Skip to main content

வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் சிறுவெளியீடு

                                   வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர்

சிறுவெளியீடு  

கீழ்கண்ட இணைப்பில் பார்க்கமுடியும்

https://ia601407.us.archive.org/25/items/web_20201015/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8Dweb.pdf

முன்குறிப்பு

அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று. சிறுபிரசுர மின்வடிவம் பெறுகிறது. வட்டமேசை மாநாட்டு விவாதங்களில் அம்பேத்கரின் மேதாவிலாசம்- அறிவுக்கூர்மை எவ்வாறு வெளிப்பட்டது என்பதை இந்த விவாதங்கள் தெளிவுபடுத்தும். இன்று ஒடுக்கப்பட்டோர் சிறிய அளவாவது பெற்றுள்ள அரசியல் அதிகார பகிர்வு, நிர்வாக அதிகார பகிர்வுகளுக்கு அம்பேத்கர் எவ்வளவு கடுமையான பணியை மேற்கொள்ளவேண்டியிருந்தது என்பதை இந்த விவாதங்கள் புலப்படுத்தும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டு விரவிக்கிடக்கும் விவாதங்களை படிக்க முடியாதவர்களுக்கு இச்சிறு பிரசுரம் துணையாக இருக்கலாம். முழுமையான விவாதங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை புதிய யுகம் என வர்ணித்தார். பல உரைகளில் எவரையும் கடவுளாக்காதீர்- என்னையும் கடவுளாக்காதீர் என்றார். எந்த தலைமையின் மீதும் வழிபாட்டுணர்வு அவசியமில்லை என்றார். விடுதலை அரசியல் உரிமைகளில் இருக்கிறதே தவிர யாத்திரைகளில் இல்லை. சொந்தக் கால்களில் கடமையுணர்ச்சியுடன் நிற்க கற்பீர் என்பதை அவர் அறிவுறுத்திவந்தார்.

சட்டமியற்றும் அதிகாரம் என்பதே அவர் விவாதத்தின் சாரம் என சொல்லமுடியும். முதலாவது வட்டமேசை மநாடு, இரண்டாம் மாநாடு, அரசியல் சட்ட சீர்திருத்த இணைந்த குழுவின் சார்பில் சாட்சியங்களை பெறுதல்- சர்ச்சில் உட்பட பலரிடம் குறுக்கு விசாரணை  போன்றவை இச்சிறு பிரசுரத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் பேசிய உரை, காந்தி- அம்பேத்கர் இடையே சிறுபான்மை குழுவில் நடந்த விவாதம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இப்பிரசுரம்  உணர்த்தலாம்.

புனே உடன்பாடு குறித்து ஏராளம் எழுதப்பட்டிருக்கிறது. அது குறித்த சாட்சிய விசாரணைகளில் வந்த கருத்துக்களில் சில இங்கு வைக்கப்பட்டுள்ளன. தாகூர் உட்பட சர்ச்சையில் வருகிறார். இந்து மகாசபை புனே உடன்பாட்டிற்கு எதிராக நின்றதா என்பது விசாரணைக்கு உட்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் இன்றும் தொடரும் பல்வேறு சர்ச்சைகள் குறித்த நீள் விவாதமாக வட்டமேசை விவாதங்களை பார்க்கமுடியும்.

15-10-2020                                              ஆர். பட்டாபிராமன்


Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு