைப்பை மார்க்சிய உலகிற்கு நல்கினாலும் வரலாற்றில் ஆட்சி செய்பவர்க்கு சந்தேகம் இருந்தால் அவர் இல்லாமல் ஆக்கப்படுவார் என்பது டேவிட் வாழ்க்கையிலும் சம்பவித்தது. ஸ்டாலின் ஆட்சியில்செகா’ போலீஸ் அடக்குமுறைகளுக்கு அவர் உள்ளாக நேர்ந்தது. 20 நூற்றாண்டின் குறிப்பாக 1930களில் பெரும் மார்க்சிய அறிஞராக அவர் கருதப்பட்டவர்.



ரஷ்ய கம்யூனிஸ்ட் போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டி முடிவையொட்டி மார்க்ஸ்- எங்கெல்ஸ் இன்ஸ்டிடுயுட் (1920-21ல்) அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ரியாஜனாவ். இந்த அமைப்பை நிறுவிட தோழர் லெனின் மிக ஆர்வம் காட்டினார்.

மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுதிய சிறு துரும்பைக் கூட - துண்டு சீட்டுக்களைக் கூட விடாமல் தொகுப்பதில் பெரும் உழைப்பை நல்கியவர் ரியாஜனாவ். எதையும் விடாது என வரும்போது, இதெல்லாம் வேண்டும்- கூடாது என கருத்துக்கள் வருவதும் இயற்கைதான். அவற்றை எதிர்கொண்டு வரலாற்றை நேர்த்தியுடன் வருங்காலம் அறிய நாம் மிக நேர்மையாக இருப்போம் என்ற போராட்டத்தை ரியாஜனாவ் நடத்த வேண்டியிருந்தது. லெனினுடன் கூட இந்தப் போராட்டம் நடந்தது.  Marx- Engels GESAMTAUSGABE MEGA  என நாம் இன்று அறிந்துகொள்ளும் கொண்டாடும் அரிய மார்க்ஸ்- எங்கெல்ஸ் நூல்தொகை தொகுப்பை தன் கடும் உழைப்பால் நமக்கு தந்து போயிருப்பவர் ரியாஜனாவ்.

1930க்குள் தன் வேலைக்காக அவரால் பல மூல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. தவிர 55000 நகல்கள், 32000 வெளியீடுகள், 4.5 லட்சம் புத்தகங்கள், கிடைக்கப்பெற்ற இதழ்களின் பவுண்ட்கள் என ஏராளம் அவரால் கூடுதலாக சேகரிக்கப்பட்டன என்றால் எவ்வளவு ராட்சத கவனக்குவிப்பை அந்த  Institute of Marxism- Leninism  என்பதற்காக அவர் செய்திருப்பார். அதற்கான ஆவண கிடங்கு- நூலகம் ஒன்றை அவர் உருவாக்கினார். ஹெகல்- பாயர்பாக் தொகுப்புகளையும் அவர் எடிட் செய்தார். அவரின் மகத்தான சாதனையை

In the realm of Marxology- acquiring, preparing and publishing for the first time previously unknown writings of Marx- Engels  என பல வரலாற்றாய்வாளர்களால் புகழ்ந்துள்ளனர்.

1917 புரட்சிக்கு முன்னராகவே உலகின் பல மார்க்சியர்கள் மத்தியில் லெனின் டிராட்ஸ்கி அளவிற்கு ரியாஜனாவ் புகழ் வாய்ந்தவராக இருந்தார்.

 மார்ச் 10, 1870ல் பிறந்தவர் ரியாஜனாவ். உக்ரைனில் யூத தந்தைக்கும் ருஷ்ய தாய்க்கும் பிறந்தவர். தனது 15 வயதில் நரோத்னிக் புரட்சியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. புரட்சிகர சிந்தனையால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். உக்ரைன் ஒடெஸ்ஸா பகுதியில் சோசலிஸ்ட் குழுவினருடன் உறவிருந்தது. பிளக்கானாவ் தான் அங்கு எல்லோருக்கும் ஆரம்ப குரு.

