Skip to main content

Posts

Showing posts from January, 2023

Facts are three-fourths of the Law DOPPW DESK- D and DOT’s Proposals

  Facts are three-fourths of the Law DOPPW DESK- D and DOT’s Proposals In this piece I have given DOPPW DESK- D Paras signed dated 21-9-2022 relevant to Pension revision and Pension fixation. In the second Part, I have given the Proposals of DOT thro PPT presented to the Associations for Pre and Post 2017 and requirement of NE pay scales. In the third part I have given my sum up of both DOPPW DESK-D and DOT’s Proposals and need of further enrichment. Part 1 ·         DOPPW No 4/19/2022- P & PW ( D)    DESK- D ( signed dated 21-9-2022) Para 9 (speaks about the DOT’s proposals about Pension revision for pre 2017 and determination of Pension fixation of Post 2017 and linking fitment with BSNL Pay revision) “DOT has proposed that in the absence of any benchmark for revision, the benefits of 3 rd PRC may be extended to the Pensioners by merging the basic and IDA/DR as on 1-1-2017 with NIL fitments factor, and placement in the revised Pay scales of the 3 rd PRC. This woul

காந்தி படுகொலையும் வெறுப்பரசியலும்

  காந்தி படுகொலையும் வெறுப்பரசியலும் வெறுப்பு அரசியல் எப்போதும் எதிரியை கட்டமைத்துக்கொண்டேயிருக்கும் . எதிரி இல்லையெனில் தனக்கு இருப்பில்லை என்பதை அது நன்றாக அறியும் . தன் கோட்பாட்டு மரணம் நேராதிருக்க எதிரியின் மரணம் குறித்து சிந்தை செலுத்தும் .. அப்படியே மரணித்தாலும் புதிய எதிரி ஒன்றை அது எப்படியாவது நிர்மாணித்து அதை செலாவணியாக்க எத்தனிக்கும் . வெறுப்பு அரசியல் தன்னை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தும் . மதம் , சாதி , இனம் , மொழி என அது பிரதான வடிவங்களில் ஏதோவொன்றையோ இல்லை அனைத்தையுமோ பெறும் .   வெறுப்பரசியல் எப்போதும் எவரையும் திட்டிக்கொண்டேயிருக்கும் . அதன் இலக்கியமே வசவுமொழிதான் . அதற்கு வரலாற்றை தோண்டிப்பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருக்காது . ஆனால் நடந்தவை - கடந்தவை எல்லாம் தனக்கு மோசம் செய்யப்பட்ட - தன்னை அபகரித்துக்கொண்டே நிகழ்வுகளாகவே அது வரலாற்றை சுருக்கிப் பார்க்கும் . மோசம் எவரால் என அது பேசித்தான் தன் எதிரியை சுட்டிக்காட்டும் . அதற்கு   நிவாரணத்தை பெற்றே ஆகவேண்டும் என கதையாடும் . வரலாற்றை நேர்செய