Skip to main content

Posts

Showing posts from September, 2011

Arundhati Roy 100 mts Speech on Democracy

படிக்கும் பழக்கம்

எனது தாத்தா காங்கிரஸ் தலைவர்கள் மீது மரியாதை கொண்டவர். ராஜாஜி தனி. நேரு, காமராஜ், பக்தவச்சலம் குறித்த பேச்சுக்கள் நிலவும்.பள்ளிகூட நாட்களில் நேருவின் இந்தியாவை கண்டுணர்ந்தேன் புத்தகம் இருந்ததும் அவ்வப்போது (ஓ வி அளகேசன் தமிழில் என கருதுகிறேன்) படித்ததும் நினவிற்கு வருகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் படித்ததாக நினவு. மிரர் என்ற ஆங்கில பத்திரிகை ஆர்வத்துடன் படிப்போம். குமுதம், ஆனந்த விகடன் போன்றவை தவறான பத்திரிகைகள் என்று எழுந்த எண்ணம் இதுவரை மாறவில்லை. சுதேசமித்ரன், அமெரிக்கன் ரிபோர்ட்டர் போன்றவை கிடைக்கும். இந்து, எக்ஸ்பிரஸ் அவ்வப்போது தான் வாசிப்போம். திருவாரூரில் வேலைக்கு சேர்ந்த பின் சிந்தனையில் பெரும் மாற்றம். பின்னர் படிப்பது தொழிலாகவே மாறியது. மார்க்சிய - பெரியாரிய எழுத்துக்கள் என எராளம் உள் நுழைந்தது.