ரியாஜனாவும் வெளிநாட்டு வாழ் ருஷ்ய மார்க்சியர்களை சந்திக்க செல்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஜார் போலிசாரால் கைது செய்யப்படுகிறார். அவருக்கு அப்போது வயது 19. 4 ஆண்டு கடும் சிறை. உழைப்பு முகாமில் சித்திரவதை. வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே 15 மாதம் கொடுந்தண்டனை அனுபவிக்க நேர்கிறது.

விடுதலைக்குப் பின்னர் பெர்லின் சென்று அங்கு தலைமறைவாக இருந்த ரஷ்யா மார்ச்கியர்களுடன் சேர்ந்துபோர்பா- போராட்டம்’ என்ற குழுவைத் தொடங்கினார். ஆனால் இவர்களின் குழுவிற்கு ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியின் 1903 மாநாட்டிற்கு அழைப்பில்லை. கட்சியும் போல்ஷ்விக்- மென்ஷ்விக் என பிரிந்து குழுக்களாக போராடிக்கொண்டிருந்தனர். ரியாஜனாவ் குழு இரண்டிலும் வேண்டாம் என முடிவெடுத்தனர்.

ருஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி பிற அய்ரோப்பிய நாடுகளின் வடிவத்தில் இல்லை என்ற தனது ஆய்வை பிளக்கானாவிற்கு மாற்றாக ரியாஜனாவ் வைத்தார். எனவே ரஷ்யாவில் ஜாரை தூக்கி எறிவதன் மூலம் நேரிடையாக சோசலிச பயணம் துவங்க முடியும் என்றார்.

1905ல் ரஷ்யா திரும்பிய டேவிட் தொழிற்சங்கத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் பணியாற்றினார். மீண்டும் 1907ல் கைது- நாடு கடத்தல் என்பதற்கு உள்ளானார்.  பின்னர் மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துக்களை சேகரிப்பது என்பதிலும், அவை குறித்த ஆய்விலும் ஈடுபடலானார். இரண்டாம் அகில மாநாடுகளில் பங்கேற்றார். ரஷ்யாவில் ரயில்வே தொழிற்சங்கத்தை சிறப்பாக்கியவர் ரியாஜனாவ். 1917ல் பிப்ரவரி எழுச்சியில் ஜார் அகற்றப்படுகிறார் என அறிந்து மீண்டும் ரஷ்யா வர வாய்ப்பு கிட்டியது. பின்னர் போல்ஷ்விக்குகளுடன் இணைந்து அக்டோபர் புரட்சியில் பங்காற்றினார். கட்சி பள்ளிகளுக்கு டேவிட் ரியாஜனாவ் பொறுப்பாக்கப்பட்டார்.

1920ல் அறிவியல் கழகம் உருவாக ரியாஜனாவ் துணையாக இருந்தார். பிரெஸ்ட்- லிட்டொவஸ்க் உடன்பாட்டின்போது லெனினை அவர் விமர்சித்தார். குழுக்களில் சிக்காமல் தன்னை முடிந்தவரை தனித்து வைத்துக்கொள்ள முயற்சித்தார். அப்போது அவரின் புகழ் வாய்ந்த வாக்கியம் I am not a Bolshevik- not a Menshevikand not aLeninist. I am only a Marxist and as Marxist  I am a communist  என்பதாகும்.

ஆட்சி குறித்த விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள் தங்கள் ஆட்சியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது எனக் கருதினார் ரியாஜனாவ். மரணதண்டனையை லெனின் ஆட்சி ஒழிக்கவேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. அதேபோல் 1921ல் தொழிற்சங்க மாநாட்டில் அவர் ஸ்டாலினுடன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து மாறுபட்டு பேசினார். கட்சியின் தொங்கு சதையாக தொழிற்சங்கத்தை வைக்காமல் அதன் சுயேட்சை வர்க்கத்தன்மையை நாம் வளரவிடவேண்டும் என்றார். அவர்கள் சற்று கீழிறங்கி கூட பேசிக்கொண்ட பதிவு கிடைக்கிறது.

ஸ்டாலின் ரியாஜனாவைப் பார்த்து  Shut up you Clown- கோமாளியே நிறுத்து என பேசியதாகவும் பதிலுக்கு ரியாஜனாவ்  Don't make a fool of yourself. Everybody knows theory is not your field  என்றாராம். அதாவது கோட்பாடு விஷயங்கள் உமக்கு பற்றாது என்பது எல்லாருக்கும் தெரியும்- முட்டாளாக்கிக்கொள்ளாதீர்.  இப்படி எல்லாம் மோதிக்கொண்டபின்னரும் அவர் பல செயல்களை செய்துள்ளார். செய்யவும் விட்டுள்ளனர் என்பதையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.

 ரியாஜனாவ் மென்ஷ்விக்குகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது கசியத்துவங்கியது. மார்க்ஸ்-லெனின் கழகத்தில் இருந்த ஆய்வாளர் ரூபின் மென்ஷ்விக் தலைமறைவு ஸ்தாபனத்தை நடத்துகிறார் என்று சொல்லப்பட்டது. அவர்லாயர்’ ஆக இருந்தும், தன்னை காத்துக்கொள்ள முயற்சித்தும் அது பயனளிக்காது சிறைத்தள்ளப்படார். ரூபின் அச்சுறுத்தப்பட்டதால் ரியாஜனாவ் காரணம் என வாக்குமூலம் தந்தார்.

 ரியாஸனாவ் மீதான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. மா-லெ கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர். அப்போது மெகா நூல்தொகை திட்டத்தில் 42 வால்யூமிற்கான மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுத்துக்கள் அவரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. 5 வால்யூம் முழுமையாக எடிட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்சியும் அவருக்கு கதவடைத்தது. அவரை சாரடோவ் நூலக பணிக்கு மாற்றினர்.

1937ல் டிராட்ஸ்கியுடன் தொடர்பு என அவர் கைது செய்யப்பட்டர்.சோவியத் யூனியனின் சுப்ரீம் கோர்ட்டின் மிலிட்டரி பிரிவு அவரை குற்றவாளி எனத் தீர்ப்பிட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றவும்பட்டது. குருசேவ் காலம் அவரை 1958ல் மறுபரீசிலனை செய்து அவர் குறித்துபேசுதல் செய்தது. கோர்பசாவ் காலத்தில் மீண்டும் அவர் பேசப்படலானார்..

ஸ்டாலின் காலத்து மீறல்கள் குறித்து ஏராள பதிவுகள் வந்துள்ளன. அதில் ஒன்றான பதிவாக மெட்வெதேவ் பதிவும் இருக்கிறது.

Roy A. Medvedev, who has carried out a detailed investigation of the case, argued in Let History Judge: The Origins and Consequences of Stalinism (1971) that the Union Bureau of Mensheviks did not exist. "The political trials of the late twenties and early thirties produced a chain reaction of repression, directed primarily against the old technical intelligentsia, against Cadets who had not emigrated when they could have, and against former members of the Social Revolutionary, Menshevik, and nationalist parties."

ரியாஜனாவ் ஜனவரி 21, 1938ல் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டார்.

ரியாஜனாவ் எழுதிய மார்க்ஸ்- எங்கெல்ஸ் வாழ்வும் செயலும் குறித்த புத்தகம் பலராலும் வாசிக்கப்பட்ட ஒன்று. அது தமிழிலும் பாரதி புத்தக நண்பர்களால் கொணரப்பட்டுள்ளது.

இன்று நாம் காணும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் அறிவு கிடங்கு புதையலை தேடிக்கொணர்ந்த பெரும் மார்க்சிய அறிஞரின்  150 ஆம் ஆண்டு உலகில் மெளனமாகவே போனது வரலாற்றின் சோகம்..

