தோழர் காந்தி மகாத்மாவின் சோசலிச உரையாடல் புத்தகத்திற்கு நான்கு தோழர்களின் திறனாய்வுகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. தோழர்கள் ரகுபதி, பால்சாமி, கணேசன், பீட்டர் ஆகிய தோழர்கள் புத்தகத்தை பொருட்படுத்தி உள்வாங்கி தங்கள் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளனர். தோழர் கணேசன் திறனாய்வு காந்தி கல்வி நிலையம் சார்பில் புதன் உரையாக அமைந்தது. மற்ற மூவரும் கொடுத்த எழுத்து வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு தோழர்களுக்கும்- காந்தி கல்வி நிலையம் திரு அண்ணாமலை, மோகன், சரவணன் உள்ளிட்டோருக்கும், அறம் சாவித்ரி கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றி. திருச்சி தோழர் பால்சாமி அவர்களின் திறனாய்வு அன்புள்ள பட்டாபி வணக்கம். இப்போதுதான் தோழர்காந்தி படித்து நிறைவுசெய்தேன். தோழமைமிக்க வாழ்த்துக்கள் பாராட்டுகள். எனக்குதெரிந்து காந்தியத்தை தன்கட்சிக்காரர் ஆக்கி வழக்காடத்துணிந்த முதல்சிகப்புஅங்கி வக்கீல் நீங்கதான். காந்திக்கு பல எதிர் தரப்பு உண்டு. தலித் முஸ்லீம் இந்துத்வா கம்யூனிஸ்ட் இதில் எந்த தரப்பினராவது காந்தி உயிரோடிருந்தபோது காம்ரேட்காந்தி என அழைத்திருக்கிறார்களா ...