பட்டாபியின் புதிய புத்தகம் மின்புத்தகமாக கீழ்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். https://freetamilebooks.com/ebooks/periyar_communism/ அல்லது https://ia801507.us.archive.org/3/items/periyar_communism/periyar_communism_a4.pdf https://archive.org/details/periyar_communism/periyar_communism_a4 பிரிண்ட் வடிவில் பெற விரும்புவோர் காரைக்குடி தோழர் லெனின்குரு அவர்களை 9578078500 ல் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். முன்னீடு பெரியார் பெரும் ஆளுமைகளுள் ஒருவராக உயர்ந்து நிற்பவர். தந்தை பெரியார் என தமிழகத்தில் பெரும் மரியாதையுடன் நன்றிபாராட்டி அழைக்கப்படுபவர். கடவுள் மறுப்பு- மத எதிர்ப்பு- பிராமண எதிர்ப்பு- ஜாதி ஒழிப்பு ஆகியவற்றில் அவரது கலகக்குரல் உரக்கக்கேட்டது. விளைவுகளுக்கு அஞ்சாமல் ஒளிவு மறைவின்றி ’ அபிப்பிராயங்களை ’ வெளிப்படுத்தியவர். இடமறிந்து என்பதெல்லாம் இல்லாமல் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் சரியென தனக்குப்படும் கருத்துக்களை வெளியிட்டவர் பெரியார் எனும் பேருரு மனிதர். பொதுவுடைமை- பொதுவுரிமை விவாதத்தை கூர்மையாக நடத்தியவர் பெரியார். கம்யூனிஸ்ட்களுடன் தோழமையாக இருந்து விவ