https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Tuesday, October 10, 2023

சமூக ஒழுங்காற்றில் அரசியல் அமைப்பு சட்டம்

 

சமூக ஒழுங்காற்றில் அரசியல் அமைப்பு சட்டம்

விடுதலை அடைந்த இந்தியா தன் சமூகத்தை ஒழுங்காற்றிக்கொள்ள தனது பழைய மூட்டைகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு, அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை இயற்றி அதன் வழியில் நடக்க முயற்சிக்கலானது.

இந்தியா தான் சுமந்து வந்த ஆயிரமாயிரம் காலத்து அம்சங்களையெல்லாம் ஓரளவு விவாதித்து , அன்று காணப்பட்ட உலகின் ராஜ்ய ஆள்வினைக்கான கோட்பாடுகளை உள்வாங்கி, பிரிட்டிஷ் வைத்திருந்த 1935 சட்ட அம்சங்களையும் கணக்கில்கொண்டு, அரசியல் அமைப்பு அசெம்பிளியில் விவாதித்து, டிராப்டிங் குழு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் விளக்கங்களைப் பெற்று தனக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி , குடியரசும் ஆனது. தன் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை மட்டுமல்லாது ( citizen rights)  மக்களுக்கான உரிமை people’s rights என்பதையும் வரையறுத்துக்கொண்டது.

சரித்திரம் குறித்த ஆயிரம் முரண்பட்ட வரையறுப்புகள் இருந்தாலும், அதன் பெருமை பிரஸ்தாபங்கள் இருந்தாலும், இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை அரசமைப்புப்படி இந்த சரித்திர அளப்புகள் மாற்றமுடியாது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான கஜினி பாபர் வாரிசுகள் என்றோ- வெளிக்காரர் என்றோ, கைபர் கணவாய் வந்த நாடோடிகள் வெளிக்காரர் என்றோ - ஆரியர் திராவிடர் பேசும் சரித்திர அம்சங்களைக்கொண்டோ, மத பெருமைகளைக்கொண்டோ இங்கு இந்திய குடிமகனின் பிறப்பு  பதிவிடப்படுவதில்லை. அவரது உரிமைகளும், கடமைகளும் அரசியல் அமைப்பு சட்டத்தின் பாற்பட்டவை என்பது இந்நாள்வரை , நீதிமன்றம் போயாவது காத்துக்கொள்ளும்படிதான் இருக்கிறது.

அதேபோல் சமயம் சார்ந்த அல்லது மனு நீதி புருஷ சூக்தம்- வேத உபநிட - புராண வழி பெருமிதங்கள் - அல்லது பேசப்படும் இழிவுகள் சார்ந்தோ - அல்லது குரான், பைபிள் போன்றவை சார்ந்தோ இன்றைய இந்திய குடிமகனுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. மருத்துவ வசதியற்ற பகுதிகள் தவிர , பெரும்பாலோர் மருத்துவ மனையில் தான் பிறக்கின்றனர்.பிறப்பு குறித்து பேசும் வேறு அபத்தங்கள் எல்லாம் ஒதுக்கப்ப்டவேண்டியவையே.   இன்றைய இந்தியாவில் ஒருவரது உரிமைகளும் கடமைகளும் அரசியல் அமைப்பு சட்டத்தின்பாற்பட்டவை என்பது இந்நாள்வரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் புனித புத்தகம் இல்லையென்றாலும், அரசியல் பொருளாதாரம் சமூக அசைவுகளுக்கான அடிப்படையாக இருக்கிறது. அதன் செல்லத்தக்க தன்மை மட்டுமே நீதிமன்றத்தின் உச்ச பேசுபொருளாகவும் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய, ஒவ்வொரு வீட்டிற்கும் அவரவர் தாய்மொழியில் தரப்பட்டிருக்கவேண்டிய ஆவணமது. தெருதோறும் அது குறித்த விழிப்புணர்வு சென்றிருக்க வேண்டும்.  அதன் ஷ்ரத்துகள் எல்லாம் பல்வேறு மொழிகளில் இசைவடிவம் பெற்று popularise ஆகியிருக்கவேண்டும். அடிப்படை உரிமைகளும் கடமைகளும் வாழ்வியல் போக்கினூடாக உணரப்பட்டிருக்கவேண்டும்.

அரசியலில் வேட்பாளராக நிற்கப்போகிறவர்களுக்கு இருக்கும் தகுதிகளில் ஒன்றாக அவர் அரசியல் அமைப்பு சட்டம் குறித்த பயிற்சி வகுப்புகள் - இத்தனை நாட்கள் என்ற வரையறை கூட இருந்திருக்கவேண்டும்.

None is low none is high என அடிக்கடி காந்தி பேசிய உணர்வின் வெளிப்பாட்டை, Equality  before law என்கிற உணர்வை , அம்பேத்கர் வற்புறுத்தி பேசிய fraternity என்கிற உணர்வை - அகில் பில்கிராமி போன்றவர் பேசிவருகிற  liberty- equality- fraternity இடையிலான டென்ஷனை இணைக்கப்படுத்தவேண்டிய அவசியத்தை நமது constitutional spirit- constitutional morality மூலம் சரிபடுத்திக்கொள்ளவேண்டிய தேவை அதிகமாக உணரப்படவேண்டிய நிலையில் அரசியல் திசை கொண்டிருக்கிறது.

இதை வெறும் constitutionalist தன்மை என்று சுருக்கி புரிந்துகொள்ளவேண்டாம். பல்வேறு இழுவைகளால் வரலாறும்,  கம்யூனிட்டி பெருமிதங்களும்- இழிவுகளும், மத சாதி சுய அபிமானங்களும் இன்றும் நிலவும் சமூகம் ஒன்றில் - குறைந்தபட்ச ஏற்பின் இடமாக அனைவருக்கும் இன்றுவரை இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டமாகவே உள்ளது.

அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் தங்கள் மொழியை அரசியல் அமைப்பு சட்ட மொழிகிடங்கிலிருந்து நிரப்பிக்கொள்ளவேண்டிய தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்சி அல்லது ஒரு தலைவர் அல்லது ஓர் இயக்கம் அதன் ideology என்பதெல்லாம் நம்மை tired ஆகியிருக்கலாம் - போதுமப்பா இனி தாங்காது என்கிற உணர்வை உருவாக்கியிருக்கலாம்.  அதேபோல் ஏதோ ஒரு சமயத்தின் மொழி அல்லது சமயங்களின் மொழிகள் ,  ஒரு சாதியின் மொழி அல்லது சாதிகளின் மொழிகள் நம்மை tired ஆக்கியிருக்கலாம்.

ஆனால் அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு திருத்தங்களை கண்டபோதும், இன்னும் நம்மை tired ஆக்கவில்லை. இங்கு நம்மில் நுழைந்த பல்வேறு அடையாளங்கள் போல் அது இன்னும் பொது அடையாளமாக, awareness ஆக , பொது புத்தியில் போய் உட்காரவில்லை.

The Meaning of equality என்கிற லோகியா எழுதிய கட்டுரை ஒன்றை முன் எப்போதோ ஜனதா இதழில் படித்த நினைவு. Constitutional morality நிறைந்த அரசியல் நம்மிடம் நிரம்பி வழியும்போது,  பதட்டங்கள் குறைந்த , பரஸ்பர நம்பிக்கை கொண்ட, இணக்க சமூகத்தை நாம் உணரலாம் எனத்தோன்றுகிறது.

காந்தியை புறந்தள்ளுவது நமது morality மீது நாம் தொடுத்துக்கொள்ளும் தாக்குதலாகவே அமைந்து வருகிறது என்ற உணர்வு மரத்துப்போவது நல்லதல்ல.

No comments:

Post a Comment