பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு என் அன்பை மரியாதையை தரும் வகையில் Scott R Stroud அவர்கள் எழுதிய
An Intellectual Biography of B R Ambedkar- The Evolution of Pragmatism in India என்கிற நூலை படிக்க ஆரம்பித்தேன்.
இந்நூல் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸ் நிறுவனத்தால் 2023 ல் கொணரப்பட்ட நூல். ஸ்காட் ஸ்டிரவுட் அவர்கள் டெக்ஸாஸ் பேராசிரியர், தத்துவ அறிஞர். அமெரிக்க நடைமுறைவாதத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருபவர். அம்பேத்கர் கொலம்பியாவில் படித்தபோது அவர் மிகவும் மதித்து நேசித்த ஜான் டுயி அவர்களின் pragmatism அம்பேத்கர் அவர்களிடம் எந்த அளவில் தாக்கத்தை உருவாக்கியது என்பது குறித்த ஆய்வை ஸ்காட் தந்துள்ளார்.
ராமச்சந்திர குஹா, மார்த்தா நுஸ்பாம், அனுபமா ராவ் , சுகாதியோ போன்றவர்கள் இந்நூலினை பாராட்டியுள்ளனர்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு குடியரசாதல், அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பு, சட்ட அமைச்சராக செயலாற்றுதல் போன்ற புகழ் பெற்ற பின்னணியில் - 1952ல் தான் பயின்ற பல்கலைக்கு , பல நண்பர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அம்பேத்கர் செல்கிறார். எப்படியும் தான் நேசித்த பேரா ஜான் டூயியை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. புழுதிபுயலால் அம்பேத்கர் செல்லவிருந்த விமானப் பயணம் தாமதமாகி, அவரால் டூயியை பார்க்க முடியாமல் போனது. அம்பேத்கர் சென்றடைந்த ஜூன் 3 க்கு முன்னர் ஜூன் 1 அன்றே ஜான் டூயி காலமாகிவிட்டார். இந்த பெருத்த ஏமாற்றத்தை வருத்தத்தை அம்பேத்கர் தன் துணைவியார் சவீதாவிற்கு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்.
“ I am sorry. I owe all my intellectual life to him. He was an wonderful man என்று தன் முழு அறிவாளுமைக்கும் டூயிக்கு கடன் பட்டதை அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருப்பார்.
ஜான் டூயின் செல்வாக்கு அம்பேத்கரிடம் இந்த நடைமுறைவாதம் என்கிற அம்சத்தில் தொழிற்பட்டது குறித்து எலியனார் ஜெல்லியட், டெல்தும்ப்டே, காதம் , மீரா நந்தா போன்ற ஆய்வாளர்கள் பேசியுள்ளனர். அதை முழு ஆய்வாக கொணரும் நோக்கில், ஜான் டூயி குறித்த ஆய்வுகளில் ஈடுபட்ட ஸ்காட் , இந்நூலை ஜான் டூயி அம்பேத்கர் intellectual connection என்கிற வகையில் ஆய்வு செய்திட முற்பட்டுள்ளார்.
இந்நூலின் ஆய்விற்கு இந்த கேள்விகளை ஸ்காட் மனம் கொண்டுள்ளார்.
What did Ambedkar hear and read from Dewey?
How is this reflected, changed or resisted across his body of work?
How did it influence his methods of argument? And
How might it have informed his novel idea of social democracy and the sort of oppression- and other democracies ought to resist?
முன்னதாக அம்பேத்கர் குறித்து எழுதிய தனஞ்செய் கீர், கெய்ல் ஓம்வெத், எலியனார் , கிறிஸ்தோபர் ஜாபரிலே, அனுபமா ராவ் போன்ற பல ஆய்வாளர்களையும் குறிப்பிட்டு ஸ்காட் தன் ஆய்வை நகர்த்தியுள்ளார். அவரின் இந்தப் பிரதி எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதை படிக்க படிக்க பார்க்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் பார்ப்போம்
ஸ்காட் ஸ்ட் ரவுட் அவர்களின் அம்பேத்கர் புத்தகமான The Evolution of Pragmatism in India- the intellectual bio of Ambedkar குறித்து முன்னர் ஒரு பதிவை தந்திருந்தேன். சற்று கடினமான புத்தகம்தான். டூயி, ரஸ்ஸல் தத்துவப் போக்குகளின் ஊடாக அம்பேத்கர் பிரதிகளை பின்னி வைக்கக்கூடிய வகையில் ஸ்காட் இந்த பனுவலை உருவாக்கியுள்ளார்.
கொலம்பியா பல்கலை அமெரிக்க கற்றலில் பேரா ஜான் டூயி செல்வாக்கிற்கு அம்பேத்கர் எப்படி கட்டுண்டார். ரஸ்ஸல் அவர்களின் மறுகட்டுமான கோட்பாடுகள் என்கிற புத்தகத்தின் தாக்கம் எவ்வாறு அம்பேத்கரிடம் தொழிற்பட்டது என்பதை முதல் நூறு பக்கங்களில் ஸ்காட் தெளிவு படுத்துகிறார்.
மூன்றாவது chapter Reconstructive Rhetoric, Appropriation and the strategic Use of Reference என்கிற தலைப்பில் ஸ்காட் விவாதிக்கிறார். எந்த அமைப்பையும் சாராமல், தன் அறிவு பின்புலத்தில் நின்று, தானும் தன்னைப்போன்ற தன் மக்களும் சமூக விலக்கல் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாவதை மாற்றி புதியவகை ஜனநாயக கட்டுமானத்தை செய்வதற்கான வழிவகைகள் குறித்து தீவிர தேடுதலில் இறங்குகிறார் அம்பேத்கர்.
அவருக்கு நல்வாய்ப்பாக, மாண்டேகு- செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் பொருட்டு அமைக்கப்பட்ட சவுத்பாரோ கமிஷன் அமைகிறது. தனி மனிதராக அதன் முன் அவர் அளித்த சாட்சியத்தின் பிரதியை இந்தப் பகுதியில் எடுத்துக்கொண்டு ஸ்காட் ஆராய்கிறார். மதுலிமாயி கூட சிறிய அளவில், ஆனால் சற்று விமர்சன கண்ணோட்டத்தில் அம்பேத்கர் சாட்சியம் பற்றி எழுதியிருக்கிறார்.
டூயி அவர்களின் Democracy and Education என்பதை அம்பேத்கர் நன்கு உள்வாங்கி அதன் கருத்தாக்கங்களை, இந்திய சூழல், மாற்றப்படவேண்டிய தன்மைகளுடன் அவர் எடுத்தாள்கிறார். இதை appropriation and strategic use of reference என்கிற வகையில் ஸ்காட் தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார். மாதிரிக்கான டூயி text , அம்பேத்கர் சாட்சிய வரிகளை நாம் ஸ்காட்டிலிருந்து எடுத்துக்காட்டலாம்.
முதலில் அம்பேத்கர் சாட்சியமாக 1919ல் முன்வைத்த வாதத்திலிருந்து ஒரு பாரா
Men live in a community by virtue of the things they have in common. What they must have in common in order to form a community are aims, beliefs, aspirations, knowledge, a common understanding or to use the language of Sociologists , they must be like minded. But how do they come to have these things in common or how do they become like minded? Certainly not by sharing with another, as one would do in the case of piece of cake. To cultivate an attitude similar to others or to be like minded with others to be in communication with them or to participate in their activity. Persons do not become like minded by merely living in physical proximity, any more than they cease to be like minded being distant from each other.
அடுத்து ஸ்காட் காட்டுகிற டூயி அவர்களின் வரிகளை பார்க்கலாம். 1916ல் எழுதப்பட்டவை.
Men live in a community in virtue of the things which they have in common , and communication is the way in which they become to possess things in common. What they must have in common in order to form community or society are aims, beliefs, aspirations, knowledge- a common understanding- like minded ness as the sociologists say…
Such things cannot be passed physically from one to another, like bricks, they cannot be shared as persons would share a pie by dividing it into physical pieces. The communication which ensures participation in a common understanding is one which secures similar emotional and intellectual dispositions, like ways of responding to expectations and requirements.
அம்பேத்கர் இதில் கருத்தாக்கமாகவும் , நேரடியாக சிலவரிகளையும் எடுத்தாண்டிருப்பார். Emotional and intellectual dispositions என்பதை attitude என தன் பிரதியில் கொண்டுவந்திருப்பார் என ஸ்காட் சுட்டிக்காட்டுகிறார்.
டெல்தும்ப்டே அவர்களுக்கு வந்த அதே கேள்வி அம்பேத்கரும் கம்யூனிசமும் என்ற நூலை உருவாக்கும்போது எனக்கும் ஏற்பட்டது. இந்தியாவில் அப்போது இருந்த பல மார்க்சியர்களைவிட பல நூல்களை தான் படித்துள்ளதாக அம்பேத்கர் தெரிவித்திருந்தார். அவர் எந்த நூல்களை படித்து உள்வாங்கினார்..மார்க்சை அணுகினார் என என்னால் அறிந்துகொள்ளமுடியவில்லை. சோவியத் பிரதிகள் அல்லாமல் வேறு எந்த பிரதிகள் என்பதை எந்த் ஆய்வாளராவது சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.
இன்றும் புகழ் வாய்ந்த சாமிநாத சர்மாவின் கார்ல் மார்க்ஸ் நூல் அளவிற்கான தமிழ் நூல் ஏதும் வரவில்லை என்கிற எண்ணம் எனக்கும் உண்டு. ஐசையா பெர்லின், ஹரால்ட் லாஸ்கி என்கிற ஆளுமைகளின் இரு புத்தகத்தின் சாரத்தைத்தான் சாமிநாத சர்மா பிழிந்து தந்துள்ளார் என்பதை பெர்லின், லாஸ்கி படித்த பின்னர் உணரமுடிந்தது. 1939ல் வெளியான பெர்லின் புத்தக தாக்கம் சாமிநாத சர்மாவை 1942 லேயே அருமையான அறிமுக புத்தகத்தைக் கொணர வைத்தது. நேரடி மார்க்சியர்கள் அனைவரும் சோவியத் இலக்கியங்களை நம்பி மட்டுமே இருந்தபோது, சர்மா இங்கிலாந்தின் பிரதியை முழுமையாக உள்வாங்கி அற்புத நூலை தந்து சென்றார்.
எந்த நூலை அல்லது நூற்களை நாம் ref ஆக எடுத்து உள்வாங்கி நமதான கருத்தாக மேம்படுத்தி அல்லது அப்படியே வெளிப்படுத்துகிறோம் என்பதை தன்னை தேர்ந்தெடுத்து வாசிக்க வருபவர்க்கு சொல்லவேண்டிய நெறி அவசியமான ஒன்றாக எனக்குப் படுகிறது .
ஸ்காட் போன்ற ஆய்வாளர்கள் பெருகும் போது, எவருக்கு எவரிடமிருந்த தாக்கத்தில் அவருக்கான appropriations- rhetoric அமைகின்றன என தேர்ந்த வாசகனுக்கு புலப்படும். இந்த வகையில் அம்பேத்கர் அறிவார்ந்த பயணத்திற்கான துணைகள் குறித்து இந்நூல் ஓரளவு பேசியுள்ளதை வரவேற்று வாசிக்கலாம்.
Comments
Post a Comment