Skip to main content

Posts

Showing posts from March, 2022

கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்

  புதுவரவு                         கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள் நூல் மார்ச் இரண்டாவது வாரத்தில் எனக்கு வந்து சேர்ந்தது .   ஆசிரியர் கோவை வழக்கறிஞர் , மார்க்சிய ஆய்வாளர் தோழர் கே . சுப்ரமணியன்   ( கே எஸ் ) அவர்கள் .   மார்க்சிய தமிழ் கிடங்கிற்கு அவ்வப்போது நூல்களை தந்துகொண்டிருப்பவர் . AITUC, ISCUF,   கலைஇலக்கிய பெருமன்றம் என தனது வெகுஜன பணிகளை வழக்கறிஞர் தொழிலுடன் கவனத்துடனும் ஆளுமையுடனும் செய்து வரக்கூடிய தோழர் . அவரின் அடுத்த அரும்படைப்பாக மேற்கூறிய புதிய புத்தகம் வெளிவந்துள்ளது . முதுபெருந்தலைவர் தோழர் ஆர் . நல்லகண்ணு (RNK) சென்னையில் வெளியிட நூலிற்கான முன்னுரையை பழங்குடி மக்கள் இயக்க தோழர் வி பி குணசேகரன் எழுதியிருக்கிறார் . தோழர் குணசேகரன் பெருமிதத்துடன் தன் முன்னுரையை இவ்வாறு முடித்துள்ளார் “ இந்த புத்தகத்தில் முதல் மூன்று பொதுச்செயலர்களைப் பற்றி படிக்கும்போது நாம் எவ்வளவு புகழ்மிக்க பரம்பரையின் வாரிசுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருக்கிறோம் எ

பாவேந்தம் மடல் இலக்கியம்

                       பாவேந்தம் மடல் இலக்கியம் பாவேந்தர் மடல் இலக்கியம் எனும் தொகுப்பை காணநேர்ந்தது . இளங்கணி பதிப்பகத்தார் பாவேந்தம் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகயிருக்கிறது . பாவேந்தம் மடல் இலக்கியம் என்னும் இத்தொகுப்பில் 89 கடிதங்கள் உள்ளன . இவை 1933 முதல் 1964 வரை உள்ள காலங்களில் பாவேந்தரால் எழுதப்பட்டவை .   நண்பர்கள் , தலைவர்கள் , மாணவர்கள் , உறவினர் எனும் நால் வகையினர்க்கு எழுதப்பட்ட மடல்கள் இவை . அவர் கையெழுத்தை அறியவைக்கும் முகத்தான் 4 கடிதங்களை அப்படியே நகலெடுத்து தந்துள்ளனர் .   ஆரம்பத்தில் கனக சுப்புரத்தினம் பின்னர் பாரதிதாஸன் , பாரதிதாசன் என ஒப்பமிட்டுள்ளார் . பா எனக் கூட ஒப்பம் இருக்கிறது .   கடிதங்களில் செளபாக்கியவதி , ஷேமம் , நமஸ்காரம் போன்ற சொற்களையும் பிளே , பப்ளிசிட்டி , லீவு , டிக்கட் போன்ற ஆங்கில சொற்களை அப்படியேயும் பயன்படுத்தியிருக்கிறார் . தனது பிறந்த நாள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் கர ஆண்டு சித்திரைத் திங்கள் 17 ஆம் நாள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் என நினைவு படுத்தியுள்ளார் .

பெதிக் லாரன்சும் பெரியாரும்

                        பெதிக் லாரன்சும் பெரியாரும் விடுதலைக்கு முன்பாக பெதிக் லாரன்ஸ் கமிட்டி எனும் தூதுக்குழு அதிகார மாற்றம் பற்றி கருத்தறியவும் தன் மொழிவுகளை வெளியிடவும் இந்தியா வந்தது . பெதிக்லாரன்ஸ் - கிரிப்ஸ் - அலெக்சாண்டர் என்கிற மூவரும் அதில் இடம் பெற்றனர். மூன்று மாதங்கள் அக்குழு இந்தியாவில் இருந்தது . இந்தியா வந்து இறங்கியவுடன் தங்கள் objects of cabinet Mission குறித்து அக்குழுவினர் பேசினர் . அந்த தூதுக்குழு மார்ச் 23 1946 முதல் ஏப்ரல் 17 1946 வரை பல கட்சித்தலைவர்களை சந்தித்தது .. தூதுக்குழுவை சந்தித்து காங்கிரஸ் , முஸ்லீம்லீக் , சீக்கிய , இந்து மகாசபா பிரதிநிதிகள் தங்களது வாதங்களை வைத்து மெமோவைத் தந்தனர் . கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மெமொரண்டம் தரப்பட்டுள்ளது . திராவிடர் கழகம் சார்பில் பெரியார் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்து கொடுத்தனரா - அக்குறிப்பின் நகல் என்ன என்பதை அறியத் தேடினேன் . நகல் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. அது குறித்து குடிஅரசில் அவர் எழுதிய சில தலையங்கங்கங்கள் இருக்கின்றன. இந்தியன் ரிஜிஸ்டர் 1946 வால்யூம்