https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, March 7, 2022

ஒரு தேசத்திற்கான கடிதங்கள்- ஜவஹர்லால் நேருவிடமிருந்து முதலமைச்சர்களுக்கு

 

ஒரு தேசத்திற்கான கடிதங்கள்- ஜவஹர்லால் நேருவிடமிருந்து முதலமைச்சர்களுக்கு



தோழர் நா. வீரபாண்டியன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள மாதவ் கோஸ்லாவின் நேரு கடித தொகுப்பு தமிழர் அறிவுலக அலமாரியில் அமரவேண்டிய புத்தகம். இந்தியாவின் சமகால பிரச்சனைகளின் அரசியல் நடைமுறைக்கான நல்வழிகாட்டியான புத்தகமும் கூட.

Letters for a Nation from Jawaharlal Nehru to His Chief Ministers 1947-1963  என்கிற தொகுப்பை மாதவ் கோஸ்லா  2014ல் கொணர்ந்தார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை தற்போது (ஜன 2022) எதிர்வெளியீடு கொணர்ந்துள்ளது. தோழர் வீரபாண்டியனுக்கும் எதிர் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள். ஆங்கிலத்தில் 275 பக்கங்கள் கொண்ட புத்தகம் முடிந்தவரை சொற்செட்டுடன் தமிழில் 430 பக்கங்களில் கொணரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளரின் அசுர உழைப்பையும் அவரது  commitmentயையும் படிப்பவர்களால் உணரமுடியும்.

தோழர் பாண்டி தனது குறிப்பில் புத்தக உள்ளடக்கம் குறித்து ஓரளவு சொல்லிவிடுகிறார். நேருவின் முதல் கடிதம் முதலமைச்சர்களுக்கு அக்டோபர் 15, 1947ல் எழுதப்படுகிறது. கடைசிக் கடிதம் டிசம்பர் 21, 1963 உடன் அவர் 400 கடிதங்களை எழுதியுள்ளார். விடுதலையடைந்த பிஞ்சொன்றின் வளர்ச்சிக்கான சூழல்கள்- தடைகள்- ஆற்றவேண்டிய செயல்கள்- அதற்கான ஒருங்கிணைப்புகள் என நேரு அவரின்  செறிவான சிந்தனை ஆற்றலை இக்கடிதங்களில்   அள்ளித்தருகிறார்.

கோஸ்லா இந்த தொகுப்பிற்கான முன்னுரையில் அதன் அவசியத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறார். விடுதலைக்கு முன்னர் சிறைக்கொட்டடிகளில் எழுதப்பட்ட நேருவின் புகழ்வாய்ந்த நூல்களான 1934ல்Glimpses of World History , 1936ல் An Autobiography, 1946ல் The Discovery of India ஆகியவை எதைப் பேசுகின்றன என்பதை கோஸ்லா சொல்கிறார். இந்த மூன்று நூல்களும் நேருவின் அரசியல் பார்வை பற்றிய ஒரு முழுமையற்ற புரிதலையே தருகின்றன. விடுதலைக்கு முன்பாக நேருவின் எழுத்துக்கள், அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை குறித்த அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டினாலும் இவை இரண்டிற்குமான தொடர்பை விடுதலைக்குப் பின்புதான் நேரு தெளிவுபடுத்தினார். இதற்கு இந்தக் கடிதங்கள் முக்கியமானவை என்கிறார் கோஸ்லா.

அவரின் முதல் கடிதத்தை The Call for Concerted Efforts  என்ற பெயரில் கோஸ்லே தருகிறார். தேசக்கட்டுமானம் என்பது சேர்ந்திசை போன்றது. சுதி தாளம் பிசகினால் அபசுரம் உருவாகும் என்பது இசையுலகிற்கானது மட்டுமல்ல- அமைப்பு நாடு என அனைத்திற்குமானதே. இந்த ஒருங்கிணைந்த இசைமுறை செயல்பாடு அவசியம் என்பதை அவர் முதல் கடிதத்திலேயே எடுத்து வைப்பதைக் காணமுடியும். அனைத்துக் கடிதங்களும் எந்த நாளில் எழுதப்பட்டன என்பது புத்தக உள்ளடக்க கட்டுமானத்தின் பகுதியாகவே இருக்கிறது.

இந்த தொகுப்பு ஆறு பகுதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனைத்து குறித்தும் சாம்பிள்காட்டினால் விரிந்துவிடும் என அஞ்சி இன்றுள்ள அரசியல் சூழலுக்கானவற்றை மட்டும் தொட்டுக் காட்ட விழைகிறேன். குடிமகனும் தேசமும் என்ற பகுதி விரிவாக வகுப்புவாதம்- ஆர் எஸ் எஸ் இந்து மகாசபா- சிறுபான்மையினர் பிரச்னை – இந்திய பாகிஸ்தான் உறவுகள்- சர்வதேச உறவுகள் பற்றி விரிவாக பேசக்கூடியன. இந்த முதல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கடிதங்களின் வரிகள் சிலவற்றை தந்துள்ளேன். இன்றைக்கான அரசியலில்  denehruisation  ஏன் அவர்களுக்கு தேவைப்படுகிறது என்பதை இந்த வரிகள் நமக்கு சொல்லும். நேருவின் பல கடிதங்கள் வகுப்புவாதம் குறித்த classical text – செவ்வியல் பிரதியாக இருப்பதைக் காணலாம்.

முதலில் கோஸ்லா கொடுத்துள்ள நேருவின் ஆங்கில வரிகள். அதனைத் தொடர்ந்து வீரபாண்டியன் செம்மையாக தமிழில் தந்துள்ள வரிகள்.

We have a great deal of evidence to show that the R.S.S. is an organisation which is in the nature of a private army and which is definitely proceeding on the strictest Nazi lines, even following the technique of organisation. It is not our desire to interfere with civil liberties. But training in arms of large numbers of persons with the obvious intention of using them is not something that can be encouraged.

The fact that the R.S.S. is definitely and deliberately against the present central and provincial governments need not be considered enough for any action to be taken against them and any legitimate propaganda might certainly be allowed. But their activity more and more goes beyond these limits and it is desirable for provincial governments to keep a watchful eye and to take such action as they may deem necessary.

ஒரு தனியார் இராணுவத்தின் தன்மைகொண்ட ஒரு அமைப்புதான் ஆர் எஸ் எஸ். மேலும் அமைப்பு உத்தியைக் கூட கடைப்பிடிப்பதில் மிக மிகக் கண்டிப்பான நாஜியின் வழிகளில் உறுதியாக நடக்கும் அமைப்பது எனக் காட்டுவதற்கு பேரளவு ஆதாரம் நம்மிடம் உள்ளது. சமூக உரிமைகளில் தலையிடுவது நமது விருப்பமல்ல. அவர்களைப் பயன்படுத்துவதன் வெளிப்படையான நோக்கத்துடன் அதிக அளவிலான நபர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஊக்கப்படுத்தக்கூடிய ஒன்றல்ல.

உறுதியாகவும், உள்நோக்கத்துடனும் ஆர் எஸ் எஸ் தற்போதைய மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு எதிராக இருக்கிறது என்ற உண்மை, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போதுமானது எனக் கருதத் தேவையில்லை. மேலும் எந்த ஒரு முறையான பரப்புரையும் அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் அவர்களது நடவடிக்கை மேலும் மேலும் இந்த வரையறைகளுக்கு அப்பால் போகிறது. ஒரு விழிப்புடன் கண்காணிப்பதும், தேவையெனில் மாகாண அரசுகள் தாங்கள் கருதும் நடவடிக்கையை எடுப்பதும் நல்லது. ( டிசம்பர் 7 1947 கடிதம்)

மேற்கண்ட கடிதம் காந்தியடிகள் படுகொலைக்கு சில நாட்கள் முன்னர் எழுதப்பட்ட ஒன்று என்பதை சேர்த்துப் பார்த்தால் நேருவின் எச்சரிக்கை உணர்வு, அதே நேரத்தில் அவரின் ஜனநாயக பண்புகள் புலப்படும்.

நேருவின் அக் 17, 1952 கடிதம் மதமாற்றம் குறித்து பேசுகிறது.

We permit, by our Constitution, not only freedom of conscience and belief but even proselytism. Personally I do not like proselytism …is, in this matter, one of live and let live. ,…. I would welcome any form of real social service by any one, missionary or not. A question arises, however, how far we should encourage foreigners to come here for purely …I do not want anyone to come here who looks upon me as a savage heathen..

நமது அரசைப்புச் சட்டப்படி, கருத்து மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மட்டுமின்றி மதமாற்றத்தையும் அனுமதிக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் மத மாற்றத்தை விரும்புவதில்லை…… என்னைக் காட்டுமிராண்டியான புற மதத்தினன் என பார்க்கும் எவரும் இங்கு வருவதற்கு நான் விரும்பவில்லை…சமூகத் தொண்டுக்கென இங்கு வரவிரும்பினால் எந்த வெளிநாட்டினரையும் நான் வரவேற்பேன்.

இந்த நீண்ட பாராவை மிக கச்சிதமாக தோழர் பாண்டி தமிழில் புரிய வைத்துள்ளார்.

மொழி குறித்த நேருவின் வாக்குறுதி தமிழர்களுக்கு முக்கியமான ஒன்று.  அவர் சரியான அணுகுமுறை என தனது செப் 20, 1953 கடிதத்தில் ஓரிடத்தில் தனது கருத்தை தருகிறார்.

The right approach should always be a positive approach of encouraging a language such as Hindi, never of discouraging any other or discriminating against any other. The whole question of linguistic provinces would lose part at least of the passion that accompanies it, if we are absolutely fair to every language and give it freedom of growth.

சரியான அணுகுமுறை என்பது எப்போதும் இந்தி போன்ற மொழிகளை ஊக்கப்படுத்துவதும், எந்த மொழியையும் எப்போதும் ஊக்கம் குன்றச் செய்யாதிருப்பதும், வேறெந்த மொழிக்கும் எதிராக பாகுபாடு காட்டாமல் இருப்பது என்னும் நேர்மறையான அணுகுமுறையாகும். நாம் ஒவ்வொரு மொழிக்கும் முழுமையாக நியாயமாக நடந்தும், அதன் வளர்ச்சிக்கான சுதந்திரத்தையும் கொடுத்தால், முழுமையான மொழிவாரி மாகாணங்களென்னும் பிரச்னை அதனோடு இணைந்திருக்கும் வேட்கையைக் குறைந்தபட்சம் ஓரளவுக்குத் தணிக்கும்.

தோழர் வீரபாண்டியன் மேற்கண்ட வரிகளின் பொருள் கொஞ்சம்கூட மாறாமல் மொழிபெயர்த்துள்ளதைப் பார்க்கிறோம்.

ஜனநாயகத்தின் நிறுவனங்கள் என்ற பகுதியில் தொகுக்கப்பட்டுள்ள கடிதங்கள் கம்யூனிஸ்ட்களின் தத்துவம் மற்றும் நடைமுறைகளையும் பேசுகிறது. கட்சித்தடையா- தத்துவத்தடையா என்பதிலிருந்து நேரு வன்முறையில் ஈடுபடும் தனிநபர்மீது சட்ட ஒழுங்கை காக்கும் நடவடிக்கை என்ற உரையாடலை இதில் பெருக்குகிறார். அதேபோல் அவர்கள் மார்க்சியம்- சோசலிசம் என்கிற தத்துவக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்காக தடை வேண்டாம்- அத்து மீறல் செய்தால் நடவடிக்கை என சொல்லித்தருகிறார்.

இப்பகுதியில் இந்துகோடு பில், முதல் சட்டதிருத்தம் குறித்தும் முதல்வர்களுக்கான கடிதங்களில் புரியவைக்கிறார். ஜமீந்தாரிமுறை ஒழிப்பும்- அதுவே பிரச்னையை முழுமையாக தீர்த்துவிடாது- தொடர் முயற்சி நிலச்சீர்திருத்தத்தில் தேவை என்பதை உணர்த்துகிறார். சாகுபடியாளர் உரிமையாளர் என்ற அளவிற்கு உணர்த்துகிறார்.

தேசியதிட்டமிடல் பகுதியில் உணவு பற்றாக்குறை- உற்பத்தி- தன்னிறைவு விவாதிக்கப்படுகிறது. இன்று ருஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் போரும் அமைதியும் என்கிற பகுதி முக்கியமான ஒன்றாகும். அதிலிருந்து ஒரு பாரா..

As the atomic age advances, war ceases to be a means of furthering a foreign policy, because war becomes an instrument of universal destruction. If there can be any justification for war today, it can only be in pure self- defence or self preservation…

 இதை தோழர் வீரபாண்டியன் மொழிபெயர்ப்பில் பார்ப்போம்

அணுயுகம் வந்துகொண்டிருப்பதால், ஒரு வெளியுறவுக் கொள்கையை மேலும் கொண்டு செல்லுமொரு சாதனமாக போர் இருப்பது நின்று போய்விட்டது. ஏனெனில் போர் என்பது உலக அழிவிற்கான ஓர் ஆயுதமாக ஆகி இருக்கிறது. இன்று போருக்கன ஏதாவது நியாயம் இருக்குமெனில் அது முழுதும் தற்காப்புக்காக அல்லது ஆக்கிரமிப்பிற்கு எதிரான சுய பாதுகாப்பிற்காக மட்டுமே இருக்கமுடியும்… ( 1952 ஆக 26)

புகழுரைகள் என்ற பகுதியுடன் இந்த தொகுப்பு நிறைவடைகிறது. இன்று நேருவிற்கு எதிர் படேல் எனும் அரசியல் யுக்தியாக கையாளப்படுவதைக் காண்கிறோம்.  படேல் மறைந்த மூன்றாவது நாளில் அவர் குறித்த கடிதம் ஒன்றை டிசம்பர் 18, 1950ல் எழுதுகிறார். பலத்த அடி, வெறுமை உணர்வு என்பதை வெளிப்படுத்துகிறார்.

Sardar Patel was a strange mixture of single-mindedness in the pursuit of his objectives and many-sided activities. On all these activities, he has left his powerful impress, and both the Central Government and every State Government have felt, during these three or four years, the mark of a strong and guiding hand. So, in your work, you will miss him as we will miss him from day to day in our work at the Centre. You will have to do without him, for there is no one to take his place. இனி வீரபாண்டியன் தமிழ்..

சர்தார் படேல், தன் குறிக்கோள்களையும், பலவகையான நடவடிக்கைகளையும் அடைவதில், உறுதியான சிந்தனையுடைய ஒரு விசித்திரமான கலவை … மத்திய அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு மாநில அரசாங்கம் ஆகிய இரண்டும் இந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளின்போதும், ஒரு வலிமைமிக்க, வழிகாட்டும் கரத்தின் முத்திரையை உணர்ந்தார்கள். அதனால், மத்தியில் எங்களுடைய அன்றாடப்பணியில் அவரை இழப்பது போல, உங்கள் பணியிலும் அவரை இழப்பீர்கள். அவர் இல்லாமல் நீங்கள் அப்பணியை செய்யவேண்டும். ஏனெனில் அவரது இடத்தை நிரப்ப அங்கு வேறு யாருமில்லை.

இன்றைய அரசியல் சூழலில் செல்வாக்கு செலுத்தும் சில கருத்தாங்களை- வகுப்புவாதம், மதமாற்றம், மொழிப்பார்வை, போரின் தாக்கம், படேல் உறவு போன்றவற்றை மட்டுமே தொட்டிக்காட்டியுள்ளேன். புத்தகத்தை தமிழர் படிக்கும்போது அவர்களுக்கான நல்லதோர் அரசியல் துணைவனாக இந்த நூல் நிற்கும். தோழர் வீரபாண்டியின் நல்லுழைப்பிற்கு எனது பாராட்டும் வணக்கமும்.

7-3-2022

No comments:

Post a Comment