Dissent  என்பதை சகிக்காத ஆட்சியர் அதற்கு பக்கபலமாக நின்ற சமூகங்கள் தங்களின் அற்புத மனிதர்களை அவர்களின் உழைப்பை கொண்டாடாமல்விட்டாலும் அவர்களை உயிர்ப்பலி கேட்டே நகர்ந்துள்ளன என்பதும் வரலாறு தரும் சோகம்.

27-9-2022

Tuesday, September 27, 2022

ராம் சரண் சர்மாவின் ’சூத்திரர்’ ஆய்வு

 

ராம் சரண் சர்மாவின் சூத்திரர் ஆய்வு

ராம் சரண் சர்மா பண்டை இந்தியா குறித்த மிக முக்கிய வரலாற்றாய்வாளர். மார்க்சியர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் போற்றும் அறிஞர். அவர் எழுதிய  Sudras In Ancient India  A social History of Lower Order முக்கிய ஆய்வுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் இன்று நடந்துகொண்டிருக்கும் சர்ச்சைகள் இந்த புத்தகம் நோக்கியும் அம்பேத்கரின் சூத்திரர்கள் யார் நோக்கியும் என் கண்களை நகர்த்தின.  சர்மா அவர்களின்  ஆக்கத்தின் முதல் இரு அத்தியாயங்கள்  Historiography and Approach,  Origin என்பதாகும்.  அதை மட்டும் எடுத்துக்கொண்டு அம்பேத்கர் வந்தடைந்த புள்ளிகளுடன் இங்கு சுருக்கமாக தந்துள்ளேன்.

சர்மாவின் முதல் 50 பக்கங்களில் வரும் சில செய்திகளை இங்கு தருகிறேன். 400 பக்கங்களுக்கு மேலான  புத்தகம் அது. எனவே ஆய்வில்  பல பக்கங்கள் நகரும்போது பல்வேறு செய்திகள் நமக்கு விரியலாம்.



முதலில் கிழக்கு இந்திய கம்பெனியார் செய்தவரலாற்றை எழுதுதல் சார்ந்த முயற்சிகளைப் பேசுகிறார் சரண் சர்மா. 1776ல்  A code of Gentoo Laws-  Adoption of original institutes as do not intimateley clash with the laws or interests of the Conquerers  என அதில் வழிகாட்டிக்கொண்டனர். 1794ல் சர் வில்லியம் ஜோன்ஸ்- இந்தோலாஜியின் தந்தை எனக் கருதப்படுபவர் மனு ஸ்மிருதியை மொழி பெயர்க்கிறார். இப்படியான வேலைகளால் பலமில்லியன் இந்துக்களின் சொத்துக்கள் நம்முடையதாக மாறலாம் என்கிறார் ஜோன்ஸ். 1798ல் enumeration of Hindu classes என்பதை கோல் புரூக் செய்கிறார்.

கோல்புருக் திரட்டிய தகவல்களை 1818ல் மில் அவர்கள் எடுத்துக்கொண்டு  History of India -with its caste sytem  எழுதுகிறார். அதில் அவர்  disabilities of Sudras  என்பதைக் கொணர்கிறார்.

1841ல் எல்பின்ஸ்டன் தனது குறிப்பில் தான் வந்தடைந்ததைச் சொல்கிறார். பல சமூகத்தின் அடிமைகள் வாழ்வை இங்குள்ளசூத்திரர்வாழ்வுடன் ஒப்பிட்டால் அவர்கள் மேலான நிலையில் இருந்துள்ளனர் என்கிறார் எல்பின்ஸ்டன். இங்கு   servile class  எனது காலத்தில் இல்லை எனவும் மதிப்பிடுகிறார்.

சர்மாவின் பார்வையில் அப்படி 19 ஆம்நூற்றாண்டில் பண்டைய சமூக பழக்கங்கள் ஒழிந்துவிட்டது என்று சொல்லவியலாது என்ற கருத்துள்ளது. சர்மா அடுத்துசதிஎதிர்த்த ராம்மோகன் ராய் பங்களிப்பை பேசுகிறார்.

1850 களில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் விதவா திருமண போராட்டத்தை வேதங்களை ஆதாரமாக்கிக்கொண்டு போராடுகிறார். 1879ல் தயானந்த சுவாமிகள் சமஸ்கிருத பிரதிகளை தானே ஆய்ந்துசத்யார்த்த பிரகாசா எனும் அரிய நூல் ஒன்றைப் படைக்கிறார். அதில் விதவா மறுமணம், பிறப்பின் அடிப்படையில் சாதி ஏற்றத்தாழ்வு, சூத்திரர்களுக்கு வேதம் படிக்க தடை என்பது கிடையாது போன்றவற்றை தயானந்தர் பேசுவதாக சர்மா சொல்கிறார். பிரிட்டிஷ் அறிஞர்  Muir- the belief in the origins of four varnas from the primeval man did not exist in ancient times  என்பதைப் பேசினார்.

1895ல் அறிஞர் ஆர் ஜி பண்டார்கர் இவ்வாறு எழுதினார்

பண்டைய காலத்தில் பெண்கள்  maturity க்கு பின்னரே திருமணம் செய்துள்ளனர். ஆனால் இப்போது அதற்கு முன்பாக நடக்கிறது. முன்பு விதாவா மணம் நடந்துள்ளது. இப்போது அவ்வழக்கம் இல்லாமல் போனது. பல சாதிகள் ஒன்றாக சாப்பிடும் முறை இருந்துள்ளது. அதற்கு தடை இருக்கவில்லை. ஆனால் இப்போது உறவற்று போயுள்ளனர்.’

1881ல் ஹாப்கின்ஸ்சூத்திரர்கள்’ நிலை அமெரிக்கன் வீட்டு அடிமை நிலைக்கு ஒப்பாக இருக்கிறது என்று பேசினார். இதை விவாதித்த ஹில்லெபிராண்ட் சூத்திரர்கள் என பண்டைய பெயரில் பொருளில் நாம் பேசும்போது, அந்த பண்டைய கால உலகில் அடிமைகள் நிலை எப்படியிருந்தது என ஒப்பிட்டு பேசவேண்டும். அதை சமகால அமெரிக்க அடிமையுடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல எனப் பேசினார்.

1911ல் கேட்கர் என்பாரும் ஹோப்கின்ஸ் போன்றவர்கள்  unduly exaggerate in their treatment of caste system  என்றார்.

Muir உயர்தட்டு சண்டைகள் என பிராம்மண- சத்திரிய மோதல்கள் குறித்து தன் உழைப்பை செலவிட்டுள்ளார். ஹோப்கின்ஸ் ஆய்வும் பண்டைய இந்தியாவில் உயர் ஆளும் வர்க்கம் குறித்தே தன் உழைப்பை செலவிட்டுள்ளார்.

வி எஸ் சாஸ்திரி  1922ல் சூத்திரர் குறித்த தனித்த ஆய்வு கட்டுரையை எழுதுகிறார். 1923ல் வேறு ஒரு கட்டுரையில் வேதம் கற்கவோ சடங்குகளை செய்யவோ சூத்திரர்களுக்கு தடையில்லை என்பதை எழுதுகிறார்.விஸ்வபாரதியில் இந்தக் கட்டுரை வந்ததாம்.

1947ல் கோஷால் தர்மசூத்திரங்களில் சூத்திரர்கள் என்கிற ஆய்வுத்தாளைக் கொணர்கிறார். ரஷ்யா அறிஞர் ஜி எஃப் இலைன் தர்மசாஸ்திரங்களை ஆய்வு செய்து சூத்திரர்கள் அடிமையில்லை என்பதை தன் ஆய்வில் தெரிவிக்கிறார்.

அம்பேத்கர் என்கிற பெயரைக் குறிப்பிடாமல் அவர் எழுதிய சூத்திரர் யார் என்பது பற்றி ஏன் ஆர் எஸ் சர்மா இப்படி எழுதினார் எனத் தெரியவில்லை. சர்மா சொல்கிறார்

 The only monograph on sudras ( 1946) was published by a well known Indian politician, who confined himself to the question of their origin. The author was entirely dependent for his source material on translations, and waht is worse, he seems to have worked with the fixed purpose of proving a high origin for Sudras, a tendency which has been very much in evidence among the educated sections of the lower caste prople in recent times"  என்று அம்பேதகர் எழுதிய சூத்திரர் யார் குறித்த தன் விமர்சனப் பார்வையை சர்மா வைத்துள்ளதைக் காண்கிறோம்.  அம்பேத்கர் தன் ஆய்வில் என்ன வந்தடைந்தார் என்பதை சூத்திரர் யார் நூலில் தந்துள்ளார்.

சூத்திரர்கள் யார் எனும் ஆய்வில் அம்பேத்கர் தான் இந்த வரலாற்றாய்வை செய்வதில் முழு தகுதி படைத்தவன் என்பதைச்  சொல்வார். ஆங்கிலத்தில் இல்லாத சமஸ்கிருத இலக்கியங்களா எனக் கேட்டிருப்பார். அதே முன்னுரையில் அவர் சூத்திரர் யார் என்பதற்கான தன் பதிலையும் தந்திருப்பார்.

·        சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஒரு பகுதியினர்.

·        ஆரம்பத்தில் சூத்திரர்கள் தனி வருணமாக இல்லை. பிராம்மணர், சத்திரியர் , வைசியர் என்ற மூன்று வருணம்தான் இருந்தது. சூத்திரர் சத்திரிய வருணத்தின் பகுதியாக இருந்தனர்.

·        சூத்திர மன்னர்களுக்கும் பிராம்மணர்களுக்கும் ஓயா சண்டை இருந்தது. பிராம்மணர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு பிராம்மணர் உபநயனம் செய்ய மறுத்தனர். இந்த பிராம்மணர்களின் வெறுப்புக்கு உள்ளான அந்த சத்திரியர்கள் வைசிய நிலைக்கு கீழ் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் நான்காவது வருணத்தினராயினர்.

பிராம்மணர்களுடன் இந்த மோதல்களில் சில சூத்திர மன்னர்கள் மட்டுமின்றி சூத்திர சமுதாயமே ஈடுபட்டதற்கு சான்றில்லை. அப்போது தனிநபர் அடிப்படையில்லை. குழு, இன அடிப்படைதான் இருந்தது. எனவே குற்றம் குழுவிற்கு, இனத்திற்கு போனது. பிராம்மணர்கள் தங்கள் மேலாண்மைக்கு சகிக்கமுடியாத செயல்களை செய்தனர். உரிமைகளை வைத்துக்கொண்டனர்.

பிராம்மண சூத்திரர் இடையே சமரச முயற்சிகள் நடந்தன என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இந்த சமரசங்களில் பிராம்மணர்கள் கை ஓங்கியே இருந்தது. சூத்திரர்களுக்கு எதிராக கொடுமையான சட்டங்களை இயற்ற இந்த சமரசங்கள் தடையாகவும் இல்லை.

சூத்திரர்கள் ஓர் இனமா, குலமா இவற்றின் ஒரு பகுதியா என்பது நமக்கு துல்லியமாகத் தெரியாது. அப்போது பிராம்மணர்கள் தங்களை ஒரு சாதியாக வைத்துக்கொண்டார்களா எனத் தெரியவில்லை. ஆனால் வகுப்பு நலன்களை- வகுப்பு உணர்வை வளர்த்துக்கொண்டிருந்தனர் எனலாம். பிராம்மணர்களின் சதியை சூத்திரர்களால் உடைக்கமுடியவில்லை. சத்திரியர் ஒன்று பட்டு இருந்தனரா-அவர்கள் சூத்திரர்களிடம் பரிவும் அனுதாபமும் கொண்டிருந்தனரா?. அவர்கள் இடையிலும் வெறுப்பு விரோதம் நிலவியது என்பதையும் பார்க்க முடிகிறது.

சூத்திரர் ஆரியரல்லாதோர் எனில்- ஆரியர் அவர்களை அடிமையாக்கிவிட்டனர் என்றால் யஜூர் அதர்வண ரிஷிகள் அவர்களை வாழ்த்தி ஏன் ஆதரவு தெரிவித்தனர்.

வேதங்களைக் கற்கும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை என்றால் சூத்திரராகிய சுதாசன் எப்படி ரிக்வேதப் பாடல்களை இயற்றினார் என தன்னை மறுப்பவர்களிடம் கேட்டு தன் ஆய்வை முழுமையான ஆய்வாக அம்பேத்கர் அந்த 370 பக்க ஆய்வில்  (தமிழ் வால்யூம் 13)  வைப்பதைக் காண்கிறோம்.

இப்படி அம்பேத்கர் அன்று பேசியதால் இன்றும் பல சாதிகள் தங்கள் உயர் பூர்வீகம் குறித்த உரிமைகளை செய்துகொண்டிருக்கின்றனர் என ஆர் எஸ் சர்மா சொல்வார்.

ஆர் எஸ் சர்மா வேறு ஒன்றையும் சொல்கிறார். நாம் தர்மசாஸ்திர பிரதிகளிடமிருந்து பேசுகிறோம் என்றாலும் அதன் சட்ட விதிகள் நடைமுறையில் எப்படி செயல்பட்டன என்பதற்கு சாட்சியங்கள் போதுமான அளவு நமக்கு கிட்டவில்லை.

1847ல் ரோத் என்பார் சூத்திரர்கள் ஆர்ய இனத்திலிருந்து வேறுபட்டவர்களாக - தனித்த 4வது வருணம் எனப்பேசினார். ஆனால் சர்மா எழுதுவது ஆர்யர் தாசா எனும் இரண்டு பழங்குடிகள் பிரிந்து பிரிந்து சமூக வகுப்புகள் உருவாகியிருக்கலாம்.

The Rig vedic society was primarily organised on the basis of Kin, tribe and lineage not on the basis of social division of labour nor on the differences of wealth. .The Aryan tribes mentioned in the Rg Veda may not have belonged to the same ethnic stock, but they were united by a common language and a common style of life. ..the conflict between the Arya and the Dasa appeared to  be the one within the fold of the Vedic tribes leading more or less the same type of life. Although varna is applied to the aryan and Dasa in the Rg Veda, it does not indicate any division of labour, which became the basis of the broad social classes of later times. Arya and dasa the two large tribal groups which were in the process of disintegration into social classes.

ரிக்வேத சமூகம் அடிப்படையில்  tribal சமூகமாகும். ஆர்யர்கள் நுழைந்த காலத்தில் அவர்கள் அடிமைகளை பெற்றிருந்தார்கள் என அறியமுடியவில்லை. சர்மா நிறம் பற்றி பேசும்போது

 It would be wrong to think that all the blacks were reduced to the status of sudra helots, since there are some references to balck seers.

சர்மாவின் ஆய்வில் புருஷ சூக்தத்தில் 4 வருணம் என்கிற orgin- அதாவது ரிக்வேத 10வது தொகுப்பில் வருகிறது என்கிறார். பின்னர் சில மாறுபாடுகளுடன் அடுத்தடுத்து வந்த இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்களில் சூத்திரர் என்பது சொல்லப்பட்டன. இதில்தான் எவர் எங்கு எவ்வழியாக பிறந்தனர் என்பது பேசப்பட்டதாக சர்மா சொல்கிறார்.

 இப்படி கேள்வி ஒன்றை முன்வைத்து சர்மா பதில் சொல்வதைப் பார்க்கிறோம்.

 When do the sudras first appear as a social class charged with the service of the three higher varnas?

Rg Vedic society had some men and women slaves who acted as domestic servants, but they were not so considerable as to constitute the servile varna of the sudras. The first and the only reference to the sudras as a social class in the Rg Veda is to be found in the Purusasukta pasaage already referred to, which recurs in the 19th book of the Atharva Veda.

