ஏன் சொல்லவேண்டியுள்ளது?
பென்ஷன் ரிவிஷன் தொடர்பாக பல பக்கங்களை எழுதியுள்ளேன். இதில் பெருமை என ஏதுமில்லை. எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள எழுதிக்கொண்டவைதான். என் புரிதல் சரியாக இருந்தால் மற்றவர்களும் அதை சரிபார்த்துக்கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில்தான் பொதுவெளியில் அதை பகிர்ந்து வருகிறேன்.
பென்ஷனர் அசோசியேஷன்களில் பணிசெய்யக்கூடிய பலர் என்னிலும் முதியவர்கள். அனுபவம் நிறைந்தவர்கள் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். எனக்கு சரியெனப்படுவதை சொல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் சொல்லிவருகிறேன்.
DOT பலகாலம் (நானும்
தான்) ஊதிய மாற்றமில்லாமல் ஓய்வூதிய
மாற்றம் இல்லை என்ற நிலைப்பாட்டில்
இருந்தனர். இப்போதுகூட ஊதிய மாற்றமில்லாமல் பென்ஷன்
மாற்றம் என்பதை அறிந்து என் மனம் வருத்தப்படாமல் இல்லை. In the absence of Pay Revision ஓய்வூதிய மாற்றத்தை DOT செய்யமுடியும் என்பதை ஏற்கச் செய்த
பெரிய சாதனையை ஓய்வூதிய சங்கத்
தலைவர்கள் செய்துள்ளனர். இது அவர்களுக்கான நல்ல
வெற்றியும் கூட. ஆனால்
இதற்கு புதிய ஊதிய விகிதங்கள், 37 ஏ வில் மாற்றம் தேவை என்கிற நிலைப்பாட்டை DOT உணர்த்தியுள்ளது.
இந்த முயற்சியில் DOT சில முன்மொழிவுகளை அக் 17, 2022ல் எழுத்து பூர்வமாக கொடுத்தது. நவ 2022 கடிதத்திலும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. வெளிக்கசிந்த அதன் ‘நோட்சீட்’ வழியாகவும் அதன் எண்ணம் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அதன் பென்ஷன் முயற்சிகள் 3வது ஊதியக்கமிட்டி ஊதிய நிலைகளை எடுத்துக்கொண்டே என்பது புலனாகியுள்ளது. 1-1-2017 முதல் Pre 2017 மற்றும் post 2017 பலன்களை - அதாவது முன்னவர் பென்ஷன் உயர்வு வழியாகவும், பின்னவர் Notional Pay Fixation வழியாகவும் Pension fixation என்பதும் சொல்லப்பட்டு வருகிறது.
DOT முன்மொழிவில் வந்துள்ள நெருடலான பிரச்னை அது பேசிய NIL Fitment என்பது தான். இதை 3rd PRC சொல்லிய பிட்மெண்ட் அடிப்படையில் மாற்றவேண்டிய தேவை சில அசோசியேஷன்களால் உணரப்பட்டுள்ளது. அதைக்கொணர அவர்கள் முயன்று வருகிறார்கள்.
வேறு சில சங்கங்கள் போராட்டப்பாதையில் இறங்கி கட்டம் கட்டமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் 7 வது ஊதியக்குழு அடிப்படையில் 2.515 பெருக்கு மடங்கில் பென்ஷனை உயர்த்திக் கேட்கிறார்கள். 7 வது ஊதியக்குழு 1-1-2016 முதல் 2.57 பெருக்கு மடங்கில் மாற்றம் எனச் சொன்னதை இவர்கள் பிரித்து (100 + 125+ 32) இதில் 32யை தனியாக எடுத்து தங்களின் 100 + 119.50 + 32 என கொண்டுகூட்டி கணக்கிட்டு கோருகிறார்கள். ஊதியக்குழு விஷயத்தில் DOT ’கொண்டுகூட்டிப் பொருள்’ என இதுவரை எதையும் BSNL Absorbed க்கு செய்ததில்லை.
பி எஸ் என் எல் துறையில் நுழைந்து ஓய்வு பெறும் பொதுத்துறை ஊழியர்கள் 5 ஆம் ஊதியக்குழுவரை அரசாங்க ஊழியர்கள்தான். 6ஆம், 7 ஆம் ஊதியக்குழு வந்ததால் இவர்களுக்கும் அதன் பொருத்தப்பாடு என்கிற பிரச்னை எழுந்தது. இந்த ஊதியக்குழுக்களின் pension ஓய்வூக்கால பலன்கள் தொடர்பான பரிந்துரைகளில் சிலவற்றை அவர்கள் கட்டாயம் BSNL Absorbed Employeesக்கும் அதன் வழி பென்ஷனர்களுக்கும் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை 37 A விதி 8ன் மூலம் தோழர் குப்தா உறுதிபடுத்தி சென்றுள்ளார். அந்த விதி பேசும் பார்முலாவில் ’பிட்மெண்ட்’ என்பது வரவில்லை என்ற புரிதல் தேவைப்படுகிறது.
6வது ஊதியக்குழு என்றால் 1-1-2006 லிருந்து BSNL Absorbed Employeesக்கு கொடுக்கப்பட வேண்டியவை எவை, 1-1-2007 லிருந்து கொடுக்கப்படவேண்டியவை எவை என்பதை applicability- incorporation எனப் பிரித்து DOT தந்தது. அதேபோல் 7வது ஊதியக்குழுவின்படி அது கிராஜுடி சீலிங்கை மட்டும் 20 லட்சமாக 1-1-2016 முதல் உயர்த்திக் கொடுத்தது. ஆனால் அன்று மத்திய பென்ஷனருக்கான DA linked Enhanced Gratuity என்பதை applicability ல் தரவில்லை.
குறைந்த
பட்ச அதிக பட்ச பென்ஷன்,
கிராஜுடியை டி ஏ உடன் இணைத்து உயர்த்துதல்,
புதிய பென்ஷன் நிலைக்கேற்ப 80 முதல்
100 அதற்கு மேல் வயதானவர்களுக்கு கூடுதல்
பென்ஷன் போன்றவற்றை அதனால் புதிய பென்ஷன்
மாற்ற உத்தரவில்தான் 1-1-2017 முதல் என்று incorporate
செய்யமுடியும். இந்த 1-1-2016 முதலான applicability யிலோ அல்லது 1-1-2017 முதலான
incorporationலோ ’பிட்மெண்ட்’ என்ற காரணிக்கு இதுவரை
இடமில்லை. ஏன் இடமில்லை என்றால் ’37 ஏ
விதிக்கு’ உட்பட்ட ஒன்றாக பிட்மெண்ட் என்ற
காரணி இல்லை. அது 37 ஏ ல் ஏற்கப்பட்ட பென்ஷன் பார்முலா
parity ல் ஒன்றாக இல்லை.
7வது
ஊதியக்குழு சம்பளம் மற்றும் பென்ஷன் பரிந்துரைகளை தந்தாலும் BSNL Absorbed Employeesக்கான எதையும் அதன்
Terms of Refலோ பரிந்துரைகளிலோ தரவில்லை. தோழர் குப்தா போராடி விளக்கம் பெற்ற 37 ஏ
படி தான் அதன் பென்ஷன் பார்முலா தொடர்பான சில அம்சங்களை BSNL Absorbedகாரர்கள் பெற்று
வருகிறோம்.
3வது
ஊதிய கமிட்டி பொதுத்துறை அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் அதற்கான நிபந்தனைகள் பற்றிப்
பேசுகிறது. ஊதிய மாற்றம் ஊழியர்களுக்கு வந்திருந்தால் அதன் அடிப்படையில் BSNL
Absorbed பென்ஷனுருக்கும் பென்ஷன் மாற்றம் வந்திருக்கும். ஊதிய மாற்றம் சில நிபந்தனைகளால்
BSNLல் இதுவரை நடைபெறவில்லை. இருந்தபோதிலும் DOT பென்ஷன் மாற்றம் செய்திட முன் வந்திருக்கிறது.
இதன் மூலம் 1-1-2017ல் தொடரும் ஊழியர் ஓய்வூதியர் ஆகும்போது அவர்களுக்கும் பாதகமில்லாமல்
1-1-2017 முதலேயே Notional Pay fixation மூலம்
பென்ஷனை நிர்ணயிக்க PPO எழுத முன்வந்துள்ளது. இதை பிட்மெண்டில் மேம்படுத்தி அனைவரும்
ஒன்றாக நின்று இழுத்துச் செல்லவேண்டும் என்ற பொறுப்பு- அவசியமான சூழல் இருக்கிறது.
அமைப்புகள்
தாங்கள் நினைப்பதே சரி எனக் கருதி செயல்பட உரிமையிருந்தாலும், குறிப்பிட்ட சூழலில்
குறிப்பிட்ட அம்சத்தின் செல்திசையை புரிந்து அனைவரும் சேர்ந்து நின்று குரல் கொடுக்கும்போது பென்ஷன் மாற்றம் காலத்தில் கிடைக்கும் நிலையை உருவாக்கமுடியும்.
12 Hrs 22-1-2022 -
R.Pattabiraman
Comments
Post a Comment