https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Thursday, April 25, 2024

Incidents in Gandhi's Life


Gandhi and O P Gupta
Bharatan Kumarappa wrote one essay on April 8, 1947 with the caption ‘ The Great Experimenter’. This essay was included in the book of 54 essays viz Incidents of Gandhiji’s Life, edited by Chandrashanker Shukla, first published in 1949.
Bharatan Kumarappa wrote so in that
An experimental mind is always open and ready to make a change when necessary. Whether Gandhiji agreed with you or not , he always listened intently and reflectively when you criticised him or made a suggestion to him to change his procedure. This did not mean of course that he did whatever people told him. When he was convinced of the rightness of his course, he was a firm as a rock. But otherwise he gave in.
He is essentially a man of action, who is not misled by theorising. He wants to be shown results before he will accept any nice sounding idea. Gandhiji’s experimental mind says
“ this method of mine whether theoretically correct or not works, and I will stick to it till I can find which works better”
“ I go my way. If you think yours so wonderful, you go yours. Why bother me?”
This essay of Bharatan Kumarappa speaks his then and there experiences with Gandhi on even some little things. Gandhi exhibited the same attitude even to many of his close associates including Nehru.
In my TU experiences , I found a similar attitude from our Telecom leader com O P Gupta. Whenever we fellows, the cadres approached him with nice sounding theories ( party ideology or line or some theoretical positions) , he gave us back ‘a fine doable practice’ in the trade union movement. That way com O P Gupta regulated us to have a balance of practice and made us to adjust our theories.
Com o P Gupta trained us not to get any charm in highfalutin speeches or sky high demands . Struggle for him is not to show any militancy of his cadres or to showcase his valour, but for any reasonable settlement. He taught us to understand the limitation and constraints of the movement that he was leading and never failed to protect the cadres from the strong arms of the government. He was never impolite to anyone whether in dealing Govt officials, his cadres or members or co leaders. He learnt that rudeness did make no sense .
Like Gandhi, com Gupta always applied his experimental mind to understand matters of that day , on that day’s context. Telecom was his experimental theatre, many big minds connected to Telecom like Sam Pitroda, Saxena, and many well experienced secretaries and high level officers listened Gupta with rapt attention, though they differed on him many times, but felt his soul full approach.
On knowing more and more of Gandhi, I am finding O P Gupta more and more and also ignorance of mine and my occasional fighting with him . Com O P Gupta was our great experimenter.
13-4-2024


நிகழ்வும் செய்தியும்
1945ஆம் ஆண்டில் இந்நிகழ்வு பம்பாயில் நடந்தது. வழக்கம்போல் தன்னைச்சுற்றி ஏராள தோழர்கள் சூழ காந்தி இருக்கிறார். அறிக்கை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அறிக்கை மிக நீளமானதாகத்தான் இருந்தது.
அதைப் பார்த்த இளைஞர் ஒருவர் காந்திஜி, இவ்வளவு நீளமாக ஏன் எழுதவேண்டும், வடிகட்டி நாலு வரியில் சுருக்கி விடலாம் என்றார்.
காந்தி அப்படியா , நீங்களே இதை சுருக்கி எழுதிக் கொடுங்கள், வெளியிட்டு விடலாம் என அவரிடம் நீட்டினார். அந்த இளைஞர் திடுக்கிட்டார். எதையும் விமர்சித்தால், ஒருவர் மாற்று ஒன்றை செய்து காட்டக்கூடியவராக இருக்கவேண்டும் என்கிற சிந்தனை அதுவரை அந்த இளைஞரிடம் இருந்திருக்கவில்லை. இந்த நிகழ்வை பதிவு செய்துள்ள குர்டியல் மல்லிக் அவரின் பெயரை சொல்லவில்லை. அப்போது காந்தி நம் எல்லோருக்குமான செய்தி ஒன்றை தருகிறார்
“ While criticising something what another has done, the critic should be ready simultaneously with something constructive that could take its place”
அடுத்து ஒரு உரையாடல். அது சுவிட்ஜர்லாந்தில் 1931ல் நடந்த ஒன்று. பியரி செரிசோல் என்பார் காந்தியிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி காந்தி அவர்களே கடவுள் என்று எதை அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதாக இருந்தது. காந்தி அதற்கு கடவுள் என தான் சொல்வதையும் , அதை அடைவதற்கான மார்க்கத்தையும் ஒரே வரியில் தெரிவித்தார். அந்த வரி
Truth is God and the way to Him is Non Violence.
Muriel Lester ஒரு செய்தியைச் சொல்கிறார். ஆங்கிலேயே நீதிபதியுடன் முரியல் விவாதித்துக்கொண்டிருக்கையில்,அந்த நீதிபதி காந்தி இந்தியர்களுக்கு செய்தது என்ன என்பதை தன் அனுபத்திலிருந்து சொல்கிறார். 1920 களில் ஆங்கிலேயர் ஒருவரால் எந்த இந்தியரையும் விரட்ட முடியும்.அவரும் வாய் மூடி ஒதுங்கி போய்விடுவார். 10 ஆண்டுகளின் காந்தியின் செயல்பாட்டால் மாற்றம் ஒன்றை காணமுடிகிறது- இந்தியர் எவரும் ஒன்றை அச்சமற்று கேட்கத் தயாராகியுள்ளனர். அக்கேள்வி why should I . இப்படி அவர்களை நிமிர வைத்துள்ளார் காந்தி.
ஒருமுறை மகன்வாடியில், 17 வயதில் இளைஞன் ஒருவர் ( குமரப்பா பெயரை எழுதவில்லை) நரம்புத் தளர்ச்சி கோளாறுடன் வாயிலில் வந்து காந்தியை பார்க்க வேண்டும் என்கிறார். அவரின் கால்கள் தடுமாற்றத்துடனும், கைகள் கும்பிடவோ, கைகுலுக்கவோ கூட ஒத்துழைக்காதவையாகவும் இருந்தன. காந்தி வந்து என்ன என வினவுகிறார். தங்க இடம் தரவேண்டும் என்கிறார் அந்த இளைஞர். முடியாத அனைவருக்கும் இங்கு இட வசதியில்லை. வாய்ப்பில்லை, வேறு இடத்தை தேடிக்கொள்ள காந்தி அறிவுறுத்துகிறார். காலையிலிருந்து மாலைவரை அந்த இளைஞன் உள்ளே நுழையாமல் வாயிற்படியிலேயே உட்கார்ந்து கிடக்கிறார். அவரை அனுப்பி விடலாமா என ஆசிரமவாசி ஒருவர் கேட்க, இல்லை இல்லை அவரை உள்ளே அழைத்து வாருங்கள் பார்க்கலாம் என்கிறார் காந்தி.
அங்கு ஒருவேளையும் அந்த இளைஞனால் செய்ய முடியாது. அவன் காய்கறி கழுவுகிறேன் என ஆரம்பித்து, மெதுவாக கத்தியை பிடிக்கும் அளவிற்கு உடலை ஒத்துழைக்கச் செய்து, சிறிது சிறிதாக உடல் உழைப்பில் ஈடுபட்டு மன நிம்மதி பெற்று பின்னர் அமெரிக்காவிற்கு உயர் படிப்பிற்காக செல்லும் நிலைக்கு மாறினாராம். அவர் பெயர் தெரிந்தவர் சொல்லுங்களேன்.. குமரப்பா செய்தியாக இங்கு தருவது
“ with all pervading love Gandhiji elicits the capacity in an individual to the best advantage, by dealing with an individual gently”
சத்தியாகிரகியாக முயற்சிக்கும் எவரும் தன்னிடம் ஒத்துழைப்பு கேட்பவர்களிடம் நடந்துகொள்ளவேண்டிய முறை பற்றி குமரப்பாவிடம் காந்தி எடுத்துச் சொல்கிறார். 1938 ல் காங்கிரஸ் தலைவராகயிருந்த சுபாஷ், நேரு தலைமையில் தேசிய திட்டக்குழு ஒன்றை அமைத்தார். நேருவும் குமரப்பா வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதில் உள்ள பல்வேறு உறுப்பினர்களின் சிந்தனை மன ஓட்டங்களை அறிந்த குமரப்பா, அக்கூட்டங்களுக்கு செல்வதால் பயன் இல்லை, கால விரயம் என நினைத்தார்.
நேரு விடவில்லை. காந்தியிடம் குமரப்பாவை வரச்செய்யவேண்டும் என்கிறார். காந்தியும் போங்க குமரப்பா எனச் சொல்கிறார். குமரப்பா காலவிரயம் என தான் உணர்வதை காந்தியிடம் விளக்குகிறார். அப்போது காந்தி பேசிய சில வரிகள்..
why do you prejudge your colleagues ..why do you think you will not be able to persuade the whole committee? This shows a lack of faith in yourself and in your colleagues that they will be open minded to listen to you
குமரப்பா தன் பதிலாக we should not attempt the impossible, knowing the personnel..it is dashing one’s head against a wall.
காந்தி விடவில்லை. தனது விளக்கத்தை அவர் தொடர்கிறார்
This is not the approach of a satyagrahi. You must give your opponent the fullest chance, and when time comes that your position will not serve any purpose, you can always resign..
The time that you spend in trying to satisfy yourself and your fellow members will not be wasted. It will develop you and widen your range of view..I suggest go and attend until such time when your work would prove to be futile
குமரப்பாவும் போனார்..ஆனால் நீடிக்கமுடியவில்லை. காந்தியிடம் சொல்லிவிட்டு விலகினார் . இதில் காந்தி தந்த செய்தி let us not prejudge anybody..
இப்படி நிகழ்வுகளும் வாழ்விற்கான செய்திகளுமாக காந்தி இருந்துகொண்டேயிருக்கிறார் .. தேடி கண்டடைய மனங்கள் வேண்டும்…
All reactions:
Chithra Balasubramanian, Ragubathy G and 10 others



