எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள தமிழ் மக்கள் வரலாறு seriesல் வந்துள்ள மற்றொரு புத்தகம் ‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் ( கி பி 600- 1565)’. 2004 ல் UGS நிதி உதவியுடன் செய்யப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகள் 4 இதில் இடம் பெற்றுள்ளன. Annual Epigraphy Reports மற்றும் தொல்லியல், கல்வெட்டு தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, பெறப்பட்டவை அடுக்கப்பட்டுள்ளன. அடுக்கப்படும் தகவல் வழி அக்கால தமிழ் சமுதாய மனிதர்கள் செய்த தொழில், குறிப்பிட்ட ஒருவர் வெவ்வேறு தொழில்களை செய்தல், தொழில் பிரிவினைகளை சாதியாக இறுக்கமாக்குதல்- பிறப்பு வழி மேல் கீழாக்குதல் போன்றவற்றை உணரவைக்க ஆசிரியர் ஸ்டீபன் முயற்சி செய்துள்ளார். ஆசிரியர் கண்டெடுக்கும் சில புள்ளிகள்.. பரிபாடல் ‘குலம் ‘ என 44 வகை தொழிற்பிரிவினரைக் காட்டுகிறது. அகநானூறு 4 வகை தொழில்களைப் பேசுகிறது கிமு 1500 வரை வர்ணம், தர்மம் கர்மா பற்றி சான்றுகள் காணப்படவில்லை. சங்க கால கிபி 100-300 மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்துள்ளனர். மரபுவழி தமிழ் குடியிருப்புகளில் 12 தொழில் வகையினர் சொல்லப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முன் தமிழகத்தில் மதம்