முன்பு இருந்த ஆர்யர் - தஸ்யூ- தாச மோதல் ஆர்யர் சூத்திரர் மோதலாகியிருக்கலாம் என்பார் சர்மா.

சூத்திரகள் ஆர்யர்களுக்கு முந்திய இனமா- அவர்களும் ஆர்யர்தானா- என அவர்களின்  ethnological classification  பற்றி முரண்பட்ட ஆய்வுகள் நிலவுகின்றன. ’அபிராஸ் எனப்படுவோரின் அபிரி மொழியை அவர்கள் பேசியுள்ளனர் என்கிற ஆய்வும் இருக்கிறது. ஆர்யர் மொழியை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் எனச் சொல்லும் சர்மா இதையும் சொல்கிறார்.

 The sudras are never mentioned in lists of the Pre Aryan peoples such as Dravidas, Pulindas, sabaras etc. they are always located in the North-west and the Abhiras and sudras were settled near the saraswati and because of the hostility, the sarasvati vanished into desert  என அவர் சூத்திரர்களை ஆர்யருக்கு முந்தியவர்களாக கருதப்படும் திராவிடர்களில் சேர்க்காமையைக் காண்கிறோம்.

சூத்திரர்கள் இராணுவ வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. மகாபாரதத்தில்  அம்பஸ்தாஸ், சிபிச், சூரசேனா என பல சூத்திர இராணுவப்பிரிவினர் சொல்லப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சத்திரியப் பிரிவினர் எனச் சொல்லமுடியுமா என வினவுகிறார் சர்மா. இங்கு அம்பேத்கர் பேசிய  the theory that Ksatriyas were reduced to the position of sudras has hardly anything to commend itself  என்கிறார் சர்மா. இவ்வகையில் அவர் அம்பேத்கர் முடிவினை மறுப்பதைக் காண்கிறோம்.

அதன் எடிமாலஜி பற்றிப் பேசும்போது  Su- grief, dra- dru-to rush என்று சொல்லிவிட்டு சங்கரர் ஏன் ஜனஸ்ருதி சூத்திரர் என அழைக்கப்படலாயினர் என்பதை விளக்குவதாகவும் சொல்கிறார். அதாவது   Sucam abhidudrava- grief rushed on him.

புத்த வழக்கங்களில்   luddacara khuddacara ti- dreadful and mean conduct known as suddas and the word sudda. Ksudra   என்பதிலிருந்து சூத்திரா வந்திருக்கலாம் எனவும் புத்தம் சொல்கிறது.

சர்மா ஆய்வில் சூத்திரர்கள் தொட்டால் தீட்டு, அவர்கள் அசுத்தமானவர்கள் என்ற நிலை அப்போது காணப்படவில்லை என்ற முடிவே இந்த பக்கங்களில் நமக்கு கிடைக்கிறது.

 The sociological theory that a division into classes is always originally connected with ethinical dissimilarities only partly explains the origin of the sudras  and dasas.

இக்கட்டுரையில் அம்பேத்கர் கருத்தும்- அதாவது அவர்கள் சத்திரிய மன்னர்களாக இருந்து பிராம்மண மோதலின் வெறுப்பால் சூத்திர நான்காம் வருண நிலைக்கு இறக்கப்பட்டதும், அதை ஏற்காத சர்மாவின் நிலைப்பாட்டில் இரு அத்தியாயங்களும் பேசப்பட்டுள்ளன.

ரோமிலாவின் ஆய்வும் இன்னும் பண்டைய இந்தியாவில் சமூக நிலைமைகள் குறித்து வந்திருக்கிற ஏராள ஆய்வுகள் வழி நிதானமாக இந்திய வரலாற்றை பார்க்கவேண்டும். பல அறிஞர்கள் தங்கள் பெரும் வாசிப்பு ஆய்வு உழைப்பின் வழி உத்தேசமாக சொன்னவற்றை தேடி கற்றல் அவசியம் என்ற உணர்வு அதிகமாகிறது..

25-9-2022