 Life a fun with all seriousness

பியாரிலால் தனது மேல்கலை படிப்பில் இருந்தபோது காந்தியிடம் வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார். படிப்பை முடித்துவிட்டு வந்து சேர் என அறிவுரை கிடைத்தது.
காந்தியிடம் இளைஞனாக வந்து சேர்ந்ததிலிருந்து சிறு சிறு கற்றல்கள் ஆரம்பித்தன. காந்தியிடம் நெருங்கும் போதெல்லாம், வாழ்விற்கான தெறிப்புகளை பியாரி எடுத்துக்கொள்ளலானார். அப்படி சில கவனப்படுத்த வேண்டிய அம்சங்களை Gandhi As I knew him என்கிற சிறு கட்டுரை ஒன்றில் அவர் சொல்லியிருப்பார்.
பியாரி எழுதியதிலிருந்து மிகச் சுருக்கி நான் புரிந்த அளவில் தந்துள்ளேன்
-Sanctity of the resolves
-Return any madness with sanity
-The first mark of wisdom is not to undertake a task , wisdom requires that one must see it through
-Call for facts , do not speculate in the void. It is waste of mental energy, a sign of laziness..thought is more precious than language, and judgment most precious of all. If the judgment is faulty, everything else is nothing worth
-Simplicity is not so simple a thing as most people imagine
சுசிலா நாயர் Light and Shade என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 7 பக்க அளவிலான சிறிய கட்டுரைதான். சில நேரம் காந்தியின் ஹாஷ்ய உணர்வின் intensity அதிர வைக்கும். பொல்லா கிழவன் என்ற உணர்வைக் கூட உருவாக்கும். அப்படி ஒரு காட்சியை எனக்கு உருவாக்கிய நிகழ்வு ஒன்றை சுசிலா இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவர்( அவர் பெயரை சுசிலா குறிப்பிடவில்லை) காந்தியின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க வருகிறார். அந்த மருத்துவரின் கேள்விகளுக்கு ‘குண்டக்க மண்டக்க ‘ இந்த பொல்லா கிழவன் பதில் அளித்ததை படிக்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது. இப்படி டக் டக் என்று சுவையான ஹாஷ்ய உணர்வுடன் பதிலளிப்பதால் தனது BP குறைவதாகவும் காந்தி வெளிப்படுத்தியிருப்பார்.
மருத்துவர் தனது சோதனையை பல கேள்விகள் வழியே உறுதிப்படுத்த எண்ணினார். Symptomatology சோதனை. மருத்துவரின் சில கேள்விகளும் , காந்தி அளித்த பதில்களையும் சுசிலா எழுதியபடி தருகிறேன். சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்
When and what did your father die?
He had a fall, fistula and died at the age of 65
What did your mother die of ?
She became a widow and died of broken heart
On seeing a jaggery bottle , the Dr asked I think you like sweets?
I have a sweet tooth
மருத்துவர் சற்று இந்த கிழவரிடம் பொறுமையிழக்கிறார். கேள்விகள் தொடர்கிறது.
What about your memory ?
As rotten as you can imagine ( பொல்லாத்தனத்தை பாருங்க)
Do you remember you went to visit Mission hospital Hardwar?
Yes I remember visiting the hospital
DR pleased ..Then your memory is quite good..?
No said Gandhi. I have a poor memory, and I do not remember you at all
பக்கத்தில் இருந்த டாக்டர் பி சி ராய் ஜோக் அடிக்க மருத்துவர் அது modesty என்கிறார். காந்தி அதற்கும் Modesty has never been my weakness என்று சொல்லி சிரிக்கிறார். பதில்களில் குழம்பிப் போன ஹோமியோ மருத்துவர், காந்தி உங்களுக்கு உடல் கோளாறு ஏதுமில்லை. மருந்து ஏதும் வேண்டாமென கிளம்பினாராம்.
காந்திக்கு அலோபதி, ஹோமியோ மீது சந்தேகம் இருந்தது, மோதிலால், தாஸ் போன்ற மூத்தவர்கள் சொன்னதால் அந்த ஹோமியோ டாக்டரை பார்க்க சம்மதித்தார். அவரை விரட்டாத குறைதான் .. வாழ்வை எவ்வளவு இயல்பாக fun ஆக அந்த மனிதர் பார்த்துள்ளார்.. பிரமிக்க வைக்கிறார்…


ப சுப்பராயன் அவர்கள் ஜமீன் குடும்பத்தில் வந்தவர். வெளிநாட்டு கல்வி கிடைக்கப்பெற்றவர். மதராஸ் சட்டமன்ற உறுப்பினராக, மாகாண முதல் அமைச்சராக இருந்தவர். புகழ் வாய்ந்த மோகன், பார்வதி ஆகியோர்களின் தந்தை.

காந்தி குறித்த சிறிய பதிவு ஒன்றை மார்ச் 1948ல் அவர் எழுதியிருக்கிறார். தன் மகனுக்கு காந்தி மீதிருந்த அன்பால்தான் மோகன் என்ற பெயரையே வைத்தவர் சுப்பராயன்.
சுப்பராயனுக்கு தன் மகன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக இருக்கிறாரே என்கிற கவலை. என்ன செய்யலாம் எனக்கேட்டு ஒரு முறை காந்திக்கு கடிதம் எழுதினார். காந்தியும் அவருக்கு , வளர்ந்த புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்ட மகன் எனில் , அவர்களை நண்பன் போல நடத்தவேண்டும் என பதில் எழுதினார். இந்த அறிவுரைக்குப் பின்னர் தன் பிள்ளைகளிடம் நட்பு பாவத்துடன் நடக்க ஆரம்பித்ததாக சுப்பராயன் எழுதியுள்ளார். அவர் எழுதிய வரிகள்
“ My youngest son bears Bapu’s name, and I gave it to him out of affection and regard for Bapu. So when he turned Communist and I felt distressed, I wrote to Bapu as what could be done. He wrote back and said that I must remember Vyasa’s saying ‘ when son gets to an understanding age, he should be regarded as a friend and not to be dictated’. I thought it was the best advice, and have carried it out in my dealings with all my children, as it is best not to meddle in their affairs, specially when they are of an age to judge for themselves what is good”
காந்தி வழியாக சுப்பராயன் மூலம் வளர்ந்த பிள்ளைகளைக் கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் கிடைக்கிற பாடமிது எனக்கொள்ளலாம்.
மோகன் குமாரமங்கலம் இங்கிலாந்திருந்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தலைமறைவு வாழ்க்கை அனுபவித்து, சதி வழக்கிற்கும் உள்ளானார். அப்போதும் சுப்பராயன் காந்திக்கு கடிதம் எழுதினார். வழக்கின் முழு விவரத்தையும் அனுப்பு, பார்த்து விட்டு தெரிவிக்கிறேன் என்று. சுப்பராயன் அனுப்பினார். ஒரே வாரத்தில் காந்தியும் பதிலை அனுப்பினார். மோகன் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்கு மூல அறிக்கை மிக தைரியமான மகனின் அறிக்கை. மோகனின் இசம் என்பதில் எனக்கு ஏற்பில்லை. ஆனால் அவனது வழியில் அவனை நாட்டிற்கு சேவையாற்ற விடவேண்டும் என்பதாக காந்தி பதில் அமைந்தது.
“ ..it was the statement of a brave son of India, and even though not agreed with the ideology, the boy must be allowed to serve the country in his own way.”
1940 ராம்கர் காங்கிரஸ் அமர்வு சமயத்தில் மோகனை சுப்பராயன் காந்தியைப் பார்க்க அழைத்து சென்றார். இருவரையும் சிறிது நேரம் விவாதிக்க விட்டார். பின்னர் சென்று காந்தியை பார்த்தபோது , காந்தி தெரிவித்தது
I have had long talk with Mohan, but I do not think I have converted him. We must not force our opinions on the young, but should go on trying to see whether we can get them to our way of thinking by affection and not by dictation.
பல நேரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி காந்திக்கு அனுப்பக்கூடிய செய்திகளை மோகன் கொண்டு போய் சேர்த்தார் என்பதையும் சுப்பராயன் சொல்கிறார். 1945 ல் அப்படி ஒரு முறை மோகன் பார்த்தப் பின்னர் , காந்தி சுப்பராயனுக்கு தந்த செய்தியில்
“ Mohan came to see me. I did not try to convert him, but made him perceive my affection for him”
சுப்பராயனின் இந்த நினைவுகளை பேசும் கட்டுரை இரண்டு பக்கங்கள் அளவு கூட இல்லை. ஆனால் வாழ்விற்கான பெரும் செய்தியை அது தாங்கியுள்ளது

No comments:

Post a Comment