Skip to main content

ஹார்ட்கிரேவின் திராவிட இயக்கம்

 

ஹார்ட்கிரேவின் திராவிட இயக்கம் என்பதிலிருந்து...
மொழிவாரி மாநிலங்கள் பிரச்னை தீவிரமானபோது தென்பகுதிக்கு தட்சிண பிரதேசம் என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்பை கண்டவுடன் அச்சிந்தனை கைவிடப்பட்டு மொழிவாரி மாநிலங்கள் என்பது 1956ல் உறுதியாயின. இது குறித்து The Dravidian Movement எழுதிய Robert L Hardgrave Jr இவ்வாறு அதை திக- பெரியார் எதிர்கொண்டதை குறிப்பிடுகிறார்.
" Forgetting his earlier advocacy of a United South India, Naicker( periyar) fearing the submersion of Tamils in the Dravidian whole, warned that Dakshina Pradesh formation a life and death matter. It will also a suicide for you and all. It may provoke unprecedented agitation by Tamilians. Pray save us and tamil Nad"
மேற்கண்ட ஒன்றுபட்ட தென்னிந்தியா- தட்சிண பிரதேசம் வேண்டாம் அது தமிழர்களை மூழ்கடித்துவிடும் என பெரியார் அவர்கள் விட்ட எச்சரிக்கைக்கு ஆதாரமாக ஹார்ட்கிரேவ் ஹிந்து பிப் 2, 1956யைக் காட்டுகிறார்.
“ In regard to dravidasthan, the DK issued a statement saying that in view of the fact that peoples of Kerala and Mysore were indifferent to Dravidasthan, those in tamilnad would have to be content with tamilnad as Dravida Nad. Naicker indicated that the door would be left open for all Dravidians to Join in a united Dravidasthan at some future day if it was so desired "
மேற்கண்ட செய்திக்கு ஹார்ட்கிரேவ் ஹிந்து ஜூன் 22, 1956 யைக் காட்டுகிறார். அய்க்கிய திராவிடஸ்தானுக்கு கதவுகள் திறந்தே உள்ளன என பெரியார் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். ’அகண்ட திராவிடஸ்தான்’ இன்னும் கனவா எனத் தெரியவில்லை.
தோழர் பி ஆர் (ராமமூர்த்தி) அவர்கள் இவ்வாறு தனது எதிர்வினையை வெளிப்படுத்தியிருந்தார்.
The cry for Dravidasthan was an attempt to cover the exploitation of the people by South Indian capitalists"
ஒன்றுபட்ட சிபிஅய் மாநில செயலர் தோழர் எம் ஆர் வெங்கட்ராமன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்
The movement of Dravidasthan ignores the reality as well as the people's aspirations of linguistic states in a resurgent, united India, and is disruptive and anti democratic. Such slogan has to be rejected by our people in the very interests of Tamil nad and India"
வடக்கு மார்வாடி முதலாளிகள் ஆட்சியாளர்களுக்கு துணையாக என்று பேசியபோது திராவிட திக திமுகவிற்கு கோவை மில் முதலாளிகள் துணையாக என்ற பதில் குற்றச் சாட்டு வந்தது. அதற்கு அண்ணா அவர்கள் தெரிவித்த மறுப்புரையை ஹார்ட்கிரேவ் பதிவிட்டுள்ளார்
“It is easy to secure the support of the capitalists and Industrialists to our cause by giving them a blank cheque. They will be only too willing to support us because of their natural desire to step into shoes of their Nort Indian counterparts. But we are not here to oblige Dravidain capitalism of any sort, be it North Indian or Dravidian"
இங்குள்ள முதலாளிகளின் ஆதரவை பெறுவது எளிது- ஆனால் எங்கள் நோக்கம் திராவிட முதலாளித்துவம் அல்ல என அண்ணா அவர்கள் பதில் இருப்பதைப் பார்க்கிறோம். இப்போது இந்திய யூனியன் அரசாங்கம் ’5 டிரில்லியன் எகானமி’ எனப் பேசினால் தமிழ்நாடு மாநில அரசாங்கம் ’ஒரு டிரில்லியன் எகானமி’ எனப் பேசுவதை எப்படி புரிந்து கொள்வது என்கிற கேள்வி எழுகிறது.

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு