Skip to main content

Posts

Showing posts from April, 2021

காந்தி -- மாவோ

  காந்தி -- மாவோ                                    -ஆர். பட்டாபிராமன் காந்தியடிகளை மார்க்ஸ் லெனினுடன் ஒப்பிட்டதுபோல் மாவோவுடனும் ஒப்பீடு செய்யலாம். இந்தப்பணியை Mao Tes Tung and Gandhi   என்கிற ஆக்கத்தின் மூலம் Jayantanuja Bandyopadhyaya செய்துள்ளார். இந்த ஆக்கத்தில் ஜெயந்தனுஜா காந்தியின் சத்தியாகிரகம் மாவோவின் மக்கள் யுத்தம் குறித்தும் , மாஸ்லைன் மற்றும் நிர்மாணத்திட்டம் குறித்தும் ஆய்விட்டுள்ளார் . இரு பெரும் ஆசிய ஆளுமைகளான மாவோ மற்றும் காந்தி ஆகியவர்களின் செல்வாக்கு எப்படி பலரிடம் சென்றடைந்தது என்பதை குறித்தும் ஆசிரியர் விவாதிக்கிறார் . சமூக மாற்றத்திற்கு இந்தியாவில் - சீனாவில் குறிப்பிட்ட சூழலில் இருவரின்   பங்களிப்பும் விவாதிக்கப்பட்டுள்ளது .   காந்தி மாவோவைவிட 24 ஆண்டுகள் வயதில் மூத்தவர் . ஆனால் சொந்த நாட்டின் அரசியல் மற்றும் நிகழ்வுகளில் அவர்கள் சமகால நுழைவை பார்க்கமுடிகிறது . விடுதலைக்குப் பின்னர் 5 மாதங்களில் காந்தி படுகொலை நிகழ்ந்துவிடுகிறது . மாவோ சீனப்புரட்சியின் நாயகனாக எழுந்து 1976ல் மறையும்வரை அந்நாட்டின் உயர

காந்தி – லெனின்

  காந்தி – லெனின்                     ஆர். பட்டாபிராமன் காந்தியடிகள் தான் வாழ்ந்த காலத்திலும்   தொடர்ந்தும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் – ஆளுமைகளுடன் ஒப்பிடப்படுவதை பார்க்கமுடியும். மார்க்ஸ் உடன் காந்தியை ஒப்பிட்டு மஷ்ருவாலா எழுதினார். விநோபாபாவே அவர்கள் அதில் முன்னுரை தந்திருப்பார். காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை காந்தியைக் கண்டுணர்தல் என்கிற எனது முந்திய ஆக்கத்தில் பல்வேறு கட்டுரைகளில் இடம் பெற செய்துள்ளேன். மார்க்சியம் - லெனினியம் என்கிற அளவிற்கு மார்க்ஸ் உடன் இணைப்பைப் பெற்ற லெனினுடன் காந்தியை ஒப்பிடுதல் என்பது இங்கே முயற்சிக்கப்பட்டுள்ளது. காந்தியையும் லெனினையும் ஒப்பிட்டு 1920 களில் இரு புத்தகங்கள் வந்தன . ஒன்று மார்க்சிய – சோசலிச சிந்தனைகொண்ட இந்திய இளைஞர்   தோழர் டாங்கே (1899-1991) எழுதி 1921 ல் வெளியான புத்தகம்   Gandhi VS Lenin . இப்புத்தகம் அளவில் சிறியது . இந்த 2021 ஏப்ரலில் அப்புத்தகம் நூற்றாண்டைக் கண்டது.   அடுத்த புத்தகம் ரெனி ஃபுலோப் மில்லர் எழுதி 1927 ல் வெளிவந்த லெனினும் காந்தியும் ( Lenin and Gandhi) என்பதாகும். அளவில் பெரிய புத்தகம் . ரெனி ஃ