Varna Jati Caste இந்தியாவில் சாதி அமைப்பு முறை குறித்து ஏராள ஆய்வுகள் கிடைக்கின்றன . மேற்கு ஆய்வாளர்கள் , இந்திய சமூகவியலாளர்கள் , மார்க்சியர்கள் , சோசலிஸ்ட்கள் , அம்பேத்கர் , வரலாற்றாய்வாளர்கள் என ஆய்வுலகம் விரிந்த ஒன்றாகவே இருக்கிறது . இந்த ஆய்வுகளில் ஒன்றை குறிப்பிட்டு அது தான் துல்லியமானது என சொல்லிவிடமுடியுமா என எனக்கு தோன்றவில்லை . பெரும்பாலும் சில தரவுகளைக்கொண்டு , சில பண்டைய நூல்களை சாட்சியாகக்கொண்டு , அந்த அந்த ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் ஊகங்களாக உத்தேச முன்வைப்புகளாக , இப்படி வந்திருக்கலாம் எனச் சொல்லக்கூடியதாக அவை அமைந்திருக்கின்றன . அவர்கள் கருதும் உண்மைகள் என்ற முன்வைப்புகள் இருக்கவே செய்யும் . அவர்களின் perception சார்ந்த தீர்ப்புரையாகவும் , அரசியலுக்கு தோதான சமூக இழுப்புரைகளாகவும் அவை அமைந்துள்ளன . இந்த தரப்பில் சில வலது ஆய்வாளர்களும் வரத்துவங்கியுள்ளனர் . பழம் பெருமையை குறையேதும் இல்லாமல் உயர்த்திக்காட்டி , எல்லாம் காரண காரியங்களின் ஏற்பாடாக நிறுவி , இன்றைய அரசியலுக்கு துணைநிற்கும் ஆய்வு