Skip to main content

பெரியவர்கள் முரண்கள்

 

பெரியவர்கள் முரண்கள்

அரசியல் உலகில்  , சமய உலகில் கூட  ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், எல்லா தருணங்களிலும் ஒரே மாதிரியான கருத்தையே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்  என பொதுவாக பார்க்கமுடிவதில்லை. காந்தி பல தருணங்களில் முன் பேசியதை விட்டு மாற்றி பேசியிருப்பார். இந்த முரண் குறித்து பேசும்போது, அந்த அந்த கணத்தில் உண்மையென தான் உணர்வதை சொல்லவேண்டியிருப்பதை அவர் விளக்கியிருப்பார். இறுதியாக சொன்னதை தனது கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள் என்பார்.

ராஜாஜி கூட இந்தியை திணித்தார் என்ற பெயரைப்பெற்று போராட்டங்களை சந்தித்தவர்தான். பிற்காலத்தில் இந்தி திணிப்பு கூடாது என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தலானார்.

பெரியார் அவர்கள் இந்தி திணிப்பு எதிர்த்து கடுமையாக போராடியவர் என்கிற அம்சம் அனைவருக்கும்  தெரியும். ஆனால் அவரும் சாவி அவர்களுக்கு கொடுத்த பேட்டியில் சற்று மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தார். ஹிந்தியால் கெடுதல் இல்லை என அவர் பேசியதைக் காண்கிறோம்.

திமுக பிரிந்து அது வளர்ந்த 1960 களில்,  காங்கிரஸ் எதிர்ப்பில் ராஜாஜி திமுக உறவு மலர்ந்து விரிந்தது.

“ மக்களுக்கு தேவைப்படுகிற காலம் வரையில், ஆங்கிலம் மாற்று மொழியாக எவ்வளவு காலத்துக்கு என்பது ஹிந்தி பேசாத மக்களிடத்தில் விடப்படவேண்டும்” என்கிற நேருவின் உறுதிமொழி நிலைக்குமா என்ற சந்தேக நிலையில் திமுக போராட்ட அறிவிப்பை செய்தது.

தோழர்  கேடிகே தங்கமணி அப்போது எம் பி.  ஈ வெ கி சம்பத் அவர்களும் எம் பி.  நேரு சம்பத்தை சந்திக்க வர வேண்டுகிறார். சம்பத் தயங்கினார். தங்கமணி அவரை நேருவிடம் அழைத்துச் சென்றார். சம்பத் கடிதத்திற்கு, நேரு உடன் பதில் தந்தால், அதை எடுத்துப்போய், திமுக போராட்டத்தை கைவிட வைக்கலாம் என சம்பத் ஏற்கிறார். நேருவும் சந்தேகம் தேவையில்லை என்கிற நம்பிக்கையை எழுதி தந்தார். உடன் விமான பயணம் மூலம், சென்னை வந்து சம்பத் அண்ணாவிடம் எடுத்துச் சொல்லி போராட்டம்  கைவிடப்படுகிறது.

உள்துறை  அமைச்சர் சாஸ்திரி அவர்கள் 1965 ஜனவரி 26 ல் ஹிந்தி ஆட்சிமொழியாகும்  என்று 1963ல் கொடுத்த அறிவிப்பால், அரசியல் சட்டம் கொளுத்துவோம் என திமுக 1963 இறுதியில் அறிவித்தனர்.

பெரியார் 1952ல் கூட ஹிந்தி எழுத்துக்களை அழிப்போம் என்ற போராட்டத்தைத்தான் மேற்கொண்டவர்.  ஆனால் 1960 களில் அவர் வேறுவகையில் பேசலானார்.

2-6-1963ல் “ இந்தியா யூனியனாக இருக்கும்வரை ஹிந்தியை அசைக்க முடியாது. நாம் ஒண்டிக்குடி. அசைக்க வேண்டுமெனில் பலாத்காரத்தில் இறங்கவேண்டும். அவ்வளவு தூரம் போக இப்போது அவசியமில்லை. ஆகவே ஹிந்தியைப் பற்றி பேசுவது வீண் என்று முடிவு செய்து விட்டேன் “ என்றார்

1965 போராட்ட காலத்தில் அவர் பேசியது

“ ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற காலித்தனம்..தமிழ் நாட்டில் எங்கே ஹிந்தி இருக்கிறது - யார்  கட்டாயப்படுத்தினார்கள்…ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டு இருந்தால் , நாச வேலைகளும்,உயிர் சேதமும் உடைமைக் சேதமும் ஏற்பட்டிருக்காது..எதற்காக சட்டம் போலீஸ்..இது என்ன அரசாங்கம் வெங்காய அரசாங்கம் “

19-1-1965 ல் அவர் இவ்வாறு கடுமையாக சொன்னதைப் பார்க்கிறோம்

சுதந்திரா கட்சி, கண்ணீர்த் துளி கட்சி ஆகிய இரண்டையும் தடை செய்யுங்கள்..பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போடுங்கள்

11-4-1965 சாவிக்கு ஆனந்த விகடன் பேட்டியில் பெரியார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

“ இப்போது ஹிந்தி எங்கே இருக்கிறது..சொல்லுங்கள்

எங்கே ஹிந்தி ஆட்சி மொழியாக வந்துவிட்டது..உங்களுக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமானால் ஓர் ஆட்சி மொழி வேண்டியது தானே..ஹிந்திக்காரன் உங்களைப் போல ஆங்கிலத்தை நினைக்கவில்லையே..தமிழ் நாட்டுக்காரன் சொல்றபடி நடக்குமா? அது மக்களாட்சியா?

ஹிந்தி வந்தால் நீ இரண்டாந்தரக் குடிமகன் ஆகிவிடுவேன் என்று சொன்னால் , ஹிந்திக்காரன் ஆங்கிலம் வந்தால் மூன்றாந்தரக் குடிமகன் ஆகிவிடுவேன் என்று சொல்வான்..”

காந்தியின் எழுத்துக்கள் முழுமையாக, மறைக்கப்படாமல் எந்த வடிகட்டலும் இல்லாமல் கிடைப்பது போல, மக்களிடம் பெரும் அரசியல் செல்வாக்கு செலுத்தக்கூடியவர் எழுத்துக்கள் அனைத்தும் வெளிப்படையாக  - அது இந்திய கம்யூனிஸ்ட் இயக்க எழுத்தானாலும்- திராவிட இயக்க எழுத்தானாலும்- அம்பேத்கரிய எழுத்தானாலும்- வலதுகளின் எழுத்தானாலும்- லிபரல் மற்றும் சோசலிஸ்ட்களின் எழுத்தானாலும் அனைத்தும் - இந்திய அரசியல் குறித்த மேம்பட்ட புரிதலுக்காக கிடங்காக கொட்டி வைக்கப்பட வேண்டும்.

எவர் குறித்தும்  முரண் இல்லா uni dimensional understanding என்பது சரிதானா என்ற கேள்விக்கான நியாயம் , அவர்கள் எழுத்தில் மறைப்புகள் தராத publications or e publications மூலம்தான் சாத்தியமாகும். இதிலாவது மக்களுக்கு நியாயம் செய்திட சம்பந்தபட்ட இயக்கங்கள் கருணை காட்ட வேண்டும்…இந்த நேரத்தில் இது குறித்து இந்த சூழலில் இப்படியான நிலைப்பாடு என்கிற வரலாற்றுணர்வு உருவாக்கிட அரசியல் வழி செய்ய வேண்டும் என்பது விழைவு..

Comments

Popular posts from this blog

German Ideology ஜெர்மன் சித்தாந்தம்

German Ideology   ஜெர்மன் சித்தாந்தம்   மார்க்ஸ் - எங்கெல்ஸ்                               குறிப்பு சிதறல்கள் -     ஆர். பட்டாபிராமன் German Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ் - எங்கெல்ஸால் 1846 ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி . அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது . 1932 ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார் . மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12   1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1 ல்   சேர்க்க்ப்பட்டு வெளியானது . தமிழ் பதிப்பில் 1924 ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .   இளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி . பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும் . ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன் .   ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு  

பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்

         பாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்           (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்)                                 -ஆர்.பட்டாபிராமன் பாபா சாகேப் தான் மணமுடிக்க இருந்த டாக்டர் சாரதா கபீருக்கு ஒரு முறை எழுதிய கடிதத்தில் ”எனது கடந்த காலத்தை குறித்து ஏதும் அக்கரையற்று இருக்கிறாய். மராத்தி பத்திரிகைகளில் அவை விரவி கிடக்கின்றன “ என குறிப்பிட்டிருந்தார். அவருடைய அன்றாட வாழ்க்கை குறித்த செய்திகள் மிகக்குறைவாகவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கி இருந்தவர்களின் செய்திகளாகவும், பதிவுகளாகவும் அவை கிடைக்கின்றன. அவரது பேச்சும் எழுத்தும் தொகுதிகளுக்கு ஏற்பட்ட கவனம் அவரின் ஆளுமை உருவாக்கம் என்பதில் காணப்படவில்லை. பாபா சாகேப் வீட்டிற்கு சென்று துணை நின்ற நெருங்கிய உதவியாளர்களாக நானக் சந்த் ரட்டு, தேவி தயாள், சங்கரானந்த் சாஸ்திரி, பகவான்தாஸ், நாம்தியோ நிம்கடே ஆகியோரை குறிப்பிடலாம்.   அவர்களைப் போன்ற நெருங்கி நின்றவர்களில் பலரின் பதிவிலிருந்து சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பாபாசாகேப் வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோத

Kindle New Book

ஹெகல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஐந்து கட்டுரைகள்                                                                                   முன்னுரை மார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று .  அவரின் வளர்ச்சி , மகிழ்ச்சி , துன்பம் , போராட்டங்கள் , குடும்பத்தார்கள் - உறவுகளை பேணுதல் , அவரின் attitude, பெருமை - குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை. மார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன். மார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு