https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Wednesday, January 4, 2023

அப்ப நம்ம ராஜதானி..

 

அப்ப நம்ம ராஜதானி..

 

The Emergence of Provincial Politics 1870-1920   D A washbrook எழுதி 1976ல் வெளிவந்த புத்தகம்.  அதில் ஒரு சாப்டர் The Governance of Madras - அதை வாசித்துக்கொண்டிருந்தபோது அப்ப இருந்த ஊழல் நிர்வாகம் மற்றும் நமது சமூகம் பற்றி ஏராள செய்திகள் தரப்பட்டுள்ளன. மாவட்டம்வாரியான செய்திகள் கிடைக்கின்றன.



ராஜதானியில் பெரும்பகுதி 75 சதம் ரயத்வாரி முறையிலானது. வருவாய் மாவட்டம் என்பதில் 20 லட்சம் மக்கள் இருந்திருப்பர். தாசில்தார் தன் கட்டுப்பாட்டு கிராமங்களை ஒருமுறை பார்வையிடவே ஆறு மாதங்கள் அலுவலகம் விட்டு வெளியேறவேண்டும். 1885 வரை கலெக்டர்களே ஜமாபந்தியை நடத்தி வந்துள்ளனர். மிக அதிகமான அதிகாரவர்க்கமுறையை பிரிட்டிஷ் நிர்வாகம் திணித்தது. கிராம வருவாய் குறித்து 24 தனிக் கணக்குகள், 115 வரிசைகளில் இருந்தனவாம். தாசில்தார் அளவிலே கூட அவர்கள் தங்கள் கீழ் பணியாளர்களை முழுமையாக நம்பவேண்டியிருந்தது. அவர்களை கண்காணிப்பது என்பது அவரால் முடியாமல் இருந்தது.

1880களில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி ஏராள ஊழல்கள் வெளியாயிற்றாம். தலைமைச் செயலர் ஓய்வு பெறப்போகிறார் என்றால் அதற்கு முன்னர் அவரிடம் ஏராள ஊழல் பணங்கள் வந்து சேர்ந்துவிடும் நிலைமை இருந்ததாம். கலெக்டர்கள் ஊழல் குற்றச்சாட்டில் தப்பத்தெரியாமல் டிஸ்மிஸ் ஆகியுள்ளனர். 1880க்கு பின்னர் ஓராண்டில் கலெக்டர் மாற்றம் என்பது சேலம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் நடந்ததாம்.

1880ல் மதுரை கலெக்டர் சி எஸ் க்ரோல் ராமநாதபுரம் ஜமீனுடன் நெருக்கமாக இருந்தாராம். சுப்பையா அய்யர் என்ற வக்கீல்தான் அவருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துள்ளார். இதனால் சுப்பையா மகன் ராமசாமி ஹொசூர் ச்ரேஷ்டிதார், மகன் சுப்ரமணியன் தாசில்தாராக உயர்ந்தனராம். இவர்களுக்கு நெருக்கமான கோட்டசாமி தேவர் லோகல் போர்ட் துணைத்தலைவரானார். உறவினர் ராமசுப்பு பப்ளிக் பிராசிக்யூட்டரானார். மதுரை ராஜா போல் கலெக்டர் க்ரோல் இருந்தாராம். போடிநாயக்கனூர் ஜமீனை பயன்படுத்தி தேயிலை தோட்டங்கள் வாங்கப்பட்டதாம்.

எவர் தனக்கு உதவியாக எடுபிடியாக இருந்தார்களோ அவர்களை பல பதவிகளில் அமர்த்திய நிகழ்வுகளை இதன் மூலம் அறிகிறோம். ஹென்றி மாண்ட்கோமரி எனும் அதிகாரி தனக்கு பட்லராக இருந்த முத்துசாமி நாயக்கரை தாசில்தாராக ஆக்கினாராம்.

 சேலம் கலெக்டர் மக்லியன் அங்கிருந்த முஸ்லீம் ஜனங்களை மனதில்கொண்டு அவர் உருது கற்று அதில் புலமையும் பெற்றாராம். சிலநேரங்களில் இந்து- முஸ்லீம் மோதல்கள் அவர் காலத்தில் நடந்ததாம்.

 நீலகிரி வயநாடு பகுதிகளில் அரசிற்கு வரி கட்டுவதை தவிர்க்க  concealed cultivation  அங்கிருந்த கீழ்மட்ட பணியாளர்கள் உதவியுடன் நடந்ததாகவும் பின்னர் கண்டறியப்பட்டு கொடுமையான வரி சித்தரவதைக்கு அப்பகுதி ஆளானதும் செய்தியாக கிடைக்கின்றன.

1902ல் அம்ப்தில் இந்திய செயலர் அறிக்கை ஒன்றில்என்ன செய்வது- விளைச்சல் குறித்து தகவல் தரவேண்டிய பலரும் லஞ்ச ஊழலுக்கு இரையானவர்களாக இருக்கின்றனர். கிராம தனவந்தர்கள் பணியாளர்களுக்கு ஏதாவது கொடுத்து சரிகட்டி விடுகின்றனர். அதேபோல் குத்தகைதாரர்களிடம் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது என்ற செய்தியை போகாமல் அவர்கள் ஏமாற்றியும் விடுகின்றனர்எனச் சொல்வதைக் காண்கிறோம்.

1908ல் கல்கத்தாவிலிருந்து கோதாவரி வந்த கமிஷன் ஒன்று கலெக்டர் ஜே கம்மிங் இடம் உங்கள் அலுவலகமும், தாசில்தார் அலுவலகங்களும் படு ஊழல் உறைவிடங்களாக உள்ளன என  தெரிவித்து சென்றதாம்.

வருவாய் இலாகா மட்டுமல்ல பொது மராமத்து பணி இலாகாவும் கூட படு ஊழல் களமாக இருந்ததாம். போலீஸ் துறையில் இருந்ததை 1883ல் தஞ்சாவூர் எஸ் பி சொல்கிறார். மாவட்டத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. போலீஸ்காரர்கள் மீது குற்றங்களை நிரூபிக்க முடியாமல் போவதால் அவர்கள் திரும்ப திரும்ப ஊழலில் ஈடுபடுவதும் தெரிகிறது என அவர் புலம்புவதைக் காண்கிறோம்.

கர்சான் அவர்கள் காலத்தில் மதராஸ் போலீஸ் ஊழல் குறித்து போடப்பட்ட கமிஷன் எங்கும் நேர்மையின்மை மட்டுமே இருக்கிறது – dishonesty everywhere என்ற  அறிக்கையை தந்துள்ளது.

1886 வட ஆற்காடு கலெக்டர் திருப்பதி பற்றி தெரிவித்தார். திருப்பதி புனித ஆலயத்தில் அர்ச்சகர் கைகளில் மக்கள் கொடுக்கும் பணம் ஏராளம் புழல்கிறது. அங்கு பணியாளர்களும் சேர்ந்து வாழ்க்கை சீரழிந்து கிடக்கிறது. ஜமீன்களின், அர்ச்ச்கர்களின் ஒழுக்கமும் கேள்விக்குறியாக இருக்கிறது.. கீழ்மட்ட மாஜிஸ்ட்ரேட்களும் இதற்கு விலக்கல்ல. மாவட்டத்தில் 3 அல்லது 4 சப் மாஜிஸ்ட்ரேட் எந்த வேலையையும் செய்வதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது.

குண்டூர் மாவட்டத்தில் பிராமணர்களில் சிலர் நிர்வாக ஏற்பாடுகளை தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு இணையான நிர்வாக கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக பிரைகென்பெர்க் எனும் அதிகாரி 1850க்கு பிற்பட்ட நிலையை சொல்லியுள்ளார். அவர்கள் மராத்திய பிராமணர்கள் என்ற குறிப்பையும் அவர் தருகிறார்.

பல மாவட்டங்களில் சிரேஸ்தார் எனப்படும் தலைமை எழுத்தர்கள்தான் கலெக்டருக்கு நிர்வாகத்தை சொல்லிக்கொடுத்தாக வாஷ்புரூக் எழுதுகிறார். கலெக்டர்கள் அவர்கள் சொல்படிதான் நடந்துள்ளனர்.

1884ல் கோயமுத்தூர் மாவட்ட நிர்வாகமே ஒரேகுடும்பத்தின் கையில் இருந்த செய்தி கிடைக்கிறது. சிரேஸ்டிதார், எழுத்தர், தாசில்தார், சப் மாஜிஸ்ட்ரேட், தாலுகா சிரேஸ்டிதார், முன்ஷிக்கள் அனைவரும் ஒரே குடும்பத்திலிருந்து வந்துள்ளனர். வேறு பணியாளர் எவரும் இக்குடும்ப உதவியில்லாமல் உயரமுடியாது.

எம் கிராண்ட் டஃப் என்ற கவர்னர்  மதராஸ் மாவட்டம், கடப்பா பகுதியில் ஒரு பிராம்மண குடும்பத்தின் சொந்த பந்தம் 80 பேர்கள் இரு டிவிஷன் பதவிகளில் இருந்தனராம்.

1880ல் விசாகப்பட்டினத்தில் உள்ளூர் காண்ட்ராக்டர்களும் அய்ரோப்பிய உப்பு கமிஷனர்களும் சேர்ந்து லட்சக்கணக்கான ரூபாய் ஊழலை செய்தார்களாம்.

1884ல் தஞ்சாவூரில் remission scandal ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம். கண்டுபிடித்தவர் எச் எஸ் தாமஸ். தஞ்சை கலெக்டர் பென்னிங்டன். பெருமழை காரணமாக வரிவஜா தள்ளுபடிக்கு 8.219 லட்சம் மதிப்பிற்கு கலெக்டரால் அனுமதி தரப்பட்டுள்ளது. விசாரித்ததில் இந்த  தில்லுமுல்லுவில்பிராமணர் அல்லாதவர்கள்சிலமராத்திய பிராமணர்களுடன்கூட்டாக இருந்தது தெரியவந்தது. 4.073 லட்சம் இதில் பொய்யான மனுக்கள் என்று அறிந்தனராம். இந்தபிராடைசெய்யலாம் என சொல்லிக்கொடுத்தவர் வெங்கட்ராம அய்யர் எனும் சிரேஸ்டிதாராம்.

1855ல் போடப்பட்ட டார்ச்சர் கமிஷன் வருவாய் துறையிலிருந்து போலீஸ் துறையை தனியாக பிரிக்கச் சொல்லியது. தாசில்தாருக்கு இதனால் போலீஸ் மீதான முழு அதிகாரம் குறைந்தது. 1900ல் 2000 மக்களுக்கு ஒரு போலீஸ் என்பது பொதுவாக ஏற்கப்பட்டது. சில இடங்களில் இது 4000 பேருக்கு ஒருவர் என்றுஇருந்தது.

1885ல் எச் எஸ் தாமஸ் என்பார் கூறும்போது, தஞ்சாவூர் பகுதியில் அரசாங்க அதிகாரி- ஊழியர் எனப்பார்த்தால் ஏராள நிலங்களை வாங்கிப்போட்டவர்களாக இருந்தனர். மதிப்பிட்ட வகையில் 97 லட்சத்திற்கு வரி கட்டவேண்டியிருந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து 73 சதுரமைல் நிலச் சொத்தி்ற்கு 2 லட்சம் மட்டுமே கட்டி வந்தனர்.

1916ல் தேவகோட்டை பற்றிய அறிக்கையில் உலகளாவிய வணிகர்களான நாட்டுக்கோட்டை செட்டியார்களால் வாங்கமுடியாத அலுவலர் எவருமில்லை என்றது.

1886-1925 40 ஆண்டுகளில் ராஜதானி நிர்வாகம் நிலவரியை ஏக்கருக்கு 12 சதம் உயர்த்தியது.ஆனாலும் நில வருவாய் ராஜதானியின் மொத்த வருவாயில் 1880ல் 57 சதம் இருந்தால், 1920ல் 28 சதமாக வீழ்ந்தது. இந்தக் காலத்தில் அதன் எக்சைஸ் வருவாய் 60 லட்சத்திலிருந்து 5.4 கோடியாக உயர்ந்தது. மிராசுதார்களிடமிருந்து பண்ணையில் அடிமைபோல் இருந்த பல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஃபெடரிக் நிக்கல்சன் எனும் அதிகாரியின் மூலம் கிராமத்தில் குடியிருப்புகள், குறைந்த வட்டிக் கடன்கள் ஏற்பாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்ததாம். கோ ஆப்ரடிவ் கிரிடிட் சொசைட்டி சட்டம் உருவாக்கப்பட்டதாம்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் தனியார் வங்கிகளில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வருமான வரியை குறைத்து ஆயிரக்கணக்கில் மிச்சம் செய்துகொண்டனர். மலபார் கள் இறக்கும் முதலாளிகள்- கடைகள் எக்சைஸ் வரியிலிருந்து தப்பிக்கும் கலையை தலமட்ட அலுவலர்களை கையில் போட்டுக்கொண்டு செய்தனர்.

1883-93 statutory civil service களில் உள் நுழைந்த பலரும் மிக குறைவான தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். அதிகம் பெற்ற பலர் உள் நுழையமுடியாமல் போனதாம். அதேபோல் 1912-1917ல் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு வந்தவர்களில் 87 சதம் போட்டித்தேர்வில் உட்காரக்கூட இல்லையாம். அவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 

4-1-2023

 

No comments:

Post